search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இதுதான் சர்கார் படத்தின் கதையா? சமூக வலைதளங்களில் பரவும் கதை
    X

    இதுதான் சர்கார் படத்தின் கதையா? சமூக வலைதளங்களில் பரவும் கதை

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் கதை என்று சமூக வலைதளங்களில் கதை ஒன்று வைரலாகி வருகிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது.

    இதற்கிடையே இந்த படத்தின் கதைக்கு ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இது தனது கதை என்கிறார். இந்த நிலையில் இது தான் சர்கார் படத்தின் கதை என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் கதை வருமாறு,

    அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழிலதிபரான விஜய் பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். தமிழரான அவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வருகிறார். வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்ய முற்படும்போது அதிர்ச்சி. வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் அவரது ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது என்கின்றனர். தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக அவமானம் ஏற்படுகிறது. தேர்தல் முறைகேடுகளை பார்த்து கொதித்து அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோருடன் மோதுகிறார்.



    இதற்காக இளைஞர்களை திரட்டுகிறார். பணம் வாங்காமல் ஓட்டளிக்கும்படியும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பிரசாரம் செய்கிறார். பணம்கொடுத்து வாக்காளர்களை வளைக்க அரசியல்வாதிகள் கண்டெய்னர்களில் பணத்தை இறக்குகின்றனர். அதை தடுக்கும் விஜய்யை தீர்த்து கட்ட வில்லன்களை ஏவுகிறார்கள்.

    அதையெல்லாம் எதிர்கொண்டு நேர்மையாக தேர்தல் நடத்தி நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வைத்து நாட்டை எப்படி சீரமைக்கிறார் என்பது கதை என்கின்றனர். ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்று விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sarkar #Vijay

    Next Story
    ×