search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yashwant Sinha"

    இந்தியாவில் 1975-ல் பிரகடனம் செய்யப்பட்ட அவசரநிலையைவிட மோசமான நிலையில் தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவி வருவதாக யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார். #YashwantSinha #Emergencyin1975

    புதுடெல்லி:

    பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா ஒரு தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவில் 1975-ல் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சியைவிட மோசமான நிலையில் தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவி வருவதாக அவர் கூறினார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையைவிட மோசமான சூழ்நிலைதான் இப்போது நிலவுகிறது. 43 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட அவசரநிலை 2 ஆண்டுகளில் நீக்கப்பட்டது. இப்போதைய தலைமுறையினர் அதனை அனுபவித்து பார்த்தது கிடையாது. அவர்களுக்கு அது வரலாறு மட்டும்தான். அவசரநிலையை பிரகடனப்படுத்திய காரணத்திற்காக 1977-ல் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார் இந்திரா காந்தி. இப்போது இது வரலாற்றின் பகுதியாக மாறிவிட்டதால், அது குறித்து விவாதிக்க முடியாது.

    ஆனால், இப்போது பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் நிலவும் சூழல் அவசரநிலையை காட்டிலும் மோசமாக இருக்கிறது. வரலாற்றில் எப்போதோ நடந்த சம்பவத்தை பா.ஜ.க.வினர் சர்ச்சையாக்கி வருகிறார்கள். இது தேர்தலை குறிவைத்துதான். 1975 அவசரநிலையைப் போல், இப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்குள் வைக்கப்படவில்லை, இருப்பினும் மோசமான சூழ்நிலைதான் உள்ளது. மக்கள் மிகவும் பயத்தில் உள்ளார்கள். அவர்கள் பேசுவதற்கு கூட அச்சம் கொள்கிறார்கள். இதில் மத்திய அமைச்சர்களுக்கு கூட விதிவிலக்கு கிடையாது. இது இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட அவசரநிலையைவிட மோசமானதாக இருக்கிறது.
     
    இப்போது உள்ள பா.ஜ.க. அரசில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் நெருக்கடியை சந்திக்கிறார்கள், அவர்கள் பத்திரிக்கை நிறுவனம் மூலம் வெளியே அனுப்பப்படுகின்றனர். இன்று நிலையானது மிகவும் மோசம் அடைந்துள்ளது. மீடியாக்கள் முழுவதுமாக மக்களுக்குத் தவறானவற்றை சித்தரிக்கும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. முற்றிலும் அடிபணிய செய்யப்பட்டு அவர்கள் ஏற்படுத்திய கோட்டில் நிற்க செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் விமர்சனம் செய்துள்ளார். #YashwantSinha #Emergencyin1975
    இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார். #YashwantSinha #UndeclaredEmergency
    வாரணாசி:

    பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-



    இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அரசியலமைப்பை நகைச்சுவை ஆக்கிவிட்டனர்.

    அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உத்தரவிடுவார்கள். ஆனால், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள்.

    பண மதிப்பு நீக்க காலத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.58 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வங்கியின் இயக்குனராக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளார். எனவே, இவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணைக்கு யார் உத்தரவிடுவார்?

    நீதித்துறையில் எதுவும் சரியில்லை என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளர். எனவே, இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #YashwantSinha #UndeclaredEmergency
    பாரதிய ஜனதா கட்சி தற்போது 2 பேரின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை மறைமுகமாக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா கடுமையாக விமர்சித்துள்ளார். #BJP #YashwantSinha
    சண்டிகர்:

    வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்கா. சமீபத்தில் அதிருப்தி காரணமாக அவர் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாடு தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் அடித்தட்டு மக்களை நாங்கள் சந்தித்து பேசுகையில் அவர்கள் மத்தியில் சோர்வான சூழல் காணப்படுவதை தெரிந்து கொண்டோம். தேர்தலின் போது அளிக்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மதிப்பீடாகத்தான் இருக்கும். நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் என்ன நடைபெற்றது என்பதாக அந்த தேர்தல் இருக்காது.

    வாஜ்பாய், அத்வானி காலத்தில் இருந்த பா.ஜனதா தற்போது இல்லை. அவர்கள் தலைமையில் பா.ஜனதாவில் பணிபுரிவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்தது இல்லை. ஆனால் கடந்த 4 ஆண்டு காலத்தில் பா.ஜனதாவில் உள்கட்சி ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்துவிட்டது.


    பா.ஜனதா கட்சி தற்போது 2 பேரின் கைப்பாவையாக மாறிவிட்டது. இதே 2 பேரின் கைப்பாவையாக மத்திய அரசும் மாறிவிட்டது. கடந்த 1993-ம் ஆண்டு பா.ஜனதாவில் நான் சேர்ந்த போது கட்சி இப்படி இல்லை. இது வாஜ்பாய், அத்வானி கட்சி அல்ல.
    இமாச்சல பிரதேசத்தில் கடந்த 1982-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு 29 இடங்கள் கிடைத்தன. பா.ஜனதாவுக்கு சுயேச்சைகள் 6 பேர் ஆதரவு அளித்தனர். ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கையே போதும். அந்த தேர்தலில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால் ஆட்சி அமைக்க நாம் உரிமை கோர வேண்டாம் என்று பா.ஜனதா மாநில தலைமையை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.

    ஆனால் கர்நாடகாவில் தற்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் வாஜ்பாய், அத்வானி காலத்தில் இருந்த பா.ஜனதா தற்போது இல்லை என்று கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    2 பேரின் கைப்பாவை என்று யஷ்வந்த் சின்கா கூறி மோடியையும், அமித்ஷாவையும் மறைமுகமாக தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #BJP #YashwantSinha #Modi #AmitShah
    ×