search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Soccer"

    • மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
    • ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.

    தோகா:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    போர்ச்சுக்கல் அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவையும், 2-0 என்ற கணக்கில் உருகுவேயையும் தோற்கடித்து இருந்தது. தென் கொரியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    போர்ச்சுக்கல் 12 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான 2-வது சுற்றில் அந்த வீரர்கள் அபாரமாக ஆடினார்கள்.ரொனால்டோ இடத்தில் இடம் பெற்ற ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். புருனோ பெர்னாண்டஸ், பெப்பே , ரபெல் லியோ போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    மொராக்கோ முதல் முறையாக உலக கோப்பை அரைஇறுதிக்கு நுழைந்து புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.

    மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. லீக் சுற்றில் பெல்ஜியம்(2-0), கனடா (2-1 ) அணிகளை வீழ்த்தி இருந்தது. குரோஷியாவுடன் கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தது. 2-வது ரவுண்டில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.

    போர்ச்சுக்கல் அணிக்கு எல்லா வகையிலும் மொரோக்கோ சவால் கொடுக்கும். இதனால் போட்டி பரபரப்பாக இருக்கும்.

    இரு அணிகள் 2 முறை முறை மோதியுள்ளன. இதில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

    அல்கோரில் உள்ள அல்பயத் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி கால் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும்.

    பிரான்ஸ் 7-வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (4-1), டென்மார்க்கை ( 2-1 ) வீழ்த்தி இருந்தது. துனிசியாவிடம் (0-1) தோற்றது. 2-வது சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை தோற்கடித்தது.

    பிரான்ஸ் அணியில் எம்பாப்வே (5 கோல்), ஆலிவர் ஜிரவுட் ( 3 கோல்) , ரேபியாட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி 4-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஈரான் ( 6-2 ) , வேல்சை (3-0) வீழ்த்தியது. அமெரிக்காவுடன் (0-0 ) டிரா செய்தது. 2-வது சுற்றில் செனகலை 3-0 என்ற கணக்கில் வென்றது.

    இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரிகேன் , ராஷ்போர்ட், ஷகா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய போட்டிகளில் பிரான்ஸ் 9-ல், இங்கிலாந்து 17-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் 'டிரா' ஆனது.

    • பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார்.
    • சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    தோகா:

    பிரேசில் கால்பந்து அணியின் புயல்வேக வீரர் 22 வயதான வினிசியஸ் ஜூனியர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென பூனை ஒன்று துள்ளி குதித்து டேபிள் மீது பவ்வியமாக அமர்ந்து கொண்டது.

    பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார். சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    இந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    • ஜப்பான் அணி முதல் முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த குரோஷியா தோல்வி அடையவில்லை.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் "இ" பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஜப்பான்-"எப் " பிரிவில் 2-வது இடத்தை பிடித்த குரோஷியா அணிகள் மோதுகின்றன. அல்வக்ராவில் உள்ள அல் ஜனோபா ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

    ஜப்பான் அணி முதல் முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி 3 தடவை 2-வது சுற்றில் தோற்று இருந்தது. ஜப்பான் லீக் சுற்றில் ஜெர்மனி (2-1), ஸ்பெயின் (2-1) ஆகிய வற்றை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதனால் நம்பிக்கையுடன் ஆடும். கோஸ்டாரிகாவிடம் (0-1) மட்டும் தோற்றது.

    கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த குரோஷியா தோல்வி அடையவில்லை. கனடாவை (4-1 ) வென்றது. மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. இரு அணிகளும் மோதிய போட்டிகளில் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

    நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்டேடியம் 974-ல் நடைபெறும் போட்டியில் 'ஜி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த பிரேசில்-'எச்' பிரிவில் -வது இடத்தை பிடித்த தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    5 முறை சாம்பியனான பிரேசில் அணி ஆசிய கண்டத்தில் உள்ள தென்கொரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி 'லீக்' ஆட்டத்தில் கேமரூனி டம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது.

    தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான பிரேசில் அணி 'லீக்' சுற்றின் மற்ற ஆட்டங்களில் செர்பியா (2-0) சுவிட்சர்லாந்து (1-0) ஆகியவற்றை தோற்கடித்தது.

    தென்கொரியா அணி எல்லா வகையிலும் பிரேசிலுக்கு சவாலாக திகழும். அந்த அணி போர்ச்சுக்கலை 2-1 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. கானாவிடம் 2-3 என்ற கணக்கில் தோற்றது. உருகுவேயுடன் தோல்வி எதுவுமின்றி 'டிரா' செய்தது.

    இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரேசில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென்கொரியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. தென்கொரியாவுக்கு எதிராக பிரேசில் 16 கோல்கள் போட்டுள்ளன. 5 கோல்கள் வாங்கியுள்ளன.

    • ஆஸ்திரேலிய அணி பிரான்சிடம் மட்டுமே தோற்றது. துனிசியா, டென்மார்க்கை வீழ்த்தி இருந்தது.
    • அமெரிக்க அணியும் தோல்வி அடையவில்லை. இங்கிலாந்து, வேல்சுடன் டிரா செய்தது. ஈரானை வீழ்த்தியது.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    நேற்றுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டி னா, போலந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி , கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா, கேமரூன், செர்பியா, உருகுவே, கானா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    'நாக் அவுட்' ரவுண்டான 2-வது சுற்று இன்று தொடங்குகிறது. 2 ஆட்டங்கள் இன்று நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து-'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நெதர்லாந்து அணி 'லீக்' சுற்றில் தோல்வி அடையவில்லை செனகல் (2-0), கத்தார் (2-0) அணிகளை தோற்கடித்தது. ஈக்வடாருடன் (1-1) டிரா செய்தது. அந்த அணி அமெரிக்காவை வீழ்த்தி கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    அமெரிக்க அணியும் தோல்வி அடையவில்லை. இங்கிலாந்து, வேல்சுடன் டிரா செய்தது. ஈரானை வீழ்த்தியது. இதனால் நெதர்லாந்து அணிக்கு அமெரிக்கா கடும் சவால் கொடுக்கலாம்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் 'சி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா-'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணி சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. பின்னர் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    ஆஸ்திரேலிய அணி பிரான்சிடம் மட்டுமே தோற்றது. துனிசியா, டென்மார்க்கை வீழ்த்தி இருந்தது.

    • வெற்றி பெற்றால் தான் 2-வது சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
    • இதே பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதுகின்றன.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியா விடம் 1-2 ( 'சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    2-வது போட்டியில் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3- வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை இன்று எதிர்கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. வெற்றி பெற்றால் தான் 2-வது சுற்றுக்கு தகுதி பெற முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அர்ஜென்டினா வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும். அந்த அணி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    4 புள்ளிகளுடன் இருக்கும் போலந்து டிரா செய்தாலே தகுதி பெற்றுவிடும். இரு அணிகளும் உலக கோப்பையில் 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

    இதே பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதுகின்றன.

    இதில் வெற்றி பெற்றால் சவுதி அரேபியா 2-வது சுற்றுக்கு நுழையும். அந்த அணி அர்ஜென்டினாவை வென்றது. போலந்திடம் தோற்றது.

    மெக்சிகோ அணி போலந்திடம் டிரா செய்தது. அர்ஜென்டினாவிடம் தோற்றது. 2-வது சுற்று வாய்ப்பை பெற கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். டிரா செய்தாலோ, தோற்றாலோ வெளியேறிவிடும்.

    குரூப் 'டி' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்- துனிசியா ஆஸ்திரேலியா- டென்மார்க் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன.

    பிரான்ஸ் 2 வெற்றியுடன் ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 1 டிரா, 1 தோல்வியுடன் இருக்கும் துனிசியா வெற்றி நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணி பிரான்சை வெல்வது சவாலானது.

    ஆஸ்திரேலியா-டென்மார்க் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முன்னேற்றம் அடையும். இதனால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.

    • அமெரிக்க அணியை நெதர்லாந்து சந்திக்கிறது.
    • இங்கிலாந்து 2-வது சுற்றில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை 7 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ் ('டி' பிரிவு), பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்), நெதர்லாந்து, செனகல் (ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி) ஆகியவை முன்னேறி உள்ளன.

    'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து அணி 2-வது சுற்றில் 'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்காவுடன் மோதுகிறது. வருகிற 3-ந்தேதி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    'பி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்து 2-வது சுற்றில் 'ஏ' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது. 4-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    • ஈரான்-அமெரிக்கா இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
    • வேல்சை வீழ்த்தி இருந்ததால் ஈரான் நம்பிக்கையுடன் ஆடும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4 அணிகளும் நேற்றுடன் 2 ஆட்டங்களில் மோதி விட்டன. இன்று முதல் 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன.

    ஏ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டங்களில் ஈக்வடார்-செனகல், நெதர்லாந்து- கத்தார் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் கத்தார் 2 தோல்வியுடன் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    நெதர்லாந்து, ஈக்வடார் அணிகள் 1 வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளன. இரு அணிகளும் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தாலே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். சென கலை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தான் வாய்ப்பை பெற இயலும். அந்த அணி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது.

    குரூப்-பி பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து-வேல்ஸ், ஈரான்-அமெரிக்கா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    இங்கிலாந்து 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளியும், ஈரான் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளியும், அமெரிக்கா 2 டிராவுடன் 2 புள்ளியும், வேல்ஸ் 1 டிரா, ஒரு தோல்வியுடன் 1 புள்ளியும் பெற்றுள்ளன.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதிக கோல்கள் இருப்பதால் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது. அந்த அணி "ஏ" பிரிவில் முதல் இடத்தை பிடிக்க வேல்சை வீழ்த்த முயற்சிக்கும். வேல்சை பொறுத்தவரை கண்டிப்பாக வெல்ல வேண்டும். அந்த அணிக்கு வாய்ப்பு மிகவும் குறைவே.

    ஈரான்-அமெரிக்கா இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். வேல்சை வீழ்த்தி இருந்ததால் ஈரான் நம்பிக்கையுடன் ஆடும். அந்த அணி முதல் முறையாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    • தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.
    • தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 'ஜி' பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கேமரூன்-செர்பியா ( மாலை 3.30 ), பிரேசில்-சுவிட்சர்லாந்து (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    கேமரூன் தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடமும், செர்பியா 0-2 என்ற கணக்கில் பிரேசிலிடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரேசில் , சுவிட்சர்லாந்து அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.

    5 முறை சாம்பியனான அந்த அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக ஆடவில்லை. ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து தர வரிசையில் 15-வது இடத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய ஆட்டங்களில் பிரேசில் 3-ல் சுவிட்சர்லாந்து 2-ல் வெற்றி பெற்று உள்ளன.

    குரூப் 'எச்' பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் தென் கொரியா- கானா (மாலை 6.30), போர்ச்சுக்கல்-உருகுவே (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. கானா அணி 2-3 என்ற கணக்கில் போர்ச்சுக்கலிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும்.

    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கொண்ட போர்ச்சுக்கல் அணி முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. உருகுவே அணி பலம் வாய்ந்த போர்ச்சுகலை தோற்கடித்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • அர்ஜென்டினா இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
    • உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    லுசாயில்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ('சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-வது போட்டியில் மெக்சிகோவை இன்று எதிர் கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாயில் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினாவுக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    மெஸ்சிக்கு மிகவும் கடினமான சோதனயாகும். உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மெக்சிகோ முதல் ஆட்டத்தில் போலந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    இரு அணிகளும் 35 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 16-ல், மெக்சிகோ 5-ல் வெற்றி பெற்றன. 14 போட்டி டிரா ஆனது.

    இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் போலந்து-சவுதி அரேபியா அணிகள் (மாலை 6.30) மோதுகின்றன.

    சவுதி அரேபியா முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி இன்றும் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை பெறும். போலந்து முதல் ஆட்டத்தில் டிரா செய்ததால் சவுதி அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

    குரூப்-டி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் துனிசியா-ஆஸ்திரேலியா (மாலை 3.30), பிரான்ஸ்-டென்மார்க் (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    துனிசியா முதல் போட்டியில் கோல் எதுவுமின்றி டென்மார்க்குடன் டிரா செய்தது. ஆஸ்திரேலியா 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி டென்மார்க்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டென்மார்க் முதல் வெற்றி வேட்கையில் உள்ளது.

    • எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை.
    • காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மர் காயம் அடைந்தார். 79-வது நிமிடத்தில் நெய்மர் பந்தை கடத்தி சென்ற போது எதிரணி வீரர் பறிக்க முயன்றார். அப்போது கால் இடறி நெய்மர் கீழே விழுந்தார். இதில் கணுக்காலில் ஏற்பட்ட வலியால் அவர் துடித்தார்.

    உடனே அணியின் மருத்துவர் களத்துக்குள் வந்து நெய்மரை பரிசோதித்தார். பின்னர் நெய்மர் போட்டியில் இருந்து வெளியேறினார். மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது கண்கள் கலங்கி இருந்தன.

    காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறியதாவது:-

    நெய்மரின் காயத்தின் தன்மை குறித்து மதிப்பீட்டை பெற நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. நாளை (இன்று) காயம் குறித்து புதிய மதிப்பீட்டை பெறுவோம் என்றார். பயிற்சியாளர் டைட் கூறும் போது, நெய்மர் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்றார்.

    • ஈரான் அணி 2-6 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது.
    • வேல்ஸ் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் நேற்றுடன் ஒரு ஆட்டத்தில் மோதிவிட்டன. இன்று முதல் 2-வது போட்டியில் விளையாடுகின்றன.

    'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கத்தார்-செனகல் ( மாலை 6.30), நெதர்லாந்து-ஈக்வடார் ( இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    போட்டியை நடத்தும் கத்தார் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் ஈக்வடாரிடமும் , செனகல் 0-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப் போவது யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெதர்லாந்து , ஈக்வடார் அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்து தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் 44-வது வரிசையில் உள்ளது.

    இரு அணிகள் மோதிய ஒரேயொரு ஆட்டம் டிரா ஆனது.

    குரூப் 'பி' பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் வேல்ஸ்-ஈரான் (மாலை 3.30), இங்கிலாந்து-அமெரிக்கா (நள்ளிரவு 12.30 ) அணிகள் மோதுகின்றன.

    வேல்ஸ் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. ஈரான் அணி 2-6 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும்.

    இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஈரானை நசுக்கியதால் அமெரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அமெரிக்க அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது.
    • ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இதே போல நேற்று நடந்த போட்டியில் 4 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    ஜப்பானின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கலீபா சர்வதேச மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள். கோல் அடித்த போது மைதானத்தில் ஏராளமான பாட்டில்கள் வீசப்பட்டது.

    போட்டி முடிந்து வெளியே செல்லும் முன்பு ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    இதையொட்டி ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது. உங்கள் நாட்டின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன். ஜப்பான் ரசிகர்களின் இந்த செயல் மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி உள்ளது என்று டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.

    2018 உலக கோப்பையில் 2-வது சுற்றில் ஜப்பான் 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்றது. அப்போதும் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×