search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கால் இறுதியில் நுழைந்து ஜப்பான் புதிய சாதனை படைக்குமா? குரோஷியாவுடன் இன்று மோதல்
    X

    கால் இறுதியில் நுழைந்து ஜப்பான் புதிய சாதனை படைக்குமா? குரோஷியாவுடன் இன்று மோதல்

    • ஜப்பான் அணி முதல் முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த குரோஷியா தோல்வி அடையவில்லை.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் "இ" பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஜப்பான்-"எப் " பிரிவில் 2-வது இடத்தை பிடித்த குரோஷியா அணிகள் மோதுகின்றன. அல்வக்ராவில் உள்ள அல் ஜனோபா ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

    ஜப்பான் அணி முதல் முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி 3 தடவை 2-வது சுற்றில் தோற்று இருந்தது. ஜப்பான் லீக் சுற்றில் ஜெர்மனி (2-1), ஸ்பெயின் (2-1) ஆகிய வற்றை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதனால் நம்பிக்கையுடன் ஆடும். கோஸ்டாரிகாவிடம் (0-1) மட்டும் தோற்றது.

    கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த குரோஷியா தோல்வி அடையவில்லை. கனடாவை (4-1 ) வென்றது. மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. இரு அணிகளும் மோதிய போட்டிகளில் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

    நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்டேடியம் 974-ல் நடைபெறும் போட்டியில் 'ஜி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த பிரேசில்-'எச்' பிரிவில் -வது இடத்தை பிடித்த தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    5 முறை சாம்பியனான பிரேசில் அணி ஆசிய கண்டத்தில் உள்ள தென்கொரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி 'லீக்' ஆட்டத்தில் கேமரூனி டம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது.

    தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான பிரேசில் அணி 'லீக்' சுற்றின் மற்ற ஆட்டங்களில் செர்பியா (2-0) சுவிட்சர்லாந்து (1-0) ஆகியவற்றை தோற்கடித்தது.

    தென்கொரியா அணி எல்லா வகையிலும் பிரேசிலுக்கு சவாலாக திகழும். அந்த அணி போர்ச்சுக்கலை 2-1 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. கானாவிடம் 2-3 என்ற கணக்கில் தோற்றது. உருகுவேயுடன் தோல்வி எதுவுமின்றி 'டிரா' செய்தது.

    இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரேசில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென்கொரியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. தென்கொரியாவுக்கு எதிராக பிரேசில் 16 கோல்கள் போட்டுள்ளன. 5 கோல்கள் வாங்கியுள்ளன.

    Next Story
    ×