search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers strike"

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட நூல் 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக 17 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
    கருமத்தம்பட்டி:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சேலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது சேலை உற்பத்தியாளர்களிடம் இருந்து நூல், ஜரிகை, பாலியஸ்டர் நூல் போன்றவை வாங்கி கூலி அடிப்படையில், விசைத்தறி உரிமையாளர்கள் சேலை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சேலை உற்பத்தியாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலை உற்பத்தியை 15 நாட்களுக்கு நிறுத்த சேலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சோமனூர், கிட்டாம்பாளையம், பதுவம்பள்ளி, தொட்டியபாளையம், மாதப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சாமலாபுரம், கோம்பக்காடு, பள்ளப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் சேலை தயாரிப்பு விசைத்தறி கூடங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து சேலை உற்பத்தியாளர் ரவி என்பவர் கூறியதாவது:-

    நூல் விலை தற்போது 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். நூல் விலை அதிகரிப்பதால், சேலையின் உற்பத்தி விலையும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் நெசவு செய்யும் சேலையை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிவதில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட நூல் 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக 17 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. வார்ப்பு நூல் 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

    இதனால் சேலை விலை சராசரியாக ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை தினமும் ஏறுவதால் சமாளிக்க முடியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மெட்ரோ ரெயில் ஊழியர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது. #ChennaiMetroRail
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் விளக்கம் அளிக்கலாம் என்றும் துறை ரீதியாக கேட்கப்பட்டது.

    இதற்கு ஊழியர்கள் அளித்த விளக்கத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து 8 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் நிர்வாக இயக்குனரை சந்தித்து முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக இயக்குனரை சந்தித்து ஊழியர்கள் முறையிடவில்லை.

    இதற்கிடையே, மெட்ரோ ரெயில் நிர்வாக ஊழியர்கள் நேற்று கோயம்பேட்டில் உள்ள தலைமை நிர்வாக அலுவலகம் வந்தனர். அங்கு அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை மெட்ரோ ரெயில் நிர்வாக பெண் மேலாளர் ஒருவர் தடுத்தார். அப்போது ஊழியர்கள் அவரை தாக்கினர். இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது.

    தொழிலாளிகளின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் இன்று சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தின் 3-வது மாடியில் தொழிலாளர் நல ஆணையர் ஜானகிராமன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.

    இதில் சி.ஐ.டி.யூ மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்துகொண்டு ஊழியர் களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடந்த இடத்திலும், அலுவலகத்துக்கு வெளியிலும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்தனர்.



    இந்நிலையில், மெட்ரோ ரெயில் ஊழியர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதுதொடர்பாக, சிஐடியு மாநில செயலாளர் சவுந்தரராஜன் கூறுகையில், பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு இல்லை.

    8 ஊழியர்கள் மீதான பணிநீக்கத்தை திரும்பப் பெற மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே போராட்டம் தொடர்கிறது. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்தார்.

    காலை 11 மணி நேரத்துக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #ChennaiMetroRail  
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் பணியில் ஏராளமான கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினக் கூலியாகவும், மாத கூலியாகவும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து சமீபகாலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இன்று காலை தொரவி கிராமம் அருகே விழுப்புரம் - திருக்கனூர் சாலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 100 பேர் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், ரமேஷ் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பன்ட ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விக்கிரவாண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவாலி, நாராயணன் ஆகியோரும் விரைந்து வந்து இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர்  அங்குள்ள வெள்ளாற்றில்  மணல் அள்ளி வருகின்றனர். மணல் அள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்தும்,  தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்கு ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இந்தநிலையில் நேற்று வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த  இளம்பரிதி, வீரமுத்து ஆகியோரின் வண்டிகளை செந்துறை தாசில்தார் உமாசங்கரி மற்றும் அதிகாரிகள் பிடித்ததோடு, 2பேர் மீதும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தளவாய்  போலீசார் 2பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை தளவாய் தனியார் சிமெண்ட் ஆலை அருகே கடலூர் பெண்ணாடம் சாலையில் திடீரென மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதன் காரணமாக  அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும்  தளவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)  மோகன் மற்றும் வருவாய் அதிகாரி செந்தில் ஆகியோர் சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களுக்கு முறையாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இளம்பரிதி, வீரமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள்- போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து  தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ×