search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Dress"

    பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பெண்களின் பட்டுப்புடவைகளின் நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.
    காஞ்சிப்பட்டு முதல் பனாரஸ் பட்டு வரையில் பட்டு என்றாலே புடவைதான் நினைவிற்கு வரும். ஆனால் பட்டு நூலில் கண்ணை கவர்ந்து மனதை கொள்ளை கொள்ளும் நகைகள் பிரமிப்பூட்டுபவை. பெண்கள் தாங்கள் அணியும் பட்டுபுடவைக்கு ஏற்ப நகை அணிய விரும்பும் போது தங்க நகையையே விரும்புவர். ஆனால் தங்க நகைகளில் புடவைக்கு ஏற்ற நிறங்களில் அணிவது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

    பல வண்ண கற்கள் பதித்த கவரிங் நகைகள் போட்டாலும் அவை விலையுயர்ந்த பட்டுப்புடவைக்கு ஜோடியாவது சற்று சிரமம் தான். ஆனால் பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பட்டுப்புடவைகளின் அதே நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.

    பட்டு நூல் நகைகளின் வரலாறு :

    பட்டு நூல் நகைகள் வட இந்திய பகுதிகளில் தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. பெரு நாட்டில் பட்டு நூல் நகைகள் அதிகம் பிரசித்தம். அதே வகை நகைகள் கொடைகானலில் உள்ள பழங்குடி பெண்கள் செய்து விற்று வந்தனர். ஆனால் தற்போது இளம் பெண்கள் விரும்பி அணிவதால் இந்நகைகள் பல இணையதள கடைகளில் விற்கப்படுகின்றன.

    புதிய டிசைன்கள் புராதனம் இணைந்து...

    பொதுவாக நகைகளில் பாரம்பரியத்தன்மை கொண்டவை ஆன்ட்டிக் வகைகள், சிறு ஆன்ட்டிக் மணிகள், ஆன்ட்டிக் தொங்கட்டான், ஜிமிக்கி, பென்டன்ட் போன்றவைகளை பயன்படுத்தி செய்யப்படும் பெரிய நெக்லஸ், ஜிமிக்கி, கழுத்தணிகள், வளையல்கள் போன்றவை மிகவும் கம்பீரமாக இருக்கும். இவற்றின் இடையே பட்டு நூல் சுற்றிய மணிகள் மிகவும் எடுப்பாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.

    வெள்ளை நிற கற்கள், முத்துக்கள், மணிகள் போன்றவைகளும் இந்த நகைகளில் செய்யப்படும் நகைகள் தூரத்தில் பார்த்தால் தங்க நகைகள் போலவே தோற்றமளிக்கின்றன. பொதுவாக பட்டுப்புடவையின் நிறங்கள் தனித்தன்மையுடன் இருக்கும். இவற்றிற்கான ப்ளவுஸ் துண்டை எடுக்கும் போது அதே நிறங்கள் பொதுவாக கிடைப்பதில்லை. ஆனால் பட்டு நூலுனால் செய்யப்படும் நகைகள் புடவையின் நிறத்திற்கு வாந்தமாக பொருந்தி விடுகிறது.

    பொடி முத்துக்கள் கொத்து கொத்தாக கோர்க்கப்பட்டு செயின் இடையேவும், இம்முத்துக்களால் ஆன காது வளையின் கீழ்புறம் தொங்கும் ஜிமிக்கியிலும், இதே முத்தக்கள் கொண்ட வளையல்களின் இடைஅயவும் பட்டு நூலினால் சுற்றப்பட்ட மணிகள் போர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் நகைகள் மிகவும் அழகாகவும் பட்டு புடவைகள் மட்டுமின்றி சுடிதார், ஜீன்ஸ், குர்தாவிற்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது. மிகவும் எடை குறைவாகவும், பெரிய அளவிலும், விலை குறைவாகவும் கிடைக்கும் இந்த நகைகள் இளம் பெண்களின் மனம் கவர்ந்த நகையாக இருக்கும்.

    போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.
    இக்கத் நெசவு என்பது பழங்காலம் முதல் இந்தியா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்துள்ள கலைநயம் கொண்ட வடிவமைப்பு. இந்த நெசவின் மூலம் கிடைக்கும் வண்ண டிசைன் லேசாக அலைந்தது போன்ற வடிவத்தில் அழகிய வண்ணக் கலவைகளில் வித்தியாசமாக காட்சியளிக்கும். போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.

    இக்கத் நெய்யப்படும் முறை

    இக்கத் நெசவு முறை மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பம் கொண்டதாகும். துணியை நெய்துவிட்டு வர்ணம் தேய்க்கும் வழக்கமான முறையில் இது நெய்யப்படுவது இல்லை. அதேபோல் நூல்கண்டுகளை முழுமையாக வர்ணம் தோய்த்து இரண்டு பல வர்ண நூல்களை கொண்டு நெய்யும் முறையிலும் இது நெய்யப்படுவது இல்லை. நூல்கண்டுகளில் டிசைன்களின் வர்ணங்களுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சாயம் தோய்க்கப்படுகிறது. இப்படி டிசைனிற்கு ஏற்ப சாயம் தோய்க்கப்பட்டு நூல் கண்டுகள் தோய்க்கப்பட்டு காய வைக்கப்பட்ட பின் தறியில் கோர்க்கப்பட்டு நெய்யப்படுகிறது. துணியை நெய்து முடிக்கும்போதுதான் அந்த டிசைனே வெளிப்படும். நூலை பாவு மற்றும் குறுக்கிழையில் சரியாக பொருத்துவதும் நிறங்களை அதற்கான இடங்களில் துல்லியமாக வைப்பதும் மிகவும் கஷ்டமான ஒன்று. இதில் சிறுபிழை ஏற்பட்டால் டிசைன் சரியாக வராது.



    இக்கத் நெய்தலின் வகைகள்

    பாவு நூலில் மட்டும் சாயம் பூசப்பட்டு, குறுக்கிழை ஒரே நிறத்தில் இருக்கும் படியாக வைத்து நெய்வது ஒரு வகையாகும். இதன் டிசைன் அதிகமாக அலைந்ததுபோல், வர்ணங்கள் சற்று மங்கலாகவும் தோற்றமளிக்கும். பாவு மற்றும் குறுக்கிழை இரண்டிலுமே ஆங்காங்கு வர்ணசாயம் தோய்த்து, காயவைத்து பின் நெய்யப்படும் புடவை இரட்டை இக்கத் நெய்தல் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் நெய்யப்படும் வடிவங்கள் நிறுத்தமாகவும், நிறங்கள் சற்றே அடர்த்தியாகவும் இருக்கும். போச்சம்பள்ளி மற்றும் புட்டபக்கா புடவைகளில் இந்த வகை இக்கத் நெய்தல் தான் பயன்படுத்தப்படுகிறது.

    பாவு ஒரே நிறத்தில் வைத்துக்கொண்டு குறுக்கிழையை மட்டும் இக்கத் முறையில் சாயம் தோய்த்து நெய்யப்படும் ஒரு வகையும் உண்டு. இது சற்றே கடினமாக இருக்கும். குறுக்கிழையில் உள்ள சாய வேறுபாடே டிசைனை நிர்ணயம் செய்கிறது. எனவே அவ்வப்போது தறியை சரிசெய்து டிசைனை கொண்டு வரவேண்டும்.

    புடவை வாங்கினோம், அழகாய் இருக்கிறது, உடுத்திக் கொண்டோம் என்றில்லாமல் இம்மாதிரி கைத்தறியில் உள்ள மனித உழைப்பையும், ரசனையையும், தொழில்நுட்ப அறிவையும் உணர்ந்து கொள்ளும்போது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிறது. 
    பிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது.
    இளம் பெண்கள் விரும்பி அணிகின்ற ஆடைகளில் பிரபலமான ஒன்று பிராக். பொதுவாக ஆசிய நாடுகள் பலவற்றிலும் பிராக் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலும் பிராக் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. முன்பு மேலை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பிராக் குழந்தைகளை குட்டி தேவதையாக காண்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

    பிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது. முன்பு சின்ரெல்லா மற்றும் பார்பி பிராக் தான் மிக பிரபலமானதாக அமைந்தது. தற்போது இந்தியாவில் அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்ற வகை அதிக பிரபலமான பிராக் வகையாக உள்ளது. புதிய அனார்கலி பிராக் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    கிழக்கத்திய நாடுகளில் மிக பிரபலமான அம்பர்ல்லா பிராக், அதுபோல் டபுள் பிராக், காலிதார் பிராக், கவுன் ஸ்டைல் பிராக் போன்றவாறு பல வடிவமைப்பு செய்யப்பட்டன. அம்பர்ல்லா பிராக் என்பது இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு வகை ஆடை. இந்திய வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு பிராந்திய மற்றும் நாகரீகத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்பு திறனை மேம்படுத்தி உருவாக்கம் செய்தனர். இதனால் அம்பர்ல்லா பிராக் என்பது சாதாரண மாடல் முதல் அதி ஆடம்பரமான மாடல் என்றவாறு பல விற்பனைக்கு வந்தன.

    அனார்கலி அம்பர்லா பிராக்ஸ்

    அம்பர்லா பிராக்ஸ் என்பதை அடிப்படையாக கொண்ட பல ஆடைகள் துணை பிரிவுகளாக உருவாக்கம் பெற்றன. அதில் வடகத்திய ஆடை வகையான அனார்கலி என்பது இணைந்த அம்பர்ல்லா பிராக்ஸ் கூடுதல் கவர்ச்சி மற்றும் மேம்பட்ட எம்பிராயிடரி போன்றவை செய்யப்பட்டவாறு உருவாக்கப்பட்டன. பொதுவாக முன்பு அம்பர்ல்லா பிராக்ஸ் இணையாக பைஜாமா பேண்ட் போன்றவைகளையும் அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளது.



    குடை போல் விரியும் ஆடை வடிவமைப்பு

    அனார்கலி அம்பர்ல்லா பிராக்களின் அழகே அதில் செய்யப்படும் எம்பிராயிடரி மற்றும் ஜொலிக்கும் பார்டர்கள் தான் கழுத்து மற்றும் மேல் சட்டை பகுதிகளில் அதிகபடியான எம்பிராயிடரி பார்டர்கள் கூடுதல் பொலிவை தர பேன்சி லேஸ்கள் மற்றும் பனாரஸி பார்டர் என பல பொலிவு தன்மைகள் செய்யப்படுகின்றன. அதுபோல் கீழ்புற பகுதி முழுவதும் அதிக விரிவுடன் குடை மாதிரி விரிய ஏற்ற அமைப்பு மற்றும் பெரிய சரிகை பார்டர்கள் கொண்டவாறு அழகிய குடை அமைப்பில் இருக்கின்றன. அனார்கலி ஆடையின் அழகே கைப்பகுதியில் மெல்லிய சல்லடை துணி அமைப்பு இணைந்து இருப்பதுதான் சில மாடல்கள் கைபகுதியில் துணி இன்றியும் காணப்படும்.

    விதவிதமான வண்ண சாயல்களுடன்

    அடர்த்தியான மற்றும் லைட் நிறங்களில் மேற் சட்டை அமைப்பு மற்றும் அதற்கேற்ற நிறத்தில் பேண்ட் போன்றவை இணைந்த ஆடை. இதில் பேண்ட் பகுதிகள் மிக சாதாரணமாகவே இருக்கும். மேல் சட்டை அமைப்பான அனார்கலி அம்பர்ல்லா பிராக்தான் அதின வடிவமைப்பு மற்றும் பொலிவு தன்மை கொண்டதாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதிகமான எம்பிராயிடரி மற்றும் பார்டர்கள் உள்ளவாறு, குறைந்த அளவில் மெல்லிய லேஸ் மற்றும் பூ தையல் போட்ட பார்டர் கொண்ட பிராக்களும் கிடைக்கின்றன.

    விழாக்காலங்கள் மற்றும் பண்டிகைக் காலத்திற்கு என்றால் அதிக ஜொலிப்பும், பளபளப்பும் கொண்ட பிராக் சரியாக இருக்கும். ஜார்ஜெட் பருத்தி, நௌான், டூபியான், பட்டு போன்ற பல துணிவகைகளில் உருவாக்கப்பெறும் பிராக்கள் அதன் வடிவமைப்புக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன. ஆடம்பர தோற்ற மளிக்கும்.கற்கள் பதித்த பார்டர் வைத்த பிராக்கள் அதிக விலை கொண்டவை. சிறு குழந்தை அணிந்த சுழலும், குடை அமைப்பு பிராக்- தற்போது இளம் பெண்கள் மனதை கவரும் வகையில் சில மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்பது இன்றைய பெண்கள் ஆடையில் புதிய டிரெண்ட்- ஆக விளங்குகிறது. 
    பெண்களே ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.
    ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பழமொழி. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நம்முடைய முன்னோர்கள் ஆடைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல தத்துவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவரது ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விஷயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால்தான் சில ‘ஜவுளிக்கடைகள்’ இப்போது ‘ஜவுளிக் கடல்’ களாக மாறிவருகின்றன. இந்த அளவுக்கு ஆடைகளை வாங்கும் போது கவனம் செலுத்தும் நாம் அதனை பராமரிக்கும் விஷயத்தில் விழிப்புணர்வாக இருக்கிறோமா என்றால் இல்லை.

    விலையுயர்ந்த துணிகளை வாங்குகிற நமக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துணியை எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்றும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் பார்ப்போம். ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை (துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில்) பார்த்து படித்துக்கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டுமா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன்படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கலாம்.



    1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல மின்ன வைக்கலாம். டிடர்ஜென்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது. உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜென்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம். சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும்.

    இதனால் ஆடைகளின் நிறம் மங்காது. சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே பெண்களே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது. ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.
    ×