search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wheat"

    கோதுமைக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #Wheat #MSP #Cabinet
    புதுடெல்லி:

    கோதுமைக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. மேலும் பல தானியங்களின் ஆதார விலை உயர்த்தப்பட்டதால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டத்தில், ‘ரபி’ பருவ கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மத்திய வேளாண்துறை மந்திரி ராதா மோகன்சிங் கூறியதாவது:-

    கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.1,840 ஆக உயரும். இது, 6 சதவீத விலை உயர்வு ஆகும்.

    பார்லிக்கான ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.30 அதிகரிக்கப்படுகிறது. அதன் விலை ரூ.1,440 ஆக உயரும். மூக்கடலைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தப்படுகிறது. அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 620 ஆனது.

    மசூர் பருப்பின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 அதிகரிக்கப்படுகிறது. கடுகுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்படுகிறது. குங்குமப்பூவுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.845 அதிகரிக்கப்படுகிறது.

    ஆதார விலை உயர்வால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    வேளாண் ஆலோசனை குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அனைத்து ‘ரபி’ பருவ தானியங்களுக்கும் அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் முதல் 112 சதவீதம்வரை ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் அதிக விலை கிடைக்கச் செய்வோம் என்று பா.ஜனதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு ராதா மோகன்சிங் கூறினார்.
    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் 360 டன் கோதுமை அன்பளிப்பாக அனுப்பியது. #Pakistangiftedwheat
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிக்கின்றனர்.

    அண்டைநாடான ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கோதுமை அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன் அடிப்படையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அனுப்பிவைத்த 360 டன் கோதுமையை தோர்காம் எல்லைப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பெற்று கொண்டனர். #Pakistangiftedwheat #360tonswheat
    ×