search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar"

    • பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    • மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

    மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    வக்ரதுண்ட மஹாகாய கோடி ஸூர்ய ஸமப்ரப !

    அவிக்நம் குரு மே தேவ ஸர் வகார்யேஷு ஸர்வதா!!

    உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர் சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரிய பிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும் எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும்.

    அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது..

    ஓம் கம் கணபதயே நமஹ !

    மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை) புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம்பருத்தி, வெண் தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும்.

    மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

    • வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.
    • மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரை வாங்க வேண்டும்.

    முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப் புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல் பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனி இலை போட்டு பச்சரிசியை நிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும்.

    வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.

    ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோ கூடாது.

    மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.

    பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூட வேண்டும்.

    அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்தி பூஜிப்பது சிறப்பானது.

    • கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்திலன் வரலாறு கூறுகிறது.
    • இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது.

    கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட

    விநயாகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட ஆறுமுக மங்கலத்தில்

    அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.

    கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்திலன் வரலாறு கூறுகிறது.

    கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.

    ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது.

    பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டு விநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார்.

    இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது.

    யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.

    தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள்.

    பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது.

    தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது.

    5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது ,

    இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன் சன்னதியில்

    சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி.

    வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார்.

    நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.

    • மராட்டிய மாநிலம் புனே அருகில் போர்காவ் என்ற தலத்தில் திரிசக்தி சேத்திரம் அமைந்துள்ளது.
    • இங்குள்ள விநாயகர் கோவிலை பிரம்மன் கட்டியதாக கூறுகிறார்கள்.

    1. நின்ற கோலம்,

    2. அமர்ந்த கோலம்,

    3.நர்த்தன கோலம்,

    4.வலஞ்சுழி விநாயகர்,

    5.இடஞ்சுழி விநாயகர்.

    பிரம்மன் கட்டிய விநாயகர் கோவில்

    மராட்டிய மாநிலம் புனே அருகில் போர்காவ் என்ற தலத்தில் திரிசக்தி சேத்திரம் அமைந்துள்ளது.

    இங்குள்ள விநாயகர் கோவிலை பிரம்மன் கட்டியதாக கூறுகிறார்கள்.

    வேதங்களைத் திருடிய கமலாசுரனை மயில் வாகனத்தில் ஏறி துரத்திச்சென்று அவற்றை மீட்டு வந்தார்.

    போர் முடிந்த பிறகு கமலாசுரன் உடல் மூன்று துண்டுகளாக விழுந்த இடத்தில் பிரம்மா விநாயகருக்காக கட்டியதாக புராணத்தில் உள்ளது.

    • திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.
    • கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.

    இவர் தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச் சொல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளார்.

    விநாயகர்-கல்விக்கடவுளாக

    மராட்டிய மாநிலத்தில் விநாயக சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.

    அங்கே ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அமைத்து அதில் பெரிய பெரிய விநாயகர் நிலை அமைத்து பூஜை செய்து பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம்.

    கல்விக்கடவுளாக கருதி வணங்குகின்றனர்.

    வாரத்தில் செவ்வாய்க்கிழமையே அவருக்கு உகந்த நாள்.

    கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    அவரது அம்சத்தில் முகம் விஷ்ணுரூபம்.

    இடபாகத்தில் சக்தி, வலது பாகத்தில் சூரியன், முக்கண்களில் சிவாபெருமான் உள்ளனர்.

    • ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.
    • இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.

    "ஓம் வக்ரதுண்டாய ஹீம்"

    என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

    முருகன் தாராசுரனை வென்றதும், வாமனன் மகாபலியை வென்றதும், பரசுராமர் அசுரர்களை வீழ்த்தியதும், மது கைடபர்களை திருமால் அழித்ததும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் தான்.

    ராஜராஜ சோழன் வணங்கிய கணபதி

    ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.

    இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.

    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்னச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர்களை தான் அவர் வணங்கி வந்தார்.

    பரிவார ஆலயத்துப்பிள்ளையார் என்று பெயர் வழக்கத்தில் உள்ளது.

    • அவன் கண்களில் கோபம் தெறிக்க அதிலிருந்து ஒரு வீரன் வெளிவந்தான்.
    • அவன்தான் லாபன். அவனை விநாயகர் தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

    ஒரு சமயம் விநாயகர் கமலாகரன் என்ற அசுரனை அழிக்க போர் செய்து கொண்டிருந்தபோது புத்திதேவி அங்கு வந்து சேர்ந்தாள்.

    அவன் கண்களில் கோபம் தெறிக்க அதிலிருந்து ஒரு வீரன் வெளிவந்தான்.

    அவன்தான் லாபன். அவனை விநாயகர் தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

    18-அடி ஆழத்தில் கணேசர்

    விருத்தாச்சலத்தில் உள்ள விடுத்த கிரீஸ்வரர் கோவிலில் 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கியபடி விக்னேசர் அருள்பாலிக்கிறார்.

    இங்கே ஒரு புறம் பொன்னுக்கு மாற்றுரைத்த கணேசரும் உள்ளார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் சிவன் கோவிலில் சிரசில் மகுடம் தரித்த விநாயகி காட்சி அளிக்கிறாள்.
    • உத்திரபிரதேசத்தில் நதியான் என்ற ஊரில் பரியங்காசன் வடிவத்தில் விநாயகி உருவம் உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்து ஹர்ஷவர்தன் நகரில் சிவன் கோவிலில் சிரசில் மகுடம் தரித்த விநாயகி காட்சி அளிக்கிறாள்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மை சன்னதியில் புலிக்கால்களோடு, வீனை வாசித்தப்படி விநாயகி வடிவம் காணப்படுகிறது.

    உத்திரபிரதேசத்தில் நதியான் என்ற ஊரில் பரியங்காசன் வடிவத்தில் விநாயகி உருவம் உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன் மண்டப வாயிலில் முகம் யானை வடிவிலும், உடல் முழுவதும் புலிவடிவுடனும் விநாயகர் சக்தி வடிவினாய் விநாயகி காட்சி தருகிறாள்.

    கணேஸ்வரி கணேசாயினி, கஜானனி, ஜங்கினி, சக்தி கணபதி, விக்னேஸ்வரி, விநாயகி, மூஷிக், சுமுகி, ரேம்பினி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறாள் பெண் வடிவ விநாயகி.

    • விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.
    • ஒரிசா மாநிலத்தில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.

    விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.

    எத்தனை விநாயகிகள் பாருங்கள்.

    கோவைப்பகுதியில் உள்ள பவானி ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணையை வாசித்தப்படி விநாயகி உள்ளார்.

    ஒரிசா மாநிலத்திலுள்ள ஹராப்பூரில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.

    திருநெல்வேலி வாசுதேவநல்லூரில் இடுப்புக்குக் கீழ் யாளி வடிவம் கொண்ட விநாயகி

    கைகளில் வான், மமு, அதை கேடயம் வைத்தப்படி போர்க்கோலத்தில் காட்சி தருகிறாள்.

    • சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர்.
    • இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.

    சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர்.

    தூலம், ராகு, கேது ஞானகாரகன் கேதுவைக் குறிக்கும்.

    இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி தோறும் இங்குள்ள நாகர் சன்னதி முன்பு சந்தான கணேச ஓமம் செய்யப்பட்டு புத்திரன் இல்லாதவர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அரங்கன் பள்ளி கொண்ட மாமலைக்கு எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணியில் இந்த விசேஷ விக்னேசர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்கிறார்.

    • மதுரை வடக்கு மாசி வீதியில் நேரு ஆவார சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
    • கன்னிப்பெண்கள் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கூடுகிறார்கள்.

    மதுரை வடக்கு மாசி வீதியில் நேரு ஆவார சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.

    கன்னிப்பெண்கள் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கூடுகிறார்கள்.

    அவர்கள் வயதுக்குத்தக்கப்படி 16,21,26,32 என்ற படி விரளி மஞ்சளை தாலிக்கயிறில் கட்டி இவருக்கு அணிவித்து பிரார்த்திக்கின்றனர்.

    இவ்வாறு வழிபட்டால் முகப்பொலிவு ஏற்படுமென்றும் நவக்கிரக தோஷம் விலகி நல்ல கணவர் வருவார் என்று நம்புகின்றனர்.

    ஆலமரத்தின் கீழ் அழகுருவாய் அமைந்த இவரை மதுரைக்கு வந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு வழிபட்டதால் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று பெயர் பெற்றுவிட்டார்.

    • இவரை வணங்கிவந்த பக்தர்கள் நாளடைவில் சொக்கட்டான் பிள்ளையார் என்று மாற்றிவிட்டனர்.
    • சங்கரன்கோவிலில் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார்.

    சொல்கேட்டான் பிள்ளையார்

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் அருளும் விநாயகருக்கு சொல்கேட்டான் பிள்ளையார் என்று பெயர்.

    இவரை வணங்கிவந்த பக்தர்கள் நாளடைவில் சொக்கட்டான் பிள்ளையார் என்று மாற்றிவிட்டனர்.

    விசித்திரமாய் விநாயகர்கள்

    குடந்தை நாகேஸ்வரன் கோவிலில் ஜூரஹ விநாயகர் கையில் குடையுடன் துதிக்கையில் அமிர்த கலசம் ஏந்தி காட்சி தருகிறார்.

    திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவிலில் கையில் கரும்புடன் காட்சி தருகிறார் விநாயகர்.

    தேவக்கோட்டை கோவிலில் காலில் சிலம்பை அணிந்துள்ளார்.

    சங்கரன்கோவிலில் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார்.

    ஸ்ரீசைலத்தின் கிருஷ்ணர் வைத்திருக்க வேண்டிய புல்லாங்குழலை விநாயகர் வைத்திருக்கிறார்.

    பவானி சிவன்கோவிலில் விநாயகர் கையில் விணையை வாசித்துக்கொண்டிருக்கிறார்.

    ×