search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar"

    • விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.
    • ஒரிசா மாநிலத்தில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.

    விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.

    எத்தனை விநாயகிகள் பாருங்கள்.

    கோவைப்பகுதியில் உள்ள பவானி ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணையை வாசித்தப்படி விநாயகி உள்ளார்.

    ஒரிசா மாநிலத்திலுள்ள ஹராப்பூரில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.

    திருநெல்வேலி வாசுதேவநல்லூரில் இடுப்புக்குக் கீழ் யாளி வடிவம் கொண்ட விநாயகி

    கைகளில் வான், மமு, அதை கேடயம் வைத்தப்படி போர்க்கோலத்தில் காட்சி தருகிறாள்.

    • சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர்.
    • இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.

    சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர்.

    தூலம், ராகு, கேது ஞானகாரகன் கேதுவைக் குறிக்கும்.

    இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி தோறும் இங்குள்ள நாகர் சன்னதி முன்பு சந்தான கணேச ஓமம் செய்யப்பட்டு புத்திரன் இல்லாதவர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அரங்கன் பள்ளி கொண்ட மாமலைக்கு எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணியில் இந்த விசேஷ விக்னேசர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்கிறார்.

    • மதுரை வடக்கு மாசி வீதியில் நேரு ஆவார சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
    • கன்னிப்பெண்கள் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கூடுகிறார்கள்.

    மதுரை வடக்கு மாசி வீதியில் நேரு ஆவார சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.

    கன்னிப்பெண்கள் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கூடுகிறார்கள்.

    அவர்கள் வயதுக்குத்தக்கப்படி 16,21,26,32 என்ற படி விரளி மஞ்சளை தாலிக்கயிறில் கட்டி இவருக்கு அணிவித்து பிரார்த்திக்கின்றனர்.

    இவ்வாறு வழிபட்டால் முகப்பொலிவு ஏற்படுமென்றும் நவக்கிரக தோஷம் விலகி நல்ல கணவர் வருவார் என்று நம்புகின்றனர்.

    ஆலமரத்தின் கீழ் அழகுருவாய் அமைந்த இவரை மதுரைக்கு வந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு வழிபட்டதால் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று பெயர் பெற்றுவிட்டார்.

    • இவரை வணங்கிவந்த பக்தர்கள் நாளடைவில் சொக்கட்டான் பிள்ளையார் என்று மாற்றிவிட்டனர்.
    • சங்கரன்கோவிலில் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார்.

    சொல்கேட்டான் பிள்ளையார்

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் அருளும் விநாயகருக்கு சொல்கேட்டான் பிள்ளையார் என்று பெயர்.

    இவரை வணங்கிவந்த பக்தர்கள் நாளடைவில் சொக்கட்டான் பிள்ளையார் என்று மாற்றிவிட்டனர்.

    விசித்திரமாய் விநாயகர்கள்

    குடந்தை நாகேஸ்வரன் கோவிலில் ஜூரஹ விநாயகர் கையில் குடையுடன் துதிக்கையில் அமிர்த கலசம் ஏந்தி காட்சி தருகிறார்.

    திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவிலில் கையில் கரும்புடன் காட்சி தருகிறார் விநாயகர்.

    தேவக்கோட்டை கோவிலில் காலில் சிலம்பை அணிந்துள்ளார்.

    சங்கரன்கோவிலில் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார்.

    ஸ்ரீசைலத்தின் கிருஷ்ணர் வைத்திருக்க வேண்டிய புல்லாங்குழலை விநாயகர் வைத்திருக்கிறார்.

    பவானி சிவன்கோவிலில் விநாயகர் கையில் விணையை வாசித்துக்கொண்டிருக்கிறார்.

    • ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகர் அருள் வேண்டி உண்ணாவிரதம் இருக்கலாம்.
    • இந்த விரதத்தில் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகர் அருள் வேண்டி உண்ணாவிரதம் இருக்கலாம்.

    அன்று இரவு 9 மணி வரை உபவாசம் இருப்பது நல்லது.

    சங்கடங்கள் போக்கும் சங்கடஹர கணபதியை முன்னிட்டு "ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சங்கடம் நிவாரய நிவாரய" என்று 21 முறை பாராயணம் செய்து 21 முறை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    2 தேங்காய், பழங்களுடன் 21 கொழுக்கட்டைகள் நிவேதனம் செய்யவும்.

    பிறகு சந்திரனைத் தரிசனம் செய்து மீண்டும் விநாயகரை வணங்கி பின் சாப்பிடலாம்.

    கஷ்டங்கள் வரும்போதெல்லாம் இந்த விரதம் அனுஷ்டிக்கலாம்.

    இந்த விரதத்தில் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ஐஸ்வரியத்தை விரும்புபவர்கள் மேதா சக்தியையும், நோயில் இருந்து விடுபட விரும்புபவர்கள் ஆரோக்கியத்தையும் அடையலாம் என்று கந்தபுராணமும் விநாயக புராணமும் கூறுகிறது.

    • இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர்.
    • சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர்.

    இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர்.

    துறவி பூண்ட பட்டினத்தடிகள் தம் சொத்துக்களை ஊரார் எடுத்துச் செல்லும்படி நிதியறையைத் திறந்துவிடுமாறு தம் கணக்கர் சேந்தனாருக்கு ஆணையிட்டார்.

    அதன்படிச் செய்த சேந்தனாரை, இழந்த பொருட்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கூறி, அரசன் விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்தான்.

    சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர்.

    பட்டினத்தடிகள் வெண்காட்டு இறைவனிடம்,

    "மத்தளைத் தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்

    நித்தமும் தேடிக்காணா நிமலனே யமலமுர்த்தி

    செய்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட

    கைத்தளை நீக்கியென் முன் காட்டு வெண் காட்டுளானே"

    என வேண்டினார்.

    சிவபெருமான் கட்டளைப்படி விநாயகர் சேந்தனாரின் விலங்கைத் தறித்து (உடைத்து) அவரைச் சிறையினின்று விடுவித்தார்.

    அதனால் விலங்கு தறித்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார்.

    இன்றும் பட்டினத்தடிகள் சிவதீட்சைக்காகத் திருவெண்காட்டிற்கு எழுந்தருளும்போது விலங்கு தறித்த விநாயகரை வந்து வணங்கிச் செல்லுகிற விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    • சங்கரன் மகன் ஐங்கரனை வழிபட்டால் எந்தச் சங்கடங்களையும் தீர்த்துவைப்பான் என்பதில் ஐயமில்லை.
    • விநாயகர் கோவிலுக்கு சிதறு தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

     

    சங்கரன் மகன் ஐங்கரனை வழிபட்டால் எந்தச் சங்கடங்களையும் தீர்த்துவைப்பான் என்பதில் ஐயமில்லை.

    நாம் தொடுக்கும் வழக்கு, நியாயமான வழக்காய் இருந்தால் உறுதியாய் நமக்கு வெற்றி கிட்டும்.

    விநாயகரை வழிபட ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்தச் சதுர்த்தி திதி எந்தக் கிழமையில் அமைந்தாலும் சரி அன்று வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும்.

    கோமியம், கடல்நீர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.

    வீட்டிலுள்ளவர் எல்லோரும் நீராடி, தூய்மையாக இருக்க வேண்டும்.

    அவல், பொரி, கடலை, வெல்லம், இளநீர், பசும்பால், தேன், கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அருகம்புல், செம்பருத்தி, வெள்ளை எருக்க மலர் ஆகியவற்றைத் தயாராக வைத்துகொள்ள வேண்டும்.

    அருகிலுள்ள விநாயகர் கோயிலில் சந்தனக் காப்புச் செய்து கொண்டுவந்த சந்தனத்தை மஞ்சள் தூளுடன் கலந்து, பிசைந்து, பெரிதாகப் பிள்ளையாரைச் செய்து கொள்ள வேண்டும்.

    கிழக்கு முகமாக வீட்டின் அறையில் பீடம் அமைக்கப்பட வேண்டும். அதன் மீது முழுவதும் எருக்க மலர்களைப் பரப்ப வேண்டும்.

    அதில் அருகம்புல் பரப்பி மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

    பின்பு அதற்கு குங்குமத் திலகமிட்டு, அருகம்புல் மாலை இட்டுச் சுற்றிலும் செம்பருத்தி மலர்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

    ஐந்து முகக் குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.

    விநாயகர் பீடத்திற்குக் கற்பூர தீபம் காட்டி, தேங்காய் உடைத்து விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்களையும்,

    அஷ்டோத்திர சத நாமாவளியையும் சொல்லி, அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    பின்பு கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.

    விநாயகர் கோயிலுக்கு சிதறு தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பிரசாதங்களைப் பிறருகுத் தந்த பின்பே வீட்டிலுள்ளவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த விநாயகர் பூஜையை ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று செய்ய வேண்டும்.

    இப்படிச் செய்தால் வழக்குகளில் வெற்றிகிட்டும், குடும்ப நிலையில் முன்னேற்றம் காணும். செல்வபெருக்கு, புகழ் ஆகியன கிட்டும்.

    • அவன் வந்ததும் ஒரு தலைச் சுவடியை நீட்டினார். “அதில் இன்று போய் நாளை வா” என்றிருந்தது.
    • சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன்களையும் குறைத்து அருள்புரிகிறார் விநாயகர்.

    ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் "விநாயகரை" வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.

    இதனை விளக்கும் புராண கதை ஒன்றை காணலாம்.

    ஒரு தடவை ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்து, விநாயகர் தன்னைப் பிடிப்பதற்காக சனி பகவான் வருவதை அறிந்து கொண்டார்.

    அவன் வந்ததும் ஒரு தலைச் சுவடியை நீட்டினார். "அதில் இன்று போய் நாளை வா" என்றிருந்தது.

    பின்னர் விநாயகப் பெருமான் அதை அரசமரத்தடியில் வைத்தார்.

    பின்பு சனி பகவானிடம் "சனீஸ்வரா எந்த நாளும் இந்த அரசமரத்திற்கு வருக.

    இந்த ஓலைச் சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக!" என்று சபித்து விட்டு மறைந்து விட்டார்.

    அதன் பிரகாரம் சனீஸ்வர பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்குச் சென்று அதில் உள்ள

    வாசகத்தைப் படித்து ஏமாந்தபடி திரும்புவது வழக்கமானது.

    இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாந்துபோன சனிபகவான், விநாயகரைப் பிடிப்பது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்து அவரை துதித்து வழிபடத் தொடங்கினார்.

    விநாயகரும், அவர் முன்தோன்றி "சனீஸ்வரா, காரணமின்றி யாரையும் உன் சக்தியைப் பயன்படுத்தித் தவறாக நடக்கக்கூடாது. இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும்.

    இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக்கூடாது" என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.

    இதன்படியே இன்றும் சனிதோஷம் உள்ளவர்கள் விநாயகரை அவருக்கு உகந்த நாட்களான சங்கடஹர சதுர்த்தி,

    விநாயகர் சதுர்த்தி இன்னும் பிற நாள்களிலும் வணங்கி வர சனிதோஷத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள்.

    சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன்களையும் குறைத்து அருள்புரிகிறார் விநாயகர்,

    நவக்கிரக கோட்டையில், அதுவும் சனி பகவான் எதிரியில் அமர்ந்து கொண்டு.

    நவக்கிரக கோட்டையில் ஸ்ரீ நவசக்தி சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

    நவக்கிரகங்கள் எல்லாம் தனித்தனி சந்நிதி களில் விநாயகர் எழுந்தருளியிருக்கும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளனர்.

    வேலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை.

    பொன்னையில் இருந்து 3 கி.மீட்டரில் உள்ளது நவக்கிரகக் கோட்டை.

    வேலூரிலிருந்து பொன்னைக்கு பேருந்து வசதி உண்டு. பொன்னையில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ மூலம் நவக்கிரகக் கோட்டையை அடையலாம்.

    • அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும்.
    • கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ளார் மதுரவிநாயகர்.

    திருமணத்தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின்

    எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும்.

    அரளி, சிகப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து அவருக்குப் பிடித்த தேங்காய்,

    வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும்.

    அதனைத்தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதேபோல் வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

    நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு

    தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும்.

    குழந்தை பிறந்ததும் இங்கு சந்நிதிக்கு வந்து குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில்

    உட்புறமாக தந்து வெளிப்புறமாக குழந்தையை வாங்கிக் கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    இந்த போற்றி பதினொன்றையும் சொல்லி அஸ்வதன அரசிலை கணேசரை வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம்.

    ஓம் அஸ்வ கணேசா போற்றி!

    ஓம் ஆலவாயன் மைந்தா போற்றி!

    ஓம் இயற்கை ரூபனே போற்றி!

    ஓம் பொன்னை அணிந்தாய் போற்றி!

    ஓம் சித்தியின் நேசனே போற்றி!

    ஓம் புத்தியில் உறைவோனே போற்றி!

    ஓம் பார்வதி மைந்தா போற்றி!

    ஓம் இலையுடைக்கரமே போற்றி!

    ஓம் மோதகம் பிரியனே போற்றி!

    ஓம் மோகன கணேசா போற்றி!

    ஓம் அரசிதழ் நாயகனே போற்றி!

    இந்த போற்றி பதினொன்றையும் சொல்லி அஸ்வதன அரசிலை கணேசரை வணங்கி வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது திண்ணம்.

    • பூஜை முடியும் நாளில் “மோதகம்” நிவேதனம் செய்ய வேண்டும்.
    • இந்த பூஜையை சங்கடஹரசதுர்த்தியில் தொடங்கலாம்.

    சக்தி கொண்டு சித்தி தரும் இவ்விநாயகரை வழிபட பூஜை முறை ஒன்றிருக்கிறது.

    ஒரு அட்டையிலோ, பலகையிலோ இந்த அஸ்வதன விநாயகரை ஒட்டி, சட்டமிட்டு பக்தர்கள் கோரிக்கைக்கு ஏற்றவாரு பூஜை செய்யலாம்.

    அதற்குரிய சந்த வரிசைகள் இவையே:

    இழந்த பதவி, வேலைகளை மீண்டும் பெற விநாயகர் படத்தில் இடது காதுப்பகுதியிலிருந்து சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு வர வேண்டும்.

    மேலும் விநாயகரின் காரிய சித்தி மாலையை மும்முறை படிக்க வேண்டும்.

    இப்படி 54 நாள்கள் படித்து வர நினைத்த கோரிக்கை நிறைவேறும் தினமும் கல்கண்டு, பால் நிவேதித்து,

    பூஜை முடியும் நாளில் "மோதகம்" நிவேதனம் செய்ய வேண்டும்.

    குழந்தைப் பேற்றுக்காக 48 நாள் தொப்புள் பகுதியில் தொடங்கி சந்தனப்பொட்டு இட வேண்டும்.

    தினமும் த்ரிமதுரம் (தேன், பால், நெய்) கலந்து நிவேதனம் செய்து சாப்பிட்டு வர பலன்கள் கிடைக்கும்.

    இந்த பூஜையை சங்கடஹரசதுர்த்தியில் தொடங்கலாம்.

    சிலருக்கு அதிர்ஷ்டம், ராஜயோகம் வேண்டுதலாக இருந்தால், அதற்கு கணேசருடைய கவசத்தை தினமும்

    மூன்றுமுறை படித்து "மோதகம்" நிவேதனம் செய்ய வேண்டும்.

    "ஓம் கம் கம் கணேசாய நம!" என்று ஜபம் செய்ய வேண்டும்.

    மேலும், பகையின்றி வெற்றி, அரசியல், லாபம் பெறுவதற்கு முஷ்டி மோதகம் என்னும் பிடிக் கொலுக்கட்டை வைத்து

    சுக்கில சதுர்த்தியில் வலது கை இலைப்பகுதியில் தொடங்கி 56 நாட்கள்

    "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கணேஸ்வராய நமக" என்று தினம் 108 தடவை ஜபிக்க வேண்டும்.

    இப்படியாக அஸ்வதன விநாயக பூஜையை எளிமையாசச் செய்து சாதகமான பலன்களை ஏராளமாகப் பெறலாம்.

    • அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் “எட்டு இலை”களால் ஆனது.
    • இவரை வணங்குவதால் ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.

    அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் "எட்டு இலை"களால் ஆனது. அதாவது

    * நேத்ர மென்னும் கண்களின் மேல் பகுதியில் சூலமும், காதுகளில் குண்டலமும், வலது கரத்தில் "ஓம்" என்கிற பிரணவ மூல எழுத்தும், இடது கரத்தில் சுழல்கின்ற இந்தப் பூமியில் சமத்துவக் குறியீடான ஸ்வஸ்திக்கு இருக்கின்றது.

    * வயிற்றில் அரவமென்னும் பாம்பினை போன்ற முப்புரிநூல் இச்சா, ஞான, கிரியா சக்திகளையும், ஞானம், செல்வம், வீரம் ஆகிய பேறுகளையும் அளிப்பதாக விளங்குகின்றது.

    * நீலநிற இரு தந்தங்களும் தோஷங்களை விலக்குகின்ற தன்மையுடையதாகவும், எட்டு தனங்களும் மனிதனுக்குரிய நல்ல குணங்களை குறிப்பனவாகவும் உள்ளன.

    *அஸ்வதன விநாயகருடைய தன மென்கிற இலைப்பகுதிகளில் அரச மரத்தில் பல தெய்வங்கள் இருப்பதைப் போலவே பிரம்ம ருத்திரர்கள், திக்கஜங்கள், நட்சத்திராதி தேவதைகள் வசிக்கிறார்கள்.

    இவரை வணங்குவதால் பிள்ளைக்கனி தீர்வதோடு ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.

    மேலும்,

    "அஷ்டதன மத்யே கணேசம்

    சாந்தரூபம்

    மதத்ரி ணேத்ரம்

    நாகா பரண புஷிதம்

    த்ரி சூல பாணினம், கிரீட

    மகுட தாரினம்

    சர்வ சித்திரப்ரதம் அஸ்வ

    தன கணேசம் பஜே"

    இதுவே அஸ்வதன விருட்ச கணேசரின் வழிபாட்டு சுலோகம்.

    இதன் பொருள் எட்டுதனங்களை கொண்டவரும், அமைதியான உருவத்தை உடையவரும் யானையின்

    மூன்று கண்களைப் போன்ற சிறு கண்களைக் கொண்டு ஆர்ப்பவரும், பல ஆபரணங்களைச் சூடியவரும்,

    மிகவும் தூய்மையான, வெள்ளைப் பூணூலை அணிந்து கொண்டிருப்பவரும், முகத்தின் நடுப்பகுதியில்

    சக்தி வடிவமானவரும், சிவபெருமானுடைய ஆயுதமான த்ரி சூலாயுதத்தை திலகமாக பொருத்தி இருப்பவரும்,

    தலையிலுள்ள சிகைப் பகுதிகள் கிரீட மகுடத்தை அணிந்திருப்பவரும் இந்த சாந்தரூபமான அரச இலைகளால்

    அமைந்து அருள் தருபவரான அஸ்வதன விநாயகரை வணங்கி நலம் பெறுவோமாக!

    ×