search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivansakthi"

    • நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தியானம் செய்ய முடியும்?’’ என்று கேட்கிறாள்.
    • பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அறிவு, ஆற்றலோடு ஞானம், பக்குவம், விவேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.

    தெய்வத்தையே தாயாக நினைக்கும்போது, தன் குழந்தைகளைக் காக்க அவள் பூமிக்கு வந்து விடுகிறாள்.

    பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அறிவு, ஆற்றலோடு ஞானம், பக்குவம், விவேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.

    வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க அதுவே முக்கியம். அந்த ஞானத்தை அள்ளி வழங்குபவள் அகிலாண்டேஸ்வரி.

    ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார்.

    உலகில் நீதி நெறி தவறி, அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது.

    மனிதர்களை நல்வழிப்படுத்த, ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வருகிறாள்.

    நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தியானம் செய்ய முடியும்?'' என்று கேட்கிறாள்.

    அவள் குரலில் ஏளனம். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார்.

    "தேவி! ஆம்... நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய்.

    என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக இருக்கிறான்.

    அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். அங்கு நாம் குரு சிஷ்யை என்ற முறையில் திகழ்வோம் என்கிறார்.

    அவரின் உத்தரவை ஏற்று அன்னை பூமிக்கு வருகிறார். திருவானைக்காவில் காவிரி நதியில் நீர் எடுத்து லிங்கம் அமைத்து ஈசனை வழிபடுகிறார்.

    புராண காலத்தில் இத்தலம் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    அதில் ஒரு மரத்தடியில் ஜம்பு என்னும் முனிவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார்.

    இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழம் பிரசாதமாகக் கொடுத்தார்.

    இறைவன் அளித்தது என்று முனிவர் விதையையும் சேர்த்து விழுங்கி விட்டார்.

    விதை வயிற்றுக்குள் வளர்ந்து கிளைகள் தலைக்கு மேல் பரவ, சிரசு வெடித்து முனிவர் முக்தி அடைந்தார். எனவே இறைவன் "ஜம்புகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    அகிலத்தைக் காக்க அம்பிகை தவம் இருந்ததால் "அகிலாண்டேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள்.

    • சிவாலயங்களில் கர்ப்பகிரகத்துக்குத் தென் புறப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.
    • தரிசனத்துக்கு ஆனந்த தாண்டவமூர்த்தி தியானம் பண்ணுவதற்குத் தட்சிணாமூர்த்தி சந்நிதிதான்.

    சிவாலயங்களில் கர்ப்பகிரகத்துக்குத் தென் புறப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.

    இவர் ஒரு காலை இன்னொரு கால் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

    நடராஜாவின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து கிளம்பும் சப்தங்களை எல்லாம் அடக்கிப் புத்தகமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்.

    பொங்கும் ஆனந்தம் இங்கே அடங்கி இருக்கிறது. இங்கே சடை தொங்கிக் கொண்டிருக்கும்.

    இங்கே சந்திரன் நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

    தட்சிணாமூர்த்தி காட்டிக் கொண்டிருக்கிற முத்திரைக்கு "சின் முத்திரை" என்று பெயர்.

    கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

    இது ஞான முத்திரை. ஞானம் நிறைந்ததால் சாந்தம்! சாந்தம் இருக்கும் இடத்திலே ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

    அமைதியாக ஜபம் பண்ண வேண்டும் என்றால் தட்சிணாமூர்த்தி சந்நிதானத்திலே போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

    தரிசனம் பண்ணுவதனால், நடராஜாவின் சந்நிதானத்திலே சென்று பண்ண வேண்டும்.

    தரிசனத்துக்கு ஆனந்த தாண்டவமூர்த்தி தியானம் பண்ணுவதற்குத் தட்சிணாமூர்த்தி சந்நிதிதான்.

    தட்சிணாமூர்த்தி கண்ணை மூடிக்கொண்டிருப்பதைப் போல அவரது சந்நிதிதானத்திலே போய் நாமும் கண்ணை மூடிக் கொண்டு அமர வேண்டும்.

    அவருடைய சந்நிதானத்திலே நமக்கும் அந்தர்முக தியானம் கிடைக்கும்.

    எல்லோருமே தட்சிணாமூர்த்தி சந்நிதானத்திலே கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து ஜபம் பண்ண வேண்டும்.

    • அபிஷேகம்- பாவம் அகலும், பீட பூஜை-சாம்ராஜ்யம் சித்தரிக்கும்,
    • நமஸ்காரம்- நான்கு புருஷார்த்தங்களையும் தரும், ஜபம்-அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

    ஆவாகனம், ஆசனம், பத்யம், அர்க்யம், ஆசமனம், மதுவர்க்கம், ஸ்நானம், வஸ்த்ரம், யக்ஞோபவீதம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், நீராஞ்சனம்.

    பலன்கள்

    அபிஷேகம்- பாவம் அகலும், பீட பூஜை-சாம்ராஜ்யம் சித்தரிக்கும்,

    கந்தம்- சகல சவுபாக்கியத்தையும் அளிக்கும், புஷ்பம்- சவுக்கியம் தரும்,

    தூபம்- நல்ல வாசனை தரும், தீபம்- தேக காந்தியைத் தரும்.

    நைவேத்தியம்- மகாபோகத்தைத் தரும், தாம்பூலம்- லட்சுமி கடாசத்தைத் தரும்,

    நமஸ்காரம்- நான்கு புருஷார்த்தங்களையும் தரும், ஜபம்-அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

    ஹோமம்- சர்வ காமஸ்கிருமிதியைத் தரும், அன்னதானம்- சர்வ தேவ திருப்திகரம்.

    • சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.
    • லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.

    ஐந்துகோடி மலர்களால் அர்ச்சித்தால் முக்தி பெறுவான்,

    ஒரு கோடி மலர்களால் அர்ச்சித்தால் ஞானம் பெறுவான்.

    அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஐந்து லட்சம் ஜபித்தால் சிவன் பிரத்யட்மாவான், லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.

    லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    லட்சம் கரவீர புஷ்பத்தால் அர்ச்சிப்பின் சர்மராகங்கள் நிவர்த்தியாகும். லட்சம் மல்லிகை அர்ச்சிப்பின் அழகிய மனைவி கிடைப்பாள்.

    ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால் ரோகம் நிவர்த்தியாகும். பன்னீராயிரத்து ஐந்தூறு மலர்களால் அர்ச்சிப்பின் கல்வி, கேள்விகளில் சிறந்தவனாவான்.

    பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவான் என்று சிவபுராணம் கூறுகிறது.

    • திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.
    • கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.

    இவர் தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச் சொல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளார்.

    விநாயகர்-கல்விக்கடவுளாக

    மராட்டிய மாநிலத்தில் விநாயக சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.

    அங்கே ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அமைத்து அதில் பெரிய பெரிய விநாயகர் நிலை அமைத்து பூஜை செய்து பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம்.

    கல்விக்கடவுளாக கருதி வணங்குகின்றனர்.

    வாரத்தில் செவ்வாய்க்கிழமையே அவருக்கு உகந்த நாள்.

    கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    அவரது அம்சத்தில் முகம் விஷ்ணுரூபம்.

    இடபாகத்தில் சக்தி, வலது பாகத்தில் சூரியன், முக்கண்களில் சிவாபெருமான் உள்ளனர்.

    • குழந்தைக்காக தாய் பத்தியம் இருப்பது போல, நமக்காக அம்பிகை செய்து வழி காட்டிய விரதம் இது.
    • இதை கடைபிடித்து தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து சகல செல்வங்களையும் பெறலாம்.

    பரமேஸ்வரனை விட்டுப்பிரியாமல் இருக்க வேண்டும். அவர் இடப் பாகத்தில் ஐக்கியம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்பிகை உமாதேவி தவம் செய்வதற்காக திருக்கேதாரம் என்ற திருத்தலத்தை அடைந்தார்.

    அங்கு, கௌதம முனிவரை சந்தித்து தன் எண்ணத்தை சொல்ல, அவர் அப்போது அம்பிகை உமாதேவிக்கு சொல்லும் முகமாக நமக்கு உபதேசித்ததே கேதார கௌரி விரதம்.

    புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதி முதலாக தொடங்கி, அமாவாசை வரும் வரையிலும் இந்த விரதத்தை கடைபிடிப்பது முறை.

    நன்றாக இழைத்து தயார் செய்யப்பட்ட 21 இழைகள் கொண்ட சரடை (நூலை) சங்கல்பத்தோடு (வேண்டுதல் நிறைவேற வேண்டும்) இடக்கையில் கட்டி கொள்ள வேண்டும்.

    புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும்.

    சூரியன் மறைந்தபின் இரவில் மட்டும் ஒரு வேளை உண்ண வேண்டும்.

    இரவில் படுக்கையில் படுக்காமல் தரையில் தூங்க வேண்டும்.

    தூங்கும் போது கூட அவ சிந்தனை இல்லாமல் சிவ சிந்தனையோடு தூங்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்து தேய்பிறை சதுர்தசி அன்று கோவில் சென்று பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

    கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மரக்கால் அளவு செந்நெல்லை சதுரமாகப் பரப்பி, அதன் நடுவே மந்திர பூர்வமாகப் பிரணவ எழுத்தை எழுதி, அதன் நடுவில் பூர்ண கும்பம் வைக்க வேண்டும்.

    கும்பத்தில் தர்ப்பையை முறைப்படி சார்த்தி கும்பத்தில் சிவபெருமானை ஆவாகனம் செய்ய வேண்டும்.

    பிறகு முறையாக பூஜை செய்து துதிப்பாடல்களை பாடி வணங்க வேண்டும்.

    பூஜையின் போது நெய்விளக்கு ஏற்றுவது சிறப்பு.

    இப்படி அன்றைய தினம் (சதுர்த்திசியில்) பூஜை முடிந்த பிறகு, மறுநாள், முன்னால் கையில் கட்டிக் கொண்ட சரடை அவிழ்த்து விட்டு பரமேஸ்வரனை வணங்க வேண்டும்.

    கௌதம முனிவர் உபதேசித்த இந்த கேதாரகௌரி விரதத்தை அம்பிகை உமாதேவி கடைப்பிடித்து பரமேஸ்வரனின் இடப்பாகத்தை பெற்றார்.

    அத்துடன் தான் கடைபிடித்த இந்த கேதாரகௌரி விரதத்தை யார் கடைபிடித்தாலும், அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தந்து, முடிவில் சிவன் திருவடிப்பேற்றையும் அடையும் பாக்கியத்தை செய்ய வேண்டும் என்று பரமேஸ்வரனிடம் நமக்காக வேண்டிக் கொண்டார் அம்பிகை.

    குழந்தைக்காக தாய் பத்தியம் இருப்பது போல, நமக்காக அம்பிகை செய்து வழி காட்டிய விரதம் இது.

    இந்த விரதத்தை கடைபிடித்து தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து சகல செல்வங்களையும் பெறலாம்.

    • பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.
    • அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

    "ஆடி" என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர்.

    நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டவன்.

    சிவபெருமான், தம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்தார்.

    சிவனையடையும் பக்தி ஞானம் அவனுக்கிருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை "ஆடி" என்று அழைத்தாள்.

    அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாக அமைந்தது.

    வழிபடுவது எப்படி?

    உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற,

    ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள்.

    அம்மன் கோவில்கள் எங்கும் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள்.

    காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர்.

    வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும்.

    எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர்.

    பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.

    அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

    தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து,

    பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடாற்றுவர்.

    • மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு.
    • பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான்.

    ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை "யோகினி ஏகாதசி' என்றும், வளர்பிறை ஏகாதசியை "சயினி ஏகாதசி' என்றும் குறிப்பிடுவர்.

    குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன் தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான்.

    அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி குஷ்ட நோயால் அவதிப்பட்டான்.

    பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான்.

    இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு.

    மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு.

    மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு திருப்பாற்கடலுக்குச் சென்றவர் ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார்.

    எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

    பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, "பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா" என்றும் ""விட்டல் விட்டல் ஜெய் ஜெய் விட்டல்" என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்.

    • ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்.
    • ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.

    ஆடி அமாவாசை

    ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம்.

    இந்நன்னாளில் சுமங்கலி பூஜையும் செய்கின்றனர்.

    ஆடி கிருத்திகை

    ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்.

    அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து, தண்டபாணியை வணங்குவர்.

    ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.

    ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர்.

    அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

    இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடி மாதத்தில், இறைவழிபாட்டில் தோய்ந்து தெய்வ நிந்தனை பெறுவோம்.

    • ஆடி மாதத்தில் ஜீவ நதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன
    • காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப் பதினெட்டு கொண்டாடப்படுகிறது.

    திருச்சி அருகேயுள்ள நெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது படும்.

    இச்சமயத்தில் சூரிய பூஜை வெகு விமர்சையாக நடைபெறும்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் "ஆடி முளை கொட்டு விழா' பத்து நாட்கள் சிறப்பாக அரங்கேறும்.

    ஆடி மாதத்தில் ஜீவ நதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதை "ஜலப்பிரவாக பூஜை' என்று கூறுவதுண்டு.

    இறைவனின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடி உழவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஊட்டும் நாள் இந்நாள்.

    இதன் அடிப்படையில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப் பதினெட்டு கொண்டாடப்படுகிறது.

    "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப இம்மாதத்தில்தான் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் துவக்குகிறார்கள்.

    திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணமாவதற்காக அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளும் வைபவமும் நடக்கும்.

    • காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்
    • அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

    ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் "ஆடிப்பூரம்` என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம்.

    ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது,

    நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள்.

    காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.

    ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும்,

    மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

    உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

    அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

    • அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள்.
    • ஆடிப் பௌர்ணமி அன்று ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது.

    திருநெல்வேலி காந்திமதியம்மை ஆடித்தபசு, குரு பூர்ணிமா என்ற குரு பூஜை, ஹயக்ரீவ அவதார தினம் ஆகியவை இந்த நாளில் அமைகின்றன.

    ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை உமைக்குக் கொடுத்து காட்சி அளித்த கோலம் அர்த்தநாரி உருவம் (திருச்செங்கோட்டு மூலவர்).

    ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்து காட்சி தந்த திருக்கோலம் சங்கர நாராயணர் கோலம் (திருநெல்வேலி).

    ஆடித் தபசு விழா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று.

    அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள்.

    அதற்கு ஈசன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கூறினார்.

    அம்மையும் ஊசிமுனையில் நின்று தவமியற்ற, இறைவன் ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரத்தில்

    பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் ஒரு பாகனாக காட்சியளித்தார்.

    ஆடி மாதம் இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11ஆம் நாள் திருவிழாதான் ஆடித் தபசு.

    இந்த ஆடிப் பவுர்ணமி அன்று திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது.

    அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.

    காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

    ஆடிப் பௌர்ணமி அன்று ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது.

    இவர் கல்விக்குரிய கடவுள்.

    இவர் வழிபாடு தொன்மையானது.

    இவரின் திருவுருவை புதுவை முத்தியால் பேட்டை ஆலயத்திலும் கடலூர் அருகே திருவஹீந்திரபுரத்திலும் காணலாம்.

    படிக்கும் மாணவர்கள் புத்தகம், பேனா வைத்து வணங்குகின்றனர்.

    ×