search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijay hazare trophy"

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் விளையாடுகிறார். #RohitSharma
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. சமீபத்தில் இவர் தலைமையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்றது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விளையாடவில்லை.

    இதனால் ரோகித் சர்மா ஓய்வில் இருக்கிறார். தற்போது உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ‘ஏ’ பிரிவில் மும்பை அணி முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் ஒருவேளை பீகார் அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.



    இந்நிலையில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி 14-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதிகளில் அரையிறுதியும், 20-ந்தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் திரிபுரா அணியை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
    சென்னை:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, திரிபுராவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த திரிபுரா அணி 46.4 ஓவர்களில் 196 ரன்களுக்கு சுருண்டது.

    தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ரஹில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 31.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அபினவ் முகுந்த் 131 ரன்கள் விளாசி (100 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். தமிழக அணி அடுத்த லீக்கில் வருகிற 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது. #VijayHazareTrophy


    விஜய் ஹசாரே டிராபியில் விஜய் சங்கரின் அபார சதத்தால் தமிழ்நாடு அசாம் அணியை 130 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரா டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - அசாம் அணிகள் மோதின. தமிழ்நாடு டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் என் ஜெகதீசன் 37 ரன்களும், அபிநவ் முகுந்த் 71 ரன்களும் சேர்த்து அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த பாபா இந்திரஜித், விஜய் சங்கர் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    பாபா இந்திரஜி 72 பந்தில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். விஜய் சங்கர் 99 பந்தில் தலா 7 பவுண்டரி, சிக்சர் மூலம் 129 ரன்கள் குவித்தார்கள். முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட தமிழ்நாடு 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது.



    பின்னர் 335 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அசாம் களம் இறங்கியது. தமிழ்நாடு அணியின் நேர்த்தியான பந்து வீச்சாளர் அசாம் 204 ரன்னில் சுருண்டது. யோ மகேஷ், பாபா அபரஜித், வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். #VijayHazareTrophy #ShahbazNadeem
    சென்னை :

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான்- ஜார்கண்ட் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீமின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 28.3 ஓவர்களில் 73 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் 10 ஓவர்களில் 4 மெய்டனுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதில் 5 பேட்ஸ்மேன்களை கிளீன் போல்டு ஆக்கியதும் அடங்கும். லிஸ்ட் ‘ஏ’ வகை போட்டியான ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில்
    சர்வதேசம் மற்றும் உள்ளூர் போட்டி ஒரு வீரரின் சிறந்த பந்து வீச்சாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு 1997-98-ம் ஆண்டு இமாச்சலபிரதேச அணிக்கு எதிராக டெல்லி பவுலர் ராகுல் சாங்வி 15 ரன்னுக்கு 8 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.
     
    சர்வதேச போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 19 ரன்களுக்கு 8 விக்கெட் கைப்பற்றியது சாதனையாக இருக்கிறது. அவற்றை எல்லாம் 29 வயதான ஷபாஸ் நதீம் முந்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி 14.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. #VijayHazare #ShahbazNadeem
    இந்தியாவில் நடைபெறும் லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர் நதீம் சாதனைப் படைத்துள்ளார். #VijayHazareTrophy
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ராஜஸ்தான் - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் ஒன்பது ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. 10-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நதீம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கவுதம் என்ற தொடக்க வீரரை 17 ரன்னில் வீழ்த்தினார். 14-வது ஓவரின் கடைசி பந்தில் லம்பா என்ற மற்றொரு தொடக்க வீரரை 20 ரன்னில் வீழ்த்தினார்.



    அதன்பின் தொடர்ந்து விக்கெட்டுக்களை அள்ளிக்கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசிய நதீம் 4 மெய்டன் ஓவர்களுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

    இவரது பந்து வீச்சால் ராஜஸ்தான் 28.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ரன்னில் சுருண்டது. பின்னர் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜார்க்கண்ட் 14.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இழக்கை எட்டியது.



    10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் லிஸ்ட் ‘ஏ’ போட்டியில்  குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் சங்வி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
    விஜய் ஹசாரோ டிராபியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ஷுப்மான் கில் அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபியில் இன்று ஏராளமான ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் எலைட் குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் - இமாச்சல பிரதேச அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர்களாக மனன் வோரா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். மனன் வோரா 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து மந்தீப் சிங் 39 ரன்களும், யுவராஜ் சிங் 48 ரன்களும், குர்கீரத் சிங் 31 ரன்களும் அடித்தனர். ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் அடித்தார். இவரது சதத்தால் பஞ்சாப் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது.



    பின்னர் 291 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இமாச்சல பிரதேச அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரசாந்த் சோப்ரா 95 ரன்களும், அடுத்து வந்த விக்கெட் கீப்பர் அங்கஷ் பெய்ன்ஸ் 56 ரன்களும் அடித்தனர்.

    மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் வெளியேற இமாச்சல பிரதேசம் 48.3 ஓவரில் 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் பஞ்சாப் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சித்தார்த் கவுல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    விஜய் ஹசாரே டிராபி தொடரில் அறிமுகமாகியுள்ள புதுச்சேரி அணி தனது முதல் ஆட்டத்தில் மணிப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #VijayHazareTrophy
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் முக்கியத்துவம் வாய்ந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி. இந்த தொடரில் விளையாடுவதற்காக யூனியன் பிரதேசம் ஆன பாண்டிச்சேரிக்கு அனுமதி கிடைத்தது.

    அதன்படி பாண்டிச்சேரி முதன்முறையாக விஜய் ஹசாரே தொடரில் களம் இறங்கியது. பிளேட் பிரிவில் இடம்பிடித்துள்ள பாண்டிச்சேரி மணிப்பூரை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் வதோதராவில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற புதுச்சேரி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி மணிப்பூர் முதலில் பேட்டிங் செய்தது. புதுச்சேரி வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மணிப்பூர் 37.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 120 ரன்னில் சுருண்டது.

    புதுச்சேரி அணியி்ன சரக் உதேஷி 4 விக்கெட்டும், சகர் திரிவேதி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புதுச்சேரி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஷஷங் சிங் ஆட்டமிழக்காமல் 69 பந்தில் 63 ரன்கள் அடிக்க 25.3 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான சவுராஷ்டிரா அணியில் புஜாரா, ஜடேஜா இடம்பிடித்துள்ளனர். #Pujara #Jadeja
    இந்தியாவின் முதன்மையான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடராக விஜய் ஹசாரே டிராபி கருதப்படுகிறது. ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகள் இதில் பங்கேற்று விளையாடும். இந்த தொடர் வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதற்கான சவுடிராஷ்டிரா அணியில் புஜாரா, ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இருவரும் இந்திய ஒருநாள் அணியில் சமீப காலமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    சவுராஷ்டிரா தனது முதல் ஆட்டத்தில் 19-ந்தேதி உத்தர பிரதேசத்தை எதிர்கொள்கிறது. அக்டோபர் 4-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தொடங்குவதால் இருவரும் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்பார்கள்.
    இரண்டு மாதத்திற்கு முன்பு தேர்வுக்குழு உறுப்பினராக இருந்து எம்எல்ஏ மகன் ஒருவர், தற்போது சீனியர் அணி வீரராக தேர்வு செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. #BCA
    பீகார் ரஞ்சி டிராபி அணி உள்ளூர் தொடர்களில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், லோதாக கமிட்டியின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஓட்டுதான் போன்ற பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றது.

    இதற்கிடையில் வடகிழக்கு மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வருடத்தில் இருந்து பீகார் அணி ரஞ்சி டிராபியில் விளையாட இருக்கிறது.

    பாட்னா சென்ட்ரல் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ அருண் குமார் சிங்கா. இவரது மகன் ஆஷிஷ். 28 வயதாகும் இவர் கடந்த 2010-ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார். அப்போது ராஜஸ்தானை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் இன்னிங்சில் 16 ரன்களும், 2-வது இன்னிங்சில் 12 ரன்களும் அடித்தார். இந்த ஒரு போட்டியில் மட்டும்தான் அவர் விளையாடியுள்ளார்.

    அதன்பின் முக்கியமான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான பீகார் மாநில அணியை தேர்வு செய்யும் தேர்வாளர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.

    இந்நிலையில் தற்போது இரண்டு மாதங்கள் கழித்து விஜய் ஹசாரே தொடருக்கான பீகார் சீனியர் அணியில் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சக வீரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்வுக்குழுவில் இருந்தவர், தற்போது எப்படி சீனியர் அணிக்கு தேர்வாக முடியும் என்ற கேள்வி எழுந்தது.



    இந்த சர்ச்சை குறித்து ஆஷிஸ் கூறுகையில் ‘‘ஆமாம், நான் தேர்வுக் குழுவில் இடம் பிடித்திருந்தேன். தற்போது நான் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளேன். மேலும், நான் தேர்வுக்குழுவில் குறுகிய காலமே இடம்பிடித்திருந்தேன். அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஏதும் தரப்படவில்லை. பீகார் மாநில கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே தேர்வாளராக இருந்தேன்.

    எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடும்போதும் எனது தந்தை எம்எல்ஏ தான். அதனால் இது எப்படி பிரச்சனையாகும். தற்போது நான் கிளப் அளவினால் போட்டியில் அக்டிவ் ஆக உள்ளேன். பீகார் அணி மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றதும், சீனியர் அணியில் விளையாட விரும்பினேன். பீகார் அணி மீண்டும் ரஞ்சி டிராபியில் விளையாட இருக்கும் நிலையில் அனைவரும் அதற்காக பெருமைப்பட வேண்டும். மாற்றாக வீரர்கள் மீத அவதூறு மறப்பக்கூடாது’’ என்றார்.
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். #Rahane #VijayHazareTrophy
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது. இதற்கான மும்பை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மும்பை அணிக்காக விளையாடுகிறார்.
    ×