என் மலர்

  செய்திகள்

  மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் களம் இறங்குகிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா
  X

  மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் களம் இறங்குகிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் விளையாடுகிறார். #RohitSharma
  இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. சமீபத்தில் இவர் தலைமையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்றது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விளையாடவில்லை.

  இதனால் ரோகித் சர்மா ஓய்வில் இருக்கிறார். தற்போது உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ‘ஏ’ பிரிவில் மும்பை அணி முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் ஒருவேளை பீகார் அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.  இந்நிலையில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி 14-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதிகளில் அரையிறுதியும், 20-ந்தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
  Next Story
  ×