search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Rail"

    • கோவை-சென்னை வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கோவை:

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவையில் இருந்து தினமும் சென்னைக்கு இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் செல்கின்றன.

    இந்த ரெயில்கள் அனைத்தையும் சேர்த்து தினமும் 15 ரெயில்கள் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று வருகிறது.

    இந்திய ரெயில்வே வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவையை கோவை வழித்தடத்திலும் தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்த சூழலில் கோவை-சென்னை வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும். சென்னையில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என உத்தேச தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கோவை மாவட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜமீல் அகமது கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    பகல் நேரத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில் சேவையை போல் இரவிலும் படுக்கை வசதியுடன் கூடிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில் சேவையையும் தொடங்க வேண்டும். கோவையில் இருந்து மதுரை, பெங்களூருவுக்கும் இரவு நேரங்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் முறையில் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கொங்கு குளோபல் போரம் இயக்குனர் நந்தகுமார் கூறும்போது, வந்தே பாரத் ரெயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேறுவது மகிழ்ச்சியாக உள்ளது. கோவை-சென்னை வழித்தடத்தில் பஸ்களை விட ரெயில்களில் பயணம் செய்யவே மக்கள் விரும்புகின்றனர். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    போத்தனூர் ரெயில் பயனாளர் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில் இருந்து பல்வேறு வழித்தடங்களிலும் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பார்வையிட்ட பள்ளி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
    • பா.ஜ.க. சார்பில் மலர் தூவி இனிப்பு வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    சென்னை- பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் மோடி கே.எஸ.ஆர்.பெங்களூரு ரெயில் நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

    முதல் நாளான நேற்று அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் நின்று சென்றது. தென்மேற்கு ெரயில்வே எல்லையை முடித்துக் கொண்டு, தென்னக ரெயில்வே எல்லையான ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.05 மணிக்கு வந்தே பாரத் ெரயில் வந்தடைந்தது.

    அப்போது சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் சச்சின் புனித் உள்ளிட்ட ெரயில்வே உயர் அதிகாரிகள் வந்தே பாரத் ரெயிலை வரவேற்றனர்.

    அப்போது வந்தே பாரத் ரெயிலை பள்ளி பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். அவர்களுக்கு சென்னை கோட்ட பொது மேலாளர் சச்சின் புனித் இனிப்பு வழங்கினார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் உள்ளிட்ட ரெயில்வே துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மலர் தூவி இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    பார்வையாளரின் பார்வைக்காக வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் 10 நிமிடம் நின்று சென்றதால் பார்வையாளர்களும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வந்தே பாரத் ரெயில் முன்பு நின்று தனது செல்போன் மூலம் செல்பி எடுத்தனர்.

    ரெயில் பெட்டிகளில் ஏறி கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வந்தே பாரத், தேக்கத்தின் நாட்களிலிருந்து இப்போது இந்தியா மீண்டதற்கான அடையாளம்.
    • பாரத் கவுரவ் ரெயில் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தலங்களை இணைக்கிறது.

    பெங்களூரு:

    சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர்.ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரத கவுரவ காசி தரிசன ரெயில் பயணத்தையும் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: 


    வந்தே பாரத் ஒரு ரெயில் மட்டுமல்ல, அது புதிய இந்தியாவின் புதிய அடையாளம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது தேக்கத்தின் நாட்களிலிருந்து இப்போது இந்தியா மீண்டதற்கான அடையாளமாகும். இந்திய ரெயில்வேயின் மொத்த மாற்றத்திற்கான இலக்குடன் நாங்கள் செயல்படுகிறோம்.

    400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் விஸ்டா டோம் பெட்டிகள் இந்திய ரெயில்வேயின் புதிய அடையாளமாக மாறி வருகின்றன. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், சரக்கு போக்குவரத்தின் வேகத்தை அதிகரித்து நேரத்தை மிச்சப்படுத்தும். அதிவிரைவு அகலப்பாதை மாற்றம் ரெயில்வேயின் வரைபடத்தில் புதிய பகுதிகளை இணைத்து வருகிறது.

    நமது பாரம்பரியம் கலாச்சாரம் ஆன்மீகம் சார்ந்தது. பாரத் கவுரவ் ரெயில் மூலம் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தலங்கள் இணைக்கப்படுகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை அவை வலுப்படுத்துகின்றன. இந்த ரெயிலின் 9 பயணங்கள் நிறைவடைந்துள்ளன. 


    ஷீரடி கோயில், ஸ்ரீ ராமாயண யாத்திரை, திவ்ய காசி யாத்திரை என எல்லாமே பயணிகளுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இதேபோல் கர்நாடக மக்களுக்கு அயோத்தி, காசி மற்றும் பிரயாக்ராஜ் தரிசனத்தை வழங்கும் பாரத் கவுரவ காசி தரிசன ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை வந்தடைந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்த, வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வரவேற்றார். மேளம் தாளம் முழங்க மலர்கள் தூவி மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • மைசூரில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
    • ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.50 மணிக்கு வருகிறது

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 7-ந் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    இந்த ரெயில் கர்நாடக மாநிலம் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் காட்பாடி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடக மாநில மைசூர் ரெயிலை நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரெயில் தொடங்கி வைக்கிறார்.

    நாளை காலை 10 மணி அளவில் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர், வைட்பீல்டு, பங்காரப்பேட்டை, குப்பம், மல்லானூர், சோமநாயக்கன்பட்டி, ஜோலார்பேட்டை, கேத்தாண்டப்பட்டி, வாணியம்பாடி, விண்ணமங்கலம், ஆம்பூர், குடியாத்தம், லத்தேரி, காட்பாடி, வாலாஜா ரோடு சோளிங்கர், அரக்கோணம், உள்ளிட்ட 44 ரெயில் நிலையங்களில் நாளை ஒரு நாள் மட்டும் ஒரு நிமிடம் நின்று செல்கிறது.

    இந்த ரெயில் மாலை 5.15 மணி யளவில் சென்னை சென்றடைகிறது.

    மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு நாளை மதியம் 12.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில் வந்தடையும் காட்பாடிக்கு 2.25 மணிக்கு வருகிறது. பின்னர் சென்னை நோக்கி புறப்படுகிறது.

    ×