என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தே பாரத் ரெயிலை படத்தில் காணலாம்.
44 ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நாளை ஒரு நாள் மட்டும் நின்று செல்லும்
- மைசூரில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
- ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.50 மணிக்கு வருகிறது
ஜோலார்பேட்டை:
சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 7-ந் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த ரெயில் கர்நாடக மாநிலம் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் காட்பாடி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடக மாநில மைசூர் ரெயிலை நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரெயில் தொடங்கி வைக்கிறார்.
நாளை காலை 10 மணி அளவில் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர், வைட்பீல்டு, பங்காரப்பேட்டை, குப்பம், மல்லானூர், சோமநாயக்கன்பட்டி, ஜோலார்பேட்டை, கேத்தாண்டப்பட்டி, வாணியம்பாடி, விண்ணமங்கலம், ஆம்பூர், குடியாத்தம், லத்தேரி, காட்பாடி, வாலாஜா ரோடு சோளிங்கர், அரக்கோணம், உள்ளிட்ட 44 ரெயில் நிலையங்களில் நாளை ஒரு நாள் மட்டும் ஒரு நிமிடம் நின்று செல்கிறது.
இந்த ரெயில் மாலை 5.15 மணி யளவில் சென்னை சென்றடைகிறது.
மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு நாளை மதியம் 12.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில் வந்தடையும் காட்பாடிக்கு 2.25 மணிக்கு வருகிறது. பின்னர் சென்னை நோக்கி புறப்படுகிறது.






