search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck Accident"

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த தூசி நத்த கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 80). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வந்தவாசி- காஞ்சிபுரம் மெயின் ரோட்டை கடந்து சென்றார்.

    அப்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அங்கு உள்ளவர்கள் முருகேசனை மீட்டு ஆம்புலன்சில் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்க் கொடுங்காலூர் வினோபா நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள் ளனர்.

    நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கீழ்க்கொடுங்காலூர் அம்பேத்கர் நகர் அருகே செல்லும்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராமனின் சட லத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மகன் நாகரா ஜன் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந் தோஷ். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர் கூரில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு நாட்டறம்பள்ளி வழியாக பச் சூர் நோக்கி சென்றுள்ளார்.

    பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் சந்தோஷ் சிறிய காயங்களுடன் அதிர்ஷ் டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • காரியாபட்டி அருகே லாரி மோதி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் வர்கீஸ் நவீன் (16). அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் லாவண்யா (15).

    இவர்கள் இருவரும் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக 2 பேரும் ஆவியூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கிரஷர் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக 2 பேர் மீது மோதியது. இதில் வர்கீஸ்நவீன், லாவண்யா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பைக் நொறுங்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது ராஜ்குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    பேரணாம்பட்டு:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப். ல் இருந்து கனரக லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் தமிழக ஆந்திர எல்லையான பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கிடுகிடுவென 200 அடி பள்ளத்தில் விழுந்தது.

    அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து பேர்ணம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கும்மிருட்டில் லாரி கவிழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது லாரி டிரைவர் வேல்முருகன் ஈடுபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 200 அடி பள்ளத்தில் இருந்து லாரி டிரைவரின் பிணத்தை கயிறு கட்டி மேலே இழுத்து வந்தனர்.

    மேலும் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்காலிகமாக ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.
    • டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை.

    ஆம்பூர்:

    ஆம்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பானுதீன் (வயது 20) இவர் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் லெதர் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி கோடை விடுமுறை என்பதால் தற்காலிகமாக ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை பைக்கில் ெரயில் நிலையம் அருகில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது அப்பானுதீன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருச்சி பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நின்றிருந்த பஸ் மீது மோதியது.
    • தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கே ஆரணி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஆரணி சென்னை சாலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து ஆரணி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்த பஸ் மீது திடீரென மோதியது.

    இதில் 19 மாணவிகளும், 11 மாணவர்களும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    சம்பவம் குறித்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு வந்த சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ மாணவர்களுக்கு ஆறுதல் கூறி டாக்டரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். லேசான காயமடைந்த மாணவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிராவில் லாரி ஒன்றின் டயர் வெடித்து டெம்போ மீது விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
    மகாராஷ்டிராவின் கட்ச் நகரில் இருந்து நாக்பூர் நோக்கி உப்பு ஏற்றப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மல்காபூர் பகுதியில் வந்தபொழுது திடீரென அதன் டயர் வெடித்தது.

    இதனை தொடர்ந்து அதன் ஓட்டுனர் லாரியின் கட்டுப்பாட்டினை இழந்து விட்டார். இதனால் அருகில் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்றின் மீது லாரி விழுந்தது. இதில் 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள். 3 பேர் குழந்தைகள். 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோர் செங்கற்சூளை தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு தங்களது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
    கவுதமாலா நாட்டில் நகராட்சி அலுவலகம் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் லாரி புகுந்து நசுக்கியதில், 30 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் படுகாயமுற்றனர். #GuatemalaAccident
    கவுதமாலா சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது. நகராட்சி அலுவலகம் அருகே இந்த விபத்து நடந்தது. லாரியில் சிக்கிய பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 30 பேர் பலியாகினர்.  இந்த துயர சம்பவத்தில் 17 பேர் படுகாயமுற்றனர். உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கவுதமாலாவின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோர சம்பவத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் செய்துக் கொண்டிருக்கிறோம்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

    இவ்விபத்திற்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கவுதமாலா அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #GuatemalaAccident





    பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். #BiharAccident
    பாட்னா:

    பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பார்ஹ் பாக்தியார்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோவின் மீது சற்றும் எதிர்பாராத விதமாக மோதியது.

    இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். #BiharAccident
    ஈரோடு சோலாரில் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் இருந்து கரூருக்கு மக்காச்சோளம் ஏற்றி கொண்டு நேற்று இரவு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த லாரி நேற்று இரவு 10.30 மணி அளவில் ஈரோடு சோலாரில் சென்ற போது திடீரென தடுப்பு சுவரில் மோதியது.

    மோதிய வேகத்தில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாட்டுக்குள் சிக்கி பழனிசாமி உடல் நசுங்கினார். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    இடிபாட்டுக்குள் சிக்கி பலியான பழனிசாமி உடல் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் சோலார் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. #tamilnews
    ×