search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck Accident"

    • போலீசார் போராடி அப்புறப்படுத்தினர்
    • போக்குவரத்து பாதிப்பு

    செங்கம்:

    பெங்களூருவில் இருந்து லோடுகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நோக்கி செங்கம் வழியாக கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    செங்கம் - போளூர் சாலையில் நேற்றிரவு தாசில்தார் அலுவலகம் அருகே வளைவில் திரும்பும்போது திடீரென கன்டெய்னர் கழிவு நீர் கால்வாயில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு மணி நேரம் போராடி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களை இரவு 10 மணிக்கு மேல் உள்ளே அனுமதித்தால் இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம். இன்று காலை இளம்பிள்ளையை சேர்ந்த டிரைவர் முனிப்பன் என்பவர், பண்ருட்டியில் இருந்து லாரியில் பலாப்பழம் ஏற்றிக்கொண்டு சேலம் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பலாபழங்கள் ரோட்டில் சிதறியது.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

    இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு பஸ் மினி லாரி மீது மோதியது.
    • மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையிலிருந்து உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு விற்ப னைக்காக 1000 முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று காலையில் சென்றது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை சென்னை சாலை அருகே பெரிய ஏரிக்கரை அருகே மினி லாரி வந்துகொண்டிருந்தது. 

    அப்போது எதிரே வந்த சேலம்- புதுவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் இருந்த 1000 முட்டைகளும் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. இதனையடுத்து அந்த வழியாக வந்த 5 மோட்டார் சைக்கிள்களும் சாலையில் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த மினி லாரியை ஓட்டி வந்த டிைரவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கள்ளக்குறிச்சி இருந்து திருக்கோவிலூருக்கு இன்று காலை தனியார் பள்ளி பஸ் ஒன்று சென்றது. அப்போது திருக்கோவிலூர் அருகே பஸ் வந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டர், உதவியாளர், மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் வெவ்வேறு சம்பவத்தில் தனியார் பஸ் மற்றும் மினி லாரி விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

    • விபத்து குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை ஓரப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.

    வேடசந்தூர்:

    மகாராஷ்டிராவில் இருந்து ராட்சத காற்றாலையை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள அய்யர் மடம் தனியார் மில் அருகே வந்தபோது திடீரென பழுதானது.

    இதனால் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து லாரியை ஓரமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்தினர்.

    அப்போது தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை முசிறியைச் சேர்ந்த ராஜா (50) என்பவர் ஓட்டி வந்தார்.

    அதிகாலை 4 மணி அளவில் லாரியை ஓட்டி வந்த ராஜா சற்று கண் அயர்ந்துவிட்டார். இதனால் சாலையில் பழுதாகி நின்ற காற்றாலை ஏற்றி வந்த லாரி மீது மோதினார்.

    அந்த சமயத்தில் முன்னால் சென்ற காரையும் கவனிக்காமல் அதன் மீது மோதி பின்னர் காற்றாலையின் இறக்கை மீது லாரி மோதி நின்றது. இதில் காரில் வந்த சாந்தராஜன் (25) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி டிரைவர் ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை ஓரப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஏஜர் (வயது 20). இவர் சென்னை ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று ஏஜரும், அவரது நண்பர் மோகன்(20) என்பவரும் மோட்டார் பைக்கில் சோளிங்கர் நோக்கி சென்றனர். பைக்கை ஏஜர் ஓட்டி சென்றார்.

    வாலாஜா அடுத்த சித்தாத்தூரில் தனியார் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஏஜர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம டைந்த மோகன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் ஏஜர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுத்தடுத்து ஒரே இடத்தில் தொடரும் விபத்து
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ராணிப் பேட்டை முத்துக்கடை நோக்கி நேற்று இரவு எம்.பி.டிசாலை யில் வந்து கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே வரும் போது கன்டெய்னர் லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கன்டெய்ன ரின் முன் பகுதி சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த விபத்து நடைபெற்ற அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி, பஸ்சில் இருந்த 6 பேர் காயமடைந்தனர்.

    சாலையை அகலப்படுத்தாமல் சாலையின் மையப்பகுதி யில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாலும், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இதை தவிர்க்க உடனடியாக சாலையை அகலபடுத்தி, சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து ஜெனரேட்டர் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்தது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்தபோது கலெக்டர் அலுவலகம் அருகே பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த ஜெனரேட்டர் கீழே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்து கிரேன் மூலம் லாரி மற்றும் ஜெனரேட்டரை மீட்டு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்து விபரீதம்
    • அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று ஏலகிரி மலை அழைக்கப்படுகிறது.

    இந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் தண்ணீர் சப்ளை செய்யும் லாரி நேற்று வழக்கம் போல் அத்தனாவூர் அருகே முருகன் கோவிலில் இருந்து பாடனூர் பகுதியில் தண்ணீர் ஏற்றிச் செல்வ தற்காக அத்தனாவூர் நிலாவூர் செல்லும் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

    இதனால் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தினர். நிலாவூர் செல்லும் சாலை மிகவும் குறுகிய வளைவு சாலையாக உள்ளது.

    இது போன்ற விபத்து அடிக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    மேலும் நேற்று முன்தினம் ஏலகிரி மலையில் கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    பெங்களூரில் இருந்து நேற்று முன் தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு, வேலுார் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    வாலாஜா பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெயபிரகாஷ் (42) என் பவர் பஸ்சை ஓட்டி வந்தார். லட்சுமிபுரம் அருகே 6 வழிச்சாலையில் சென்ற போது, முன்னாள் வேகமாக சென்று கொண்டிருந்த மினிலாரி, தடுப்புச்சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

    அதேநேரம், பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மினிலாரி மீது மோதியது. இதில், பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மினிலாரி டிரைவர் வேலன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராஜேந்திரன், சுந்தரி, குமார், சந்தோஷ் முருகன் உட்பட 8 பேர் காய மடைந்தனர். அதே நேரம், பஸ்சிலிருந்த 25-க்கும் அதிகமான பயணிகள் காயமின்றி தப்பினர்.

    விபத்து பற்றி தகவலறிந்த நாட்றம் பள்ளி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, விசாரித்த னர். பின்னர், விபத்தில் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்காட்டை சேர்ந்தவர்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆம்பூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சென்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). லாரி டிரைவர்.

    இவர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து லாரியில் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை குமுடிபூண்டி பகுதிக்கு செல்வதற்காக ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது நொண்டி குப்பம் அருகே வரும்போது சேலம் அடுத்த மேட்டூர் பகுதியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றி க்கொண்டு சென்னை செல்வதற்காக முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது சிவகுமார் ஓட்டி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு ள்ளானது.

    இதில் சிவகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் கிரானைட் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பனப்பாக்கம் அடுத்த தென் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது70) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரண த்தினால் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் மருத்துவமனைக்கு சென்று பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த கல்கத்தா காளியம்மன் கோவில் அருகே வரும்போது பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கங்காதரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் கங்காதரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • டிரைவர் தவிப்பு
    • 1 மணி நேரம் போராடி மீட்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி பகுதியில் ரெயில்வே துறை சார்பில் உயர தடுப்பு அளவு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே துறை சார்பில் அளவுக்கு அதிகமாக ‌ லோடு ஏற்றி வரும் ‌ லாரி மற்றும் உயரத்தை தடுக்கும் வண்ணமாக ஐகேஜ் எனப்படும் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வந்த லாரி டிரைவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.

    அப்போது பந்தரபள்ளி பகுதியில் அமைந்துள்ள உயர தடுப்பு அளவு கம்பியில் லாரி சிக்கிக்கொண்டது அதன்பின்னர் செய்வதறியாமல் திகைத்த டிரை வர்அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி லாரியை எடுத்துச் சென்றார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×