search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் லாரி திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்து
    X

    தண்ணீர் லாரி திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்து

    • கட்டுப்பாட்டை இழந்து விபரீதம்
    • அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று ஏலகிரி மலை அழைக்கப்படுகிறது.

    இந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் தண்ணீர் சப்ளை செய்யும் லாரி நேற்று வழக்கம் போல் அத்தனாவூர் அருகே முருகன் கோவிலில் இருந்து பாடனூர் பகுதியில் தண்ணீர் ஏற்றிச் செல்வ தற்காக அத்தனாவூர் நிலாவூர் செல்லும் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

    இதனால் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தினர். நிலாவூர் செல்லும் சாலை மிகவும் குறுகிய வளைவு சாலையாக உள்ளது.

    இது போன்ற விபத்து அடிக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    மேலும் நேற்று முன்தினம் ஏலகிரி மலையில் கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×