search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tripura"

    அரசு அதிகாரிகள் பணி நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிய கூடாது என திரிபுரா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    அகர்தலா:

    திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடு தொடர்பாக முதன்மை செயலாளர் சுஷில் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ``பொதுவாக அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

    மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், பல அரசு அதிகாரிகள்  அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

    எனவே, திரிபுராவில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. மேலும், அலுவலக ஆலோசனைக் கூட்டங்களின்போது அரசு அதிகாரிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைக்க வேண்டும். இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    திரிபுராவில் மண்சரிவில் இருந்து ரெயிலை நிறுத்தி அதில் பயணம் செய்த 2000 பேரின் உயிரை காப்பாற்றிய பழங்குடி இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அம்மாநில மந்திரி விருந்தளித்து பாராட்டியுள்ளார். #Somati #Tripura #9yearoldSaviour

    அகர்தலா:
     
    திரிபுரா மாநிலம் தன்சேரா பகுதியை சேர்ந்தவர் சோமதி என்ற 9 வயது பழங்குடி இன சிறுமி. அவரின் குடும்பத்தினர் அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     
    அம்மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளால் பல இடங்களில் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. சிலர் உயிரிழந்துள்ளனர். தன்சேரா பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சுமதி தனது தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுடன் தன்சேராவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் மூங்கில் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் தரம் நகரிலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவை பற்றி தகவல் தெரியாததால் அந்த ரெயில் அந்த வழியாக சென்றுள்ளது.


     
    இதையடுத்து, ரெயில் வருவதை கவனித்த சிறுமி மற்றும் அவளது தந்தை இருவரும் உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி ரெயிலை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இதை கவனித்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 2000 மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. 

    இந்த சிறுமி மற்றும் அவளது தந்தையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த சிறுமியின் தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுக்கு ரெயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.


     
    இந்நிலையில், திரிபுரா மாநில சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி சுதிப் ராய் பர்மன் அந்த சிறுமி மற்றும் அவளது தந்தை ஆகியோரை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டினர். அதோடு அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்வித்தார்.  #Somati #Tripura #9yearoldSaviour
    வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். #AssamFlood #NEflood

    கவுஹாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த மழையினால் இதுவரை 12 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 6 பேரும், அசாம் மாநிலத்தில் 3 பேரும், திரிபுராவில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood #NEflood
    மேற்கு வங்காள கவர்னர் கேஷரி நாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக திரிபுரா மாநில கவர்னராகவும் செயல்படுவர் என ஜனாதிபதி மாளிகை இன்று அறிவித்துள்ளது. #KeshariNathTripathi
    புது டெல்லி :

    திரிபுரா மாநில கவர்னர் டதகாத ராய் விடுமுறையில் சென்றிருப்பதால்,  மேற்கு வங்காள கவர்னர் கேஷரி நாத் திரிபாதிக்கு அம்மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒதுக்கீடு செய்துள்ளார் என ஜனாதிபதி மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ஆனால், திரிபுரா மாநில கவர்னர் டதகாத ராய் விடுமுறையில் சென்றிருப்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #KeshariNathTripathi
    ×