search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sunglasses"

    வாய்ஸ் அசிஸ்டன்ட், மியூசிக், அழைப்புகளை மேற்கொள்வது என பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் போஸ் நிறுவனம் புது வகை கண்ணாடியை அறிமுகம் செய்திருக்கிறது. #boseframes


      
    போஸ் நிறுவனம் ஃபிரேம்ஸ் என்ற பெயரில் புது பிரீமியம் கண்ணாடிகளை அறிமுகம் செய்துள்ளது. கண் பாதுகாப்பு மட்டுமின்றி புது கண்ணாடி மூலம் போஸ் நிறுவனம் வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் மைக்ரோ-அகௌஸ்டிக்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    ஓபன்-இயர் வடிவமைப்பு கொண்டிருப்பதால், ஃபிரேம்ஸ் கண்ணாடி மியூசிக் ஸ்டிரீம், அழைப்புகளை மேற்கொள்ளவும், அழைப்புகளை ஏற்பது மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. ஆடியோ வடிவில் பாடல்கள், பிளே லிஸ்ட்கள், உரையாடல்கள் போன்றவற்றை கேட்க முடியும்.

    போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி இருவித டைம்லெஸ் ஸ்டைல்கள், ஸ்கொயர் மற்றும் ஆங்கிள்டு அல்லது வட்டம், சிறியளவுகளில் கிடைக்கிறது. இந்த கண்ணாடி 99% UVA/UVB கதிர்களை முடக்குவதோடு சீராக பொருத்தப்பட்ட சிறிய அளவிலான லென்ஸ்கள், தங்க முலாம் பூசப்பட்ட ஸ்டீல் ஹின்ஜ்கள் மற்றும் சார்ஜிங் பின்களை கொண்டிருக்கிறது.



    இவை ஸ்கிராட்ச் மற்றும் ஷேட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டிருப்பதோடு 45 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதனால் இந்த கண்ணாடிகளை பயன்படுத்த சவுகரியமாக இருக்கும். ப்ளூடூத் வசதி கொண்டிருப்பதால், போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடிகள் உண்மையான வயர்லெஸ் ஹெட்போன்களை போன்று இயங்குகின்றன.

    அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் மைக்ரோபோன், பல்வேறு ஆப்ஷன்களை இயக்கும் பட்டன் கண்ணாடியின் வலதுபுறம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டன் கொண்டு சிரி, கூகுள் அசிஸ்டண்ட், வாய்ஸ் கால், கமாண்ட், பாடல்களை ஸ்கிப் அல்லது பாஸ் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.

    போஸ் கனெக்ட் ஆப் பல்வேறு கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. போஸ் ஃபிரேம்ஸ் ஏ.ஆர். வசதி கொண்டிருக்கிறது. மற்ற ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகளை போன்று இல்லாமல் போஸ் ஏ.ஆர். நீங்கள் லென்ஸ் அல்லது போன் கேமரா கொண்டு கண் விழியில் பார்க்கும் பொருட்களை மாற்றாது. 



    மாறாக இது, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிந்து நீங்கள் பார்க்கும் விஷயத்தை 9-ஆக்சிஸ் ஹெட் மோஷன் சென்சார் மூலம் அறிந்து கொள்ளும். பின் உங்களது ஐ.ஓ.எஸ். அல்லது ஆன்ட்ராய்டு சாதனத்தில் உள்ள ஜி.பி.எஸ். பயன்படுத்தி தானாக ஆடியோவினை சேர்த்துக் கொள்ளும். 

    போஸ் ஃபிரேம்ஸ் லித்தியம் பேட்டரி பயன்படுத்துகிறது. இதனுடன் போகோ-பின் கேபிள் சார்ஜிங் செய்ய வழங்கப்படுகிறது. போஸ் ஃபிரேம்ஸ் மேட் பிளாக் நிறத்தில் இருவித சர்வதேச ஸ்டைல்கள் - பெரிய (ஆல்டோ) மற்றும் சிறிய (ரோன்டோ) கிடைக்கிறது.

    அமெரிக்காவில் ஜனவரி 2019 முதல் கிடைக்கும் போஸ் ஃபிரேம்ஸ் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,037) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    அரசு அதிகாரிகள் பணி நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிய கூடாது என திரிபுரா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    அகர்தலா:

    திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடு தொடர்பாக முதன்மை செயலாளர் சுஷில் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ``பொதுவாக அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

    மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், பல அரசு அதிகாரிகள்  அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

    எனவே, திரிபுராவில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. மேலும், அலுவலக ஆலோசனைக் கூட்டங்களின்போது அரசு அதிகாரிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைக்க வேண்டும். இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ×