search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato Prices Fall"

    • தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • கடந்த மாதம் நாட்டுத் தக்காளி உழவர் சந்தையில் கிலோ ரூ. 40 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை உச்சத்தில் இருந்த தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    சேலத்துக்கு தம்மம்பட்டி, மல்லூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், தாரமங்கலம், இளம்பிள்ளை, அரியானூர் ஆகிய இடங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களாக தக்காளி வரத்து மிகவும் குறைந்து இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை, அரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்தும் சேலத்துக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், சேலம் உழவர்சந்தையிலும், வெளி மார்க்கெட்டிலும் தக்காளி விலை உயர்ந்தது. கடந்த மாதம் நாட்டுத் தக்காளி உழவர் சந்தையில் கிலோ ரூ. 40 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவ மழை கைகொடுத்ததை அடுத்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட், உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மார்க்கெட்டு களில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு:-

    தக்காளி-ரூ.10, உருளைக்கிழங்கு ரூ.40,35, சின்னவெங்காயம் ரூ. 70,60, பெரிய வெங்காயம்- ரூ. 35,30,25, பச்சை மிளகாய் - ரூ.28,25, கத்தரிகாய்- ரூ. 50,30, வெண்டைக்காய்- ரூ. 18,15, முருங்கைக்காய்- ரூ. 90,70, பீர்க்கன்காய்- ரூ. 26,20, சுரைக்காய்- ரூ. 20,15, புடலங்காய் - ரூ. 24,20, பாகற்காய்- ரூ. 40,36, தேங்காய்- ரூ. 30,25, முள்ளங்கி- ரூ. 16,14, பீன்ஸ் - ரூ. 28, அவரை(பட்டை)- ரூ. 40, புஸ் அவரை- ரூ. 50, கேரட்- ரூ. 50, வாழைப்பழம்- ரூ.40,30,25, கீரைகள்-ரூ. 20,15, பப்பாளி- ரூ. 25,20, கொய்யா- ரூ. 40, சப்போட்டா- ரூ. 40, மாதுளை- ரூ. 180, அன்னாசி- ரூ. 80,60, சாத்துகொடி-ரூ. 60, ஆப்பிள்- ரூ.120,100.

    • சந்ைதயில் ஒரு கிலோ தக்காளி ரூ.13க்கு விற்பனையாகி வருகிறது.
    • சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கோவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தையில் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

    ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு தொண்டா–முத்தூர், நாச்சிபாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது சந்தைக்கு அதிகளவிலான தக்காளி வந்து கொண்டிருக்கிறது.

    ஆனால் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகி வந்தது.

    தற்போது உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10ல் இருந்து ரூ.13 வரை விற்பனையாகிறது.

    தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து உழவர் சந்தையில் கடை நடத்தி வரும் சுரேஷ் என்பவர் கூறியதாவது:-

    சந்தைக்கு கோவை தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. தக்காளிகள் அதிகமாக வந்தாலும் விலை குறைவாகவே காணப்படுகிறது.

    கடந்த 1½ மாதங்களாக தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரை விற்பனை–யாகி வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது என்றார்.

    ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    தக்காளி-ரூ.13, கத்திரி-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.30 முதல் ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.35, சின்னவெங்காயம்-ரூ.70, பெரிய வெங்காயம்-ரூ.26க்கு விற்பனையாகிறது.

    • திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்திலேயே மிகப்பெரிய 2-வது மார்க்கெட்டாக உள்ளது.
    • தற்பொழுது ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்திலேயே மிகப்பெரிய 2-வது மார்க்கெட்டாக உள்ளது. ஒட்டன்சத்திரம் காந்தி மற்றும் காமராஜர் ஆகிய காய்கறி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனைத்து விதமான ஆயிரக்கணக்கான டன் காய்கறிகள் லாரிகள் மூலம் தினமும் அனுப்பப்படுகிறது.

    தற்பொழுது ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தக்காளி நடவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.60 முதல் ரூ.80 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்பொழுது ஒரு பெட்டி தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. பெங்களூரு, ஆந்திரா, கோவை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் அதிகளவு தக்காளி விளைச்சல் இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வரவில்லை.

    இதனால் உள்ளூர் வரத்து அதிகரித்து வாங்க ஆள்இல்லாமல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற சந்தைகளிலும் தக்காளி விைல வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விலை வீழ்ச்சியில் இருந்து சற்று உயர்ந்து வந்த தக்காளி விலை தற்போது மீண்டும் சரிய தொடங்கியிருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் நிரந்தர விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அய்யலூர் சந்தையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை, கொம்பேரிபட்டி, புத்தூர், பஞ்சந்தாங்கி, சுக்காம்பட்டி, சீலக்காத்திநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஹைபிரிட் வகை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    எப்போதும் ஆடி மாதம் முடிந்தபிறகு முகூர்த்த நாட்கள் அதிகரிக்கும் என்பதால் அதிக விலை கிடைக்கும். அதனை நம்பி ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர்.

    ஆனால் அய்யலூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 விலைக்கே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி வந்துள்ளதால் உள்ளூர் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளிக்கு விலை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    கடந்த வருடத்தில் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் விவசாயிகள் தாங்கள் செலவு செய்த பணம், பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு வரும் செலவு போன்ற தொகை கூட கிடைக்க விலை என வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×