search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
    X

    அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

    அய்யலூர் சந்தையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை, கொம்பேரிபட்டி, புத்தூர், பஞ்சந்தாங்கி, சுக்காம்பட்டி, சீலக்காத்திநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஹைபிரிட் வகை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    எப்போதும் ஆடி மாதம் முடிந்தபிறகு முகூர்த்த நாட்கள் அதிகரிக்கும் என்பதால் அதிக விலை கிடைக்கும். அதனை நம்பி ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர்.

    ஆனால் அய்யலூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 விலைக்கே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி வந்துள்ளதால் உள்ளூர் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளிக்கு விலை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    கடந்த வருடத்தில் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் விவசாயிகள் தாங்கள் செலவு செய்த பணம், பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு வரும் செலவு போன்ற தொகை கூட கிடைக்க விலை என வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×