search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் தக்காளி விலை 10 ரூபாயாக சரிவு
    X

    சேலத்தில் தக்காளி விலை 10 ரூபாயாக சரிவு

    • தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • கடந்த மாதம் நாட்டுத் தக்காளி உழவர் சந்தையில் கிலோ ரூ. 40 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை உச்சத்தில் இருந்த தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    சேலத்துக்கு தம்மம்பட்டி, மல்லூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், தாரமங்கலம், இளம்பிள்ளை, அரியானூர் ஆகிய இடங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களாக தக்காளி வரத்து மிகவும் குறைந்து இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை, அரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்தும் சேலத்துக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், சேலம் உழவர்சந்தையிலும், வெளி மார்க்கெட்டிலும் தக்காளி விலை உயர்ந்தது. கடந்த மாதம் நாட்டுத் தக்காளி உழவர் சந்தையில் கிலோ ரூ. 40 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவ மழை கைகொடுத்ததை அடுத்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட், உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மார்க்கெட்டு களில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு:-

    தக்காளி-ரூ.10, உருளைக்கிழங்கு ரூ.40,35, சின்னவெங்காயம் ரூ. 70,60, பெரிய வெங்காயம்- ரூ. 35,30,25, பச்சை மிளகாய் - ரூ.28,25, கத்தரிகாய்- ரூ. 50,30, வெண்டைக்காய்- ரூ. 18,15, முருங்கைக்காய்- ரூ. 90,70, பீர்க்கன்காய்- ரூ. 26,20, சுரைக்காய்- ரூ. 20,15, புடலங்காய் - ரூ. 24,20, பாகற்காய்- ரூ. 40,36, தேங்காய்- ரூ. 30,25, முள்ளங்கி- ரூ. 16,14, பீன்ஸ் - ரூ. 28, அவரை(பட்டை)- ரூ. 40, புஸ் அவரை- ரூ. 50, கேரட்- ரூ. 50, வாழைப்பழம்- ரூ.40,30,25, கீரைகள்-ரூ. 20,15, பப்பாளி- ரூ. 25,20, கொய்யா- ரூ. 40, சப்போட்டா- ரூ. 40, மாதுளை- ரூ. 180, அன்னாசி- ரூ. 80,60, சாத்துகொடி-ரூ. 60, ஆப்பிள்- ரூ.120,100.

    Next Story
    ×