search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thug act"

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாராய மற்றும் கஞ்சா தடுப்பு வேட்டை நடத்தப்பட்டடது.

    இதில் 10 கஞ்சா வழக்குகளும், 50 சாராய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 60 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சா, 55 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை பற்றி மாவட்ட, மாநில காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    மேலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    • எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை
    • 85 வாகனங்கள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தொடர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 லாரிகள், 1 பொக்லைன், 14 டிராக்டர், 49 மாட்டு வண்டிகள் என மொத்தம் 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதில், கடத்தப்பட்ட 37 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேல்பாடி அருகே பொன்னையாற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள் மற்றும் விருதம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு மாட்டு வண்டியை போலீசார் நேற்று பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எச்சரிக்கை

    வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
    • ெஜயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் சுதர்சன் (வயது 19). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரவி (36). இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    இருவரும் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இருவரிடமும் குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

    • மணியங்காளிபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் கரடி மணி. இவரது மகன் விக்ரம் (வயது 22).
    • காவிரி ஆற்று பகுதியில் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டதால் அவரை மோகனூர் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மணியங்காளிபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் கரடி மணி. இவரது மகன் விக்ரம் (வயது 22).

    இவர் மோகனூர் சுற்று வட்டார பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து விக்ரம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் மோகனூர் காவிரி ஆற்று பகுதியில் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டதால் அவரை மோகனூர் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதை தொடர்ந்து மோகனூர் தாலுகா நீதிபதி சுப்பிரமணி முன்னிலையில் விக்ரம் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது, ஏற்கனவே உறுதி அளித்த படி செயல்படா ததாலும், மீண்டும் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்ட தாலும் அவரை நீதிபதி சுப்ரமணி, மேலும் 10 மாதங்களுக்கு ஜாமீன் இன்றி சிறையில் இருக்க உத்தரவிட்டார். இதையடுத்து விக்ரம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 2 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசனின் மகன் ரோஹித் ராஜ்(வயது 14). இவன் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில், அவனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் (22), திருநகரை சேர்ந்த அய்யனார் (23) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் ஆகிய 5 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இதில் சீனிவாசன், அய்யனாரை திருச்சி மத்திய சிறையிலும், 3 சிறுவர்களை இளம்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.

    இந்நிலையில் சீனிவாசன், அய்யனார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று சீனிவாசன், அய்யனார் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

    • ஜெயிலில் அடைத்தனர்
    • வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் ஓல்ட் டவுன் உத்திர மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் என்கிற விக்கி (வயது 25). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு சம்பந்தமாக விக்னேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    விக்னேஷ் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் விக்னேஷை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை ஜெயிலில் உள்ள விக்னேஷிடம் போலீசார் கொடுத்தனர்.

    • அக்கம் பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்தனர் குடியாத்தம் டவுன் போலீசில் அவரை ஒப்படைத்தனர்
    • குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி இரவு பிரசவ வார்டுக்குள் அத்துமீறி மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

    அவர் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய முயன்றுள்ளார் அப்போது அந்த கர்ப்பிணி பெண் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்தனர் குடியாத்தம் டவுன் போலீசில் அவரை ஒப்படைத்தனர்.

    அவர் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சுகுமார் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பிரசவ வார்டுக்குள் அத்துமீறி நுழைந்து கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏ ற்படுத்தியது.

    இந்த வழக்கில் ெஜயிலில் உள்ள சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார் கலெக்டர் நேற்று சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • கலெக்டர் பிரதீப் குமார், கஞ்சா வழக்கில் கைதான கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
    • போலீசார் கோமதியை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவரது மனைவி கோமதி (வயது 52). இவர் சமீபத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் ராம்ஜி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் அவரை மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த காரணத்தால் கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார்,கஞ்சா வழக்கில் கைதான கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.


    • கலெக்டர் உத்தரவு
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறியில் ஈடு பட்ட அரக்கோணம் வெங்கடேசபு ரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கரண் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் குற்ற செயல்களை கட்டுப்ப டுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கரணை கைது செய்ய உத்தர விட்டார்.

    இதனையடுத்து கரணை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மஷார் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி சாந்தி (வயது 31). இவர், சாராயம் விற்றதாக போலீசார் கைது செய்தனர்.

    இவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதைத் தொடர்ந்து சாந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    • கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54), தையல் தொழிலாளி.

    இவர் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணா மலையில் இருந்து நல்ல வன்பாளையம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி வந்த மர்ம நபர்கள் தாமரை நகர் அருகில் ஆறுமுகத்தை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மறைந்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் தண்டராம்பட்டு அருகில் உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவர் கூலிப்படையை ஏவி ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பரந்தாமன் உள்பட கூலிப்படையை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.

    ஆறுமுகம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள வரகூரை சேர்ந்த பரந்தாமன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த திருவண்ணாமலை சாரோனை சேர்ந்த இசக்கியல், மோசஸ், தமிழரசன், கலசபாக்கம் சாலையனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் முருகேஷிற்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பரந்தாமன், இசக்கியல், மோசஸ், தமிழரசன், பாரதி ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீசார் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • கள்ள சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது
    • போலீசார் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்ற சரித்திர பதிவேடுகள் கொண்ட குற்றவாளிகளை எச்சரித்து பிரமாண பத்திரம் எழுதி வாங்கி எச்சரிக்கை விடுக்கின்றனர். பலர் கைது செய்யப்படுகிறார்கள்.

    இருந்தபோதிலும் சில குற்றவாளிகள் மீண்டும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். எனவே போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி கடந்தாண்டில் மட்டும் 116 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஜெயிலில் இருந்து வெளியே வரும் நபர்கள் மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை தடுக்க சில மலைக்கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 35 பேர் குண்டர் சட்டத்தில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்தாண்டில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் என 80 பேர் மீதும், மணல் கடத்தியதாக ஒருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

    ×