search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thug act"

    • பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்
    • கலெக்டர் உத்தரவிட்டார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்தவர் மணி (வயது 24).

    தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    ஒரு வழக்கு சம்பந்தமாக மணி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). கள்ளச்சாராய வியாபாரி.

    இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். வேலூர் தாலுகா போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    பரிந்துரையை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இருவரிடமும் குண்டர் சட்டத்தில் கைதான நகலை ஜெயிலில் உள்ள மணி, ராஜ்குமார் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.

    • ஆனந்தராஜ், சிவா ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.
    • அதற்கான நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    பெரம்பலூர் :

    சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, மணிவிழுந்தான் அருகே ஏட்டுக்காட்டை சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் ஜீவா என்ற ஆனந்தராஜை (வயது 27) நாட்டு சாராயம் விற்ற வழக்கில் பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா, தேவையூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் கள்ளக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் சிவா (28) மங்களமேடு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆனந்தராஜ், சிவா ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று ஆனந்தராஜ், சிவா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    • நித்தியானந்தத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
    • இவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததால் கடந்த மே மாதம் அரியலூர் போலீசார் அவரை கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் ராஜீவ்நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 26). இவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததால் கடந்த மே மாதம் அரியலூர் போலீசார் அவரை கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நித்தியானந்தத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் சிறையில் இருந்த நித்தியானந்தத்தை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்து அதற்கான உத்தரவு நகலை சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினார்கள்.



    • மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
    • 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆற்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் (37), முனியாண்டி (55) ஆகிய 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்ப ட்டனர்.

    போக்சோவில் கைது செய்யப்பட்ட 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார்.

    அதன்படி கலெக்டர் வளர்மதி, சந்திரன், முனியாண்டி ஆகிய 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார்
    • குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை மதியழகனிடம் போலீசார் வழங்கினர்.

    பெரம்பலூர் :

    தஞ்சை மாவட்டம், வல்லம்புதூர் அருகே கருவாடிப்பட்டி கிராமத்தில் உள்ள மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மதி என்ற மதியழகன்(வயது 38). இவர் மீது பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மதியழகனை, மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள மதியழகனிடம் மங்களமேடு போலீசார் நேற்று வழங்கினர்.

    • வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சிக்கினார்.
    • குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சிமாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(38) அவரது வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நட வடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், சாராய வியாபாரி ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் , ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

    • வழிப்பறியில் ஈடுபட்டதால் நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த சூர்யா (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் கலெக்டர் வளர்மதி, சூர்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நல்லாளம் கிராமத்தில் அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரம்மதேசம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்

    • கலெக்டர் வளர்மதி உத்தரவு
    • சிறையில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் ( 29), கோவிந்தசேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (19) இவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை வாலாஜா போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேர் மீதும் வாலாஜா போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்கு களும் நிலுவையில் உள்ளது.

    இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி கலெக்டர் வளர்மதியிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் வளர்மதி, 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி வழக்கு, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன
    • ரவிகரணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்திரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் துறைமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ரவிகரண் (வயது 30). இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி வழக்கு, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் ரவிகரண் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரம்பலூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான ரவிகரணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்திரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் கற்பகம் உத்திரவின் பேரில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிகரண் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், ரவிகரணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

    • பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.
    • பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). இவர்17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்கார செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.

    அவரின் பரிந்துரையை ஏற்று பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் நேற்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி மத்திய சிறை உயர் அதிகாரிகளிடம் வழங்கினர். பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

    • குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
    • விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கடந்த மூன்று நாட்களில் (14, 15, 16.05.2023) ஆகிய 3 நாட்களில் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் நடத்திய தீவிர மதுவிலக்கு வேட்டையில் 96 கள்ள சாராய வழக்குகள் பதியப்பட்டும், அதில் 92 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 8,31,950 மதிப்பு உடைய விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,என்றும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581)மூலம் கள்ளச்சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனையை குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×