என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 வாலிபர்கள்வே குண்டர் சட்டத்தில் கைது
- பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்
- கலெக்டர் உத்தரவிட்டார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்தவர் மணி (வயது 24).
தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு வழக்கு சம்பந்தமாக மணி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). கள்ளச்சாராய வியாபாரி.
இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். வேலூர் தாலுகா போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரிடமும் குண்டர் சட்டத்தில் கைதான நகலை ஜெயிலில் உள்ள மணி, ராஜ்குமார் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.






