என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருட்டு வழக்குகளில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
Byமாலை மலர்28 Jun 2023 7:03 AM GMT
- மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார்
- குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை மதியழகனிடம் போலீசார் வழங்கினர்.
பெரம்பலூர் :
தஞ்சை மாவட்டம், வல்லம்புதூர் அருகே கருவாடிப்பட்டி கிராமத்தில் உள்ள மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மதி என்ற மதியழகன்(வயது 38). இவர் மீது பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மதியழகனை, மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள மதியழகனிடம் மங்களமேடு போலீசார் நேற்று வழங்கினர்.
Next Story
×