search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theppa thiruvizha"

    • 40 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பம் உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • தெப்பம் 3 முறை வலம் வந்தது.

    திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறாமல் இருந்து வந்தது.

    40 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பம் உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 25 அடி நீளமும், 25 அடி அகலத்துடன் பிரமாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்ட தெப்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தெப்பத்தின் வெள்ளோட்டம் 14-ந்தேதி நடந்தது.

    இதையடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி தெப்பத்தில் எழுந்தருளினர்.

    இதை தொடர்ந்து தெப்பம் 3 முறை வலம் வந்தது. இதில் செயல் அலுவலர் கவியரசு, தாசில்தார் ராஜ்குமார், மண்டல துணை தாசில்தார், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ரேவதி, துணை சுகாதார இயக்குனர் விஜயகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று மாலை 5.15 மணிக்கு தாயார் தெப்ப மண்டபம் வந்தடைடுகிறார்.
    • நாளை தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சேர்ந்தடைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைடுகிறார்.

    மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம் அமுது, தீர்த்த கோஷ்டி நடைபெறும். அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நாச்சியார் தெப்பம் கண்டருளுகிறார். இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார்.

    இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். அங்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    • கடந்த 40 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறாமலேயே நின்றுள்ளது.
    • கடந்த 27-ந்தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

    திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசத்தன்று தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறாமலேயே நின்றுள்ளது. கடந்த 27-ந்தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. மண்டல பூஜை பூர்த்தி நாளான இன்று(வியாழக்கிழமை) இரவு 7 மணி அளவில் தெப்ப உற்சவம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தையொட்டி 25 அடி நீளமும், 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு தெப்ப உற்சவம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரவிச்சந்திரன், பொது பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் ரஞ்சித், கோவில் செயல்அலுவலர் கவியரசு, ஊராட்சி மன்ற தலைவர் லேகாகாரல் மார்க்ஸ், ஊராட்சி செயலர் ஆரோக்கியமேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தங்க பல்லக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடந்தது.

    முன்னதாக பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி நாச்சியார்களுடன், சவுரிராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார்.

    கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தெப்ப உற்சவம் 17-ந்தேதி நடக்கிறது.
    • 18-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று முதல் வருகிற 16-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார்.

    மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம், அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் தாயார் எழுந்தருளி வலம் வருவார். பின்னர் இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார். இதைத்தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.

    இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • தெப்பத்தில் 5 முறை வலம் வந்து சுவாமி நம்மாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி திருவிழா கடந்த மார்ச் 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மார்ச் 5-ந்தேதி கருட சேவையும், மார்ச் 9-ந்தேதி திருத்தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.

    பத்தாம் திருவிழாவான நேற்று முன்தினம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் பொலிந்துநின்றபிரான் தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தெப்பத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

    பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடந்தது.

    மாலை 6 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி நம்மாழ்வார் 5 முறை தெப்பக்குளத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த தெப்ப உற்சவத்தில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடைபெற்றது.
    • பொலிந்துநின்றபிரான் அம்பாள்களுடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தார்.

    நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் மாசி திருவிழா கடந்த மார்ச்.1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. கடந்த 5 -ந்தேதி கருட சேவை நடந்தது. நேற்று முன்தினம் திருத்தேரோட்டம் நடந்தது.

    பத்தாம் திருவிழாவான நேற்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் அம்பாள்களுடன் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் பொலிந்துநின்றபிரான் அம்பாள்களுடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுதலைவர் எஸ்.பார்த்திபன், எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு் சுவாமி நம்மாழ்வார் மற்றும் ஆச்சாரியார்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.

    • தெப்ப உற்சவம் 17-ந்தேதி நடக்கிறது.
    • 18-ந்தேதி தீர்த்தவாரி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் 16-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சேர்ந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம் அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடக்கிறது. அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பதேரில் தாயார் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருகிறார். இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார்.

    இதை தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதில் மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சேருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பிரசித்திப்பெற்ற இக்கோவில் தியாகராஜர் வீற்றிருக்கும் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்திப்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களால் பூஜிக்கப்பட்ட இந்த கோவிலில், வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்த கோவில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரை பெற்றது.

    64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடமாக உள்ள இந்த கோவிலில் இறைவனாக வேதாரண்யேஸ்வரரும், வேதநாயகி அம்பாளாகவும் அருள்பாலித்து வருகிறார்கள். அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி அளித்தார்.

    ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய 4 வேதங்களும் மனித உருவம் கொண்டு வேதாரண்யேஸ்வரரை பூஜை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் நேரத்தில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்ததல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த இக்கோவில் கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்ததாக தல புராணம் கூறுகிறது.

    பிரசித்திப்பெற்ற இக்கோவில் தியாகராஜர் வீற்றிருக்கும் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும், இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அழைக்கப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்ப திருவிழா கோவில் வளாகத்துக்குள் உள்ள மணிக்கர்ணிகை தீர்த்தக்குளத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    அப்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மன் சமேத கல்யாணசுந்தரர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார்.

    தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு மற்றும் வர்த்தக சங்கத்தினர் செய்து இருந்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • விழாவில் இன்று விடையாற்றி உற்சவம் தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது.

    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. மேலும் கடந்த 2-ந் தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 5-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 6-ந் தேதி மாசி மக தீர்த்தவாரியும் நடைபெற்றது.

    விழாவில் நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் தெப்பக்குளத்தில் எழுந்தருள மகா தீபாராதனை நடந்தது. பின்னர் தெப்பக்குளத்தை சாமி சுற்றி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது.

    விழாவில் இன்று(வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • நாளை காலையில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
    • நாளை இரவு பெருமாள் தங்கத்தோளுகினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுல் நடைபெறும்.

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி நேற்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், தொடர்ந்து தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெற்றது. இரவு பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடந்தது.

    10-ம் திருநாளான இன்று காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 7.35 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவியருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும்.

    11-ம் திருநாளான நாளை காலையில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு பெருமாள் தங்கத்தோளுகினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுல் நடைபெறும்.

    தெப்ப உற்சவத்திற்காக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பத்தூர் தீயணைப்புத்துறை வீரர்களும், சுகாதாரத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.

    திருமலையில் நேற்று மலையப்ப சாமி தெப்போற்சவம் நடைபெற்றது. இதற்காக தெப்பம் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி ஊர்வலம் தொடங்கியது. கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று புஷ்கரிணியை அடைந்தது.

    அங்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.

    ×