search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukoshtiyur Sowmya Narayana Perumal Temple"

    • 22-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 23-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு ஆடி பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. கொடிமரத்திற்கு பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தினந்தோறும் காலையில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு ஆண்டாளுடன் பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    19-ந் தேதி ஆண்டாளுடன் தங்க பல்லக்கு பாவை மற்றும் சூர்ணாபிஷேகம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும், 20-ந் தேதி ஆண்டாளுடன் குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்னவாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22-ந் தேதி தேரில் ஆண்டாளுடன் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்கதோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் மற்றும் ஆசிர்வாதம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது.
    • திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 104-வது திவ்ய தேசமாகும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104-வது திவ்ய தேசம் இக்கோவில் ஆகும்.

    இந்த தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது.

    தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் ஆகிய இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். 'ஓம்', 'நமோ', 'நாராயணாய' எனும் 3 பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.

    மேலும் ராமானுஜர் "ஓம் நாமோ நாராயணா" என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில்.

    • 108 வைணவ தளங்களில் முக்கியத்துவம் பெற்ற இக்கோவில்.
    • யோகநரசிம்மர் அலங்காரத்திலும் திருக்கோட்டியூர் நம்பிகள் அருள்பாலித்தார்.

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் முக்கியத்துவம் பெற்ற இக்கோவிலில் ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தை உலகிற்கு உபதேசித்த ராமானுஜரின் குருநாதரான திருக்கோட்டியூர் நம்பிகளின் திருநட்சத்திர விழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு திருக்கோட்டியூர் நம்பிகள் தாயார் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யோகநரசிம்மர் அலங்காரத்திலும் திருக்கோட்டியூர் நம்பிகள் அருள்பாலித்தார். தொடர்ந்து பெருமாள் திருக்கோலம், ஆண்டாள் திருக்கோலம், மோகினி திருக்கோலம், பரமபதநாதன் திருக்கோலத்திலும், குதிரை வாகனம் மற்றும் சப்பரத்திலும், பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • நீண்ட நேரமாகியும் மழை விடாததால் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • நாளை பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் திருநாள் அன்று ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவமும், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், 7-ம் திருநாள் அன்று மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்கதோளுக்கினியானில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 8-ம் திருநாள் அன்று இரவு சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். மாலையில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையிலும் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் 5.25 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரமாகியும் மழை விடாததால் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மீண்டும் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைய உள்ளது.

    நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் விழா நடக்கிறது.
    • ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில். இத்தகைய சிறப்புபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற 27-ந்தேதி காலை கும்பாபிஷேகம் விழா நடக்கிறது.

    முன்னதாக நேற்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு பூர்ணாகுதி நிகழச்சி நடைபெற்றது. இன்று, நாளை காலை இரண்டாம் காலமும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 25-ந் தேதி காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 26-ந்தேதி காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு ஏழாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 27-ந்தேதி காலை 8.5 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. அதன் பின்னர் 11.50 மணிக்கு ஸ்வர் தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று இரவு 9 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது.
    • இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 8 உப கோபுரங்களுடனும், 3 தளங்களுடனும், அஷாடங்க திவ்ய விமானம் அமையப்பெற்ற இக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. இரவு பூர்ணாகுதி நிகழ்ச்சியும், நாளை காலை இரண்டாம் காலமும், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 25-ந் தேதி காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் காலை யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 26-ம் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 27-ந்தேதி காலை 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. அதன் பின்னர் இரவு பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை காலையில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
    • நாளை இரவு பெருமாள் தங்கத்தோளுகினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுல் நடைபெறும்.

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி நேற்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், தொடர்ந்து தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெற்றது. இரவு பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடந்தது.

    10-ம் திருநாளான இன்று காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 7.35 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவியருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும்.

    11-ம் திருநாளான நாளை காலையில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு பெருமாள் தங்கத்தோளுகினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுல் நடைபெறும்.

    தெப்ப உற்சவத்திற்காக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பத்தூர் தீயணைப்புத்துறை வீரர்களும், சுகாதாரத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • 6-ந்தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

    108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றானது திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்பத்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் 25-ந்தேதி மாலை 6 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7.35 மணிக்கு பெருமாள் கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று காலை 10.40 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்திற்கு கொடி ஏற்றப்பட்டு திருமஞ்சனம், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

    நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடன், சேஷன், குதிரை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 7-ம் திருநாள் மாலை சூர்ணாபிஷேகம், தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ந்தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந்தேதி தெப்ப உற்சவ திருநாள் அன்று காலை பகல் தெப்பமும், இரவு 8.30 மணிக்கு இரவு தெப்பமும் நடக்கிறது.

    விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். மறுநாள் காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சேவர்கொடியான் செய்து வருகின்றனர்.

    • மார்ச் 7-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
    • 8-ந்தேதி சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்பத்திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. முன்னதாக 25-ந்தேதி மாலை சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மறுநாள் பெருமாள் திருமண மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து கொடிமரம் அருகே புறப்பாடாகி கொடிமரத்திற்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதை தொடர்ந்து காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் இரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடன், சேஷன், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. 6-ம் நாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    மார்ச் 6-ந்தேதி 9-ம் திருநாள் அன்று வெண்ணைய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், இரவு தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 7-ந்தேதி தெப்ப உற்சவ திருநாள் அன்று காலை 10.46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7.30 மணிக்கு இரவு தெப்பமும் நடக்கிறது. இந்த தெப்பத்திருவிழா அன்று பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மறுநாள் காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்ப திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் தலைமையில் மேலாளர், கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    • மார்ச் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ஆனி மாதம் சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் கோபுரத்தில் உள்ள விமானத்திற்கு தங்க தகடு பதிக்கும் திருப்பணியும், ராஜகோபுரம், சன்னதிகள், திருமதில் ஆகியவற்றுக்கு திருப்பணிகளும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. மேலும் தங்க விமான திருப்பணியில் தாமிர தகடு, தங்க தகடு பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதையடுத்து ஆனி மாதம் இதற்கான சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ராஜகோபுரம், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கான திருப்பணிகள் நிறைவு பெற்றதால் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    மேலும் 8 கால பூஜைகளுடன் யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளதால் அதற்கான யாகசாலை கோவில் வளாகத்தில் மகாமக கிணறு அருகில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் யாகசாலைக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×