search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    வேடசந்தூரில் மரத்தில் பைக் மோதி பள்ளி மாணவன் பலியானார்
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கல்வார்பட்டி பூனூத்துபகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரவீன்குமார்(15). சுப்பிரமணி ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த பல மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் கும்பகோணத்தில் குடியேறிவிட்டார். பிரவீன்குமார் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பு செல்கிறார்.

    பள்ளி விடுமுறை என்பதால் பூனூத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்தார். நேற்று அதேபகுதியை சேர்ந்த ஹேமநாதன்(17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ராமநாயக்கனூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

    திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. அப்போது 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் இதுபோல மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கி விடுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே பெற்றோர்கள் இதனை கண்காணித்து சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல அனுமதி வழங்க கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தினர்.
    திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் இ.பெரியசாமி ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தார்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக அமைச்சர் இ.பெரியசாமி தனது காரில் இன்று சென்று கொண்டிருந்தார். ராமையன்பட்டி அருகே சென்றபோது சாலை விபத்தில் ஒருவர் படுகாமயடைந்து ரோட்டில் தவித்து கொண்டிருந்தார். இதைபார்த்ததும் காரை உடனடியாக நிறுத்துமாறு டிரைவருக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் எவ்வாறு உள்ளார் என்று அருகில் சென்று விசாரித்தார். பின்னர் அவருக்கு குடிநீர் வழங்கி சற்று ஆறுதல் படுத்தினார். அதன்பின்பு ஆம்புலன்சுக்கு போன்செய்து வரவழைத்தார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்து விபத்தில் சிக்கிய சுரேஷ் என்பவரை அதில் ஏற்றினார்.
    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். அமைச்சர் இ.பெரியசாமியின் செயல் உடன்வந்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
    குமாரபாளையம் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் உள்ள சேலம் சாலை டிவைடர் வைக்கப்பட்டு மிகவும் குறுகியதாக உள்ளது. இதில் கடைகள் முன்பு வைக்கப்படும் ஸ்டாண்டிங்  போர்டுகள், நிறுத்தப்படும் வாகனங்கள், ஆகியவற்றால் ஏற்கனவே விபத்து  அபாயம் ஏற்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் மாடுகள், ஆடுகள் ஆகியவை சாலைகளில் திரிந்து வருகின்றன. வாகனங்களின் ஹாரன் சத்தத்தால் இவைகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. 

    இது போன்று கால்நடைகளை சாலைகளில் நடமாட விடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வெவ்வேறு விபத்துக்களில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை நகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் பழனிவேல். இவர் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டார். அப்போது மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் ைசக்கிள் மீது மோதியது. 

    இதில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூரை சேர்ந்தவர் பூமி.  லாரி டிரைவரான இவர் இளையான்குடி பகுதியில் லாரியை ஓட்டிச்சென்ற போது எதிரே மானகிரியை சேர்ந்த ரபீல் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. 

    இதில் பூமி உட்பட அவரது லாரியில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    சங்கப்பாளையத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குப்புச்சிபாளையம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார் (வயது  45). இவர் நேற்று சங்கப்பாளையத்தில்  உள்ள குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். 

    செல்லும் வழியில் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரவிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார். 

    ×