search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட்போன்"

    ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 ஆனது கலர்OS க்கு பதிலாக ஆக்சிஜன் OS 12.1 உடன் வரும் என கூறப்படுகிறது.
    ஓபோ A57 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அந்த போனை ஒன்பிளஸ் நிறுவனம் மறுபெயரிட்டு குறிப்பிட்ட சந்தைகளில் குறைந்த விலையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓபோ A57 OnePlus பிராண்டிங்கின் கீழ் FCC சான்றிதழைப் பெற்றுள்ளது, இது தோற்றத்தில் ஒன்பிளஸ் போனைப் போல இருந்தாலும் அதன் உட்புறத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

    oppo

    ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 ஆனது கலர்OS க்கு பதிலாக ஆக்சிஜன் OS 12.1 உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இது 5000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த ஸ்மார்ட்போன் ஓபோவுக்கு பதிலாக ஒன்பிளஸ் லோகோவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

    ஓபோ A57-ன் விலை ரூ.13,500 ஆக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மறுபெயரிடப்பட்டு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் போனும் கிட்டத்தட்ட அதே விலையில், அதாவது ரூ.15 ஆயிரத்துக்கும் கீழ் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
    அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று ஓபோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ஓபோ K10 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகிற ஜூன் 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஓபோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 இன் 4ஜி மாடல் முதல் 15 நாட்களில் 1,00,000 யூனிட்கள் விற்பனை ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 5ஜி மாடலிலிருந்து இது வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இது மிகவும் மெலிதான வடிவமைப்பு மற்றும் ஸ்ட்ரெய்ட் எட்ஜ் டிசைன் ஆகியவற்றை கொண்டது. மேலும் பின்புறத்தில் கைரேகை மற்றும் கீறல்-எதிர்ப்பு திறன் கொண்ட பின்புற வடிவமைப்பை இந்த ஃபோன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    oppo

    6.56″HD+ IPS LCD திரை, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், டூயல் எல்இடி ப்ளாஷ், 8 மெகாபிக்சல் முன் கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ இயர்போன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 7.9 மிமீ தடிமன், 190 கிராம் எடை, 33W வேகமான சார்ஜிங்குடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கும். 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனம் 8T எனும் ஃபிளாக்‌ஷிப் போனை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அந்த போன் தற்போது ரூ. 28,999-க்கு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகமான புதிதில் அதன் விலை ரூ.42,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து 4 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.38,999 க்கு விற்பபை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை மேலும் ரூ.10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.28,999-க்கே கிடைக்கிறது.

    oneplus

    அதன்படி 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி உடன் கூடிய ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட் போன் ரூ.28,999-க்கும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி உடன் கூடிய மாடல் ரூ.31,999-க்கும் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் லூனார் சில்வர் மற்றும் ஆக்வாமெரைன் கிரீன் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8T ஆனது முதன்மையான குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டையும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,500 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பின்புறம் குவாட் கேமரா அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது 30 ஆயிரத்திற்கும் கீழ் கிடைப்பது நல்ல ஆஃபராக பார்க்கப்படுகிறது.
    உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    மோட்டோ g82 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த போன் வருகிற ஜூன் 7-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் 50MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் முதல் போன் இதுவாகும். 

    உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 13 5ஜி பேண்ட் ஆதவுடன் இயங்கும் திறன் கொண்டதாகும்.

    moto g82

    6ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 695 SoC, ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், OIS உடன் 50 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் + டெப்த் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை இந்த போனில் உள்ளன. மேலும் 30W டர்போ சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    மோட்டோ g82 5ஜி ஸ்மார்ட்போன் மீட்டியோரைட் கிரே மற்றும் ஒயிட் லில்லி ஆகிய இரு வண்ணங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அடுத்த செவ்வாய் கிழமை இந்த போன் அறிமுகம் செய்யப்படும்போது இதன் விலை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும். பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமாகவும் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
    விரைவில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை ஒன்பிளஸ் வெளியிடும் என கூறப்பட்டு வந்தது. ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

    அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் கேமராக்களைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் LDRR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் வரலாம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E32s ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மோட்டோரோலா மோட்டோ E32 போன்ற வடிவமைப்பைப் கொண்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ E32s ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை ரூ. 9,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    மோட்டோரோலா மோட்டோ E32s ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மோட்டோரோலா மோட்டோ E32 போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்லேட் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது. 

    மோட்டோ E32s

    மோட்டோரோலா மோட்டோ E32s வலதுபுறத்தில் வால்யூம் ராக்கரைக் கொண்டுள்ளது, பவர் பட்டனுடன் கைரேகை ஸ்கேனரும் இணைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் ஒரு சிம் ட்ரே உள்ளது. இதன் கீழ் பகுதியில் மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் கிரில் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யு.ஸ்.பி. டைப் சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    மோட்டோ E32s மாடலில் 6.5-இன்ச் HD+ IPS LCD பேனலைக் கொண்டுள்ளது. மேலும் இது 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB மெமரி வெரியன்டில் கிடைக்கிறது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிரசாசர் கொண்ட மோட்டோ E32s ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை விவோ நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ நிறுவனம் ஒரு புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது, இது 200W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக அந்நிறுவனம், 100W வேகமான சார்ஜிங்கை வழங்குவதில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது, ​​ஒரு புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     விவோ ஸ்மார்ட்போன்

    அந்நிறுவம் கடைசியாக வெளியிட்ட விவோ X80 pro எனும் ஃபிளாக்‌ஷிப் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் மற்றும் குவாட் கேமரா அமைப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 80W வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வந்தது.  மேலும் இது 4,700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. 

    6.78 இன்ச் தொடுதிரை, முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவுடன் வந்தது. பின்புறத்தில், இது 50MP முதன்மை சென்சார், 48MP, 12MP சென்சார் மற்றும் 8MP ஷூட்டர் என 4 கேமராக்களை கொண்டிருந்தது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்தது. இந்த போனின் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்பது குறிப்பிடத்தக்கது.

    நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த நத்திங் போனின் வெளியீட்டு விவரத்தை அதன் நிறுவனர் கார்ல் பெய் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார். இந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரம் உள்ளிட்ட தகவல்களை ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அதன் டிசைன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது.

    ஸ்லாஸ்லீக் என்கிற தளத்தில் இந்த போனின் தோற்றம் அடங்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன் பாகம் தெளிவாக தெரிகிறது. அதில் டாப் செண்டரில் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. பின் பக்கம் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் அது 3 கேமரா செட்-அப் உடன் உள்ளதை பார்க்க முடிகிறது.

     நத்திங் போன்
    Photo Courtesy: /Leaks

    இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இல்லை, பெரும்பாலும் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர், 90Hz டிஸ்ப்ளே, 50MP பிரைமரி சென்சாருடன், மூன்று கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது.

    நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் வெளியீட்டு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ள லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போனில் ஐபோன் 13-ஐ போலவே கைரேகை சென்சார் இல்லை. ஆனால் ஃபேஸ் அன்லாக் பயோமெட்ரிக் அம்சத்துடன் வருகிறது.

    லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஐபோன் 13 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள, இந்த ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஒரு எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும், இது யுனிசாக் T310 பிராசஸருடன் வருகிறது, இதில் 4GB ரேம் மற்றும் 256GB இன்டர்ணல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கம் சிங்கிள் கேமரா உள்ளது. ஐபோன் 13-ஐ போலவே, இதிலும் கைரேகை சென்சார் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் பயோமெட்ரிக் அம்சத்துடன் வருகிறது. லி-டிவி Y1 Pro மாடல் 4GB ரேம்+ 32GB மெமரி வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 800 என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

     லி-டிவி Y1 ப்ரோ

    4GB ரேம் + 128GB மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 510 என்றும் 4GB ரேம் + 256GB வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 500-க்கு கிடைக்கிறது. இது மிட்நைட் பிளாக், ஸ்டார் ப்ளூ மற்றும் ஸ்டார் ஒயிட் ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. லி-டிவி போன் அடுத்த மாதம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க, இரட்டை பிரைமரி கேமரா அமைப்புடன் வருகிறது, இது AI கேமராவுடன் 8MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5MP கேமரா உள்ளது. லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது. மேலும் டூயல் சிம் (நானோ) மற்றும் 6.5 இன்ச் எல்சிடி ஹெச்.டி பிளஸ் (720x1,560 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
    மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ e32s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ e32s ஸ்மார்ட்போனை ஜூன் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் இந்திய வெளியீடு நடைபெற இருக்கிறது. மோட்டோ e32s ஸ்மார்ட்போன் ஸ்லேட் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் நிறங்களில் கிடைக்கும். 

    இந்தியாவில் புதிய மோட்டோ e32s ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 299 இல் இருந்து துவங்கும் என மோட்டோரோலா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மோட்டோ e32s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோமார்ட் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ e32s மாடலில் 6.5 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 16MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா,  2MP மேக்ரோ கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோ e32s

    மோட்டோ e32s அம்சங்கள்:

    - 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
    - IMG PowerVR GE 8320 GPU
    - 3GB ரேம், 32GB மெமரி
    - 4GB ரேம், 64GB மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் My UX
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 16MP பிரைமரி கேமரா
    - 2MP டெப்த் கேமரா
    - 2MP மேக்ரோ கேமரா
    - 8MP செல்பி கேமரா 
    - 5000mAh பேட்டரி 
    - 15W பாஸ்ட் சார்ஜிங் 
    - 3.5mm ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப் சி
    ஐகூ நிறுவனத்தின் முதல் நியோ பிராண்டு ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஐகூ நியோ 6 என அழைக்கப்படுகிறது.

    ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐகூ நியோ 6 மாடலில் 6.62 இன்ச் FHD+ AMOLED பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 8GB / 12GB LPDDR5 ரேம், 128GB / 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 யு.ஐ., 64MP பிரைமரி கேமரா, OIS வசதி, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP B&W போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்தியாவில் 80W பாஸ்ட் சார்ஜிங் கொண்டு அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். 

     ஐகூ நியோ 6

    ஐகூ நியோ 6 அம்சங்கள்:

    - 6.62 இன்ச் FHD+ AMOLED பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8GB / 12GB LPDDR5 ரேம்
    - 128GB / 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்
    - ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 யு.ஐ.
    - இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
    - 64MP பிரைமரி கேமரா, OIS வசதி
    - 12MP அல்ட்ரா வைடு லென்ஸ்
    - 2MP போர்டிரெயிட் கேமரா
    - 16MP செல்பி கேமரா 
    - 4700mAh பேட்டரி 
    - 80W பாஸ்ட் சார்ஜிங் 
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப் சி

    ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போன் சைபர் ரேஜ் மற்றும் டார்க் நோவா போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் 12GB+256GB மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 ஆகும்.
    ×