என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

நத்திங் போன்
இணையத்தில் லீக் ஆன நத்திங் போனின் டிசைன்
நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த நத்திங் போனின் வெளியீட்டு விவரத்தை அதன் நிறுவனர் கார்ல் பெய் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார். இந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரம் உள்ளிட்ட தகவல்களை ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அதன் டிசைன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது.
ஸ்லாஸ்லீக் என்கிற தளத்தில் இந்த போனின் தோற்றம் அடங்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன் பாகம் தெளிவாக தெரிகிறது. அதில் டாப் செண்டரில் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. பின் பக்கம் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் அது 3 கேமரா செட்-அப் உடன் உள்ளதை பார்க்க முடிகிறது.

Photo Courtesy: /Leaks
இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இல்லை, பெரும்பாலும் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர், 90Hz டிஸ்ப்ளே, 50MP பிரைமரி சென்சாருடன், மூன்று கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது.
நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் வெளியீட்டு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






