search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நத்திங் போன்"

    • நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
    • நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலும், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அந்த வரிசையில், நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன் படி இந்திய சந்தையில் புதிய நத்திங் ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB மெமரி வேரியண்ட் ரூ. 31 ஆயிரத்திற்கும், 8GB ரேம் + 256GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 32 ஆயிரமாகவும், 12GB ரேம் + 256GB மெமரி வேரியண்ட் ரூ. 36 ஆயிரத்திற்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.


    நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலம் ஆப்லைனில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆன்லைனில் பிளிப்கார்ட் தளம் வாயிலாக வாங்க முடியும்.

    • ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
    • ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ள ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அந்த போன் அறிமுகமாகும் முன்பே விற்பனைக்கு வர உள்ளது. அதன்படி 100 போன்களை மட்டும் அந்நிறுவனம் வெளியீட்டு முன் விற்பனை செய்ய உள்ளது.

    இதற்காக ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படையில் இந்த 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ஜூன் 21-ந் தேதி ஸ்டாக் எக்ஸின் தொழில்நுட்ப தளமான டிராப் எக்ஸின் இந்த ஏலம் தொடங்கி உள்ளது. இன்றுடன் இந்த ஏலம் முடிவடைய உள்ளது.


    ஏராளமானோர் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது வரை இதில் அதிகபட்சமாக ரூ.1.56 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனின் விலை ரூ.30 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 12-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • மெக்சிகோ மற்றும் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது.

    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ள ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அந்த போன் அறிமுகமாகும் முன்பே விற்பனைக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 100 போன்களை மட்டும் அந்நிறுவனம் வெளியீட்டு முன் விற்பனை செய்ய உள்ளது.

    இதற்காக ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படையில் இந்த 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி வருகிற ஜூன் 21-ந் தேதி ஸ்டாக் எக்ஸின் தொழில்நுட்ப தளமான டிராப் எக்ஸின் இந்த ஏலம் தொடங்க உள்ளது. ஜூன் 23-ந் தேதி வரை இந்த ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது.


    விருப்பமுள்ளவர்கள் ஸ்டாக் எக்ஸ் தளத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்து இந்த ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெக்சிகோ மற்றும் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது.

    ×