என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

மோட்டோ g82 ஸ்மார்ட்போன்
இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் மோட்டோ g82 ஸ்மார்ட்போன்
உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டோ g82 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த போன் வருகிற ஜூன் 7-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் 50MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் முதல் போன் இதுவாகும்.
உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 13 5ஜி பேண்ட் ஆதவுடன் இயங்கும் திறன் கொண்டதாகும்.

6ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 695 SoC, ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், OIS உடன் 50 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் + டெப்த் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை இந்த போனில் உள்ளன. மேலும் 30W டர்போ சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
மோட்டோ g82 5ஜி ஸ்மார்ட்போன் மீட்டியோரைட் கிரே மற்றும் ஒயிட் லில்லி ஆகிய இரு வண்ணங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அடுத்த செவ்வாய் கிழமை இந்த போன் அறிமுகம் செய்யப்படும்போது இதன் விலை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும். பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமாகவும் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
Next Story