என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
200W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது விவோவின் புது ஃபிளாக்ஷிப் போன்
Byமாலை மலர்2 Jun 2022 4:12 AM GMT (Updated: 2 Jun 2022 4:12 AM GMT)
புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை விவோ நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ நிறுவனம் ஒரு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது, இது 200W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அந்நிறுவனம், 100W வேகமான சார்ஜிங்கை வழங்குவதில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது, ஒரு புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நிறுவம் கடைசியாக வெளியிட்ட விவோ X80 pro எனும் ஃபிளாக்ஷிப் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் மற்றும் குவாட் கேமரா அமைப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 80W வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வந்தது. மேலும் இது 4,700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது.
6.78 இன்ச் தொடுதிரை, முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவுடன் வந்தது. பின்புறத்தில், இது 50MP முதன்மை சென்சார், 48MP, 12MP சென்சார் மற்றும் 8MP ஷூட்டர் என 4 கேமராக்களை கொண்டிருந்தது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்தது. இந்த போனின் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×