search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராமரிப்பு"

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேதாராண்யம்:

    வேதாராண்யம் உபகோட்டத்திற்க்கு உட்பட்ட வேதாரண்யம் 110 கே.வி துணை மின் நிலையம், வாய்மேடு 110 கே.வி துணை மின் நிலையம், ஆயக்காரன்புலம் 33 கே.வி துணை மின் நிலையம், வேட்டைகாரன் இருப்பு 33 கே.வி. துணை மின் நிலையம் ஆகிய நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்பு த்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பாவனம் தொண்டியக்காடு, தாணி க்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்சநதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடி நெல்வயல், கத்தரிப்புலம், செட்டிபுலம், நாகக்கு டையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியா ப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ள ப்பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை மின்நகர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்நகர் துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதனால் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக் கோட்டை, கம் பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும் பராமரித்தலும் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் மற்றும் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • தஞ்சாவூா் நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளா் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எனவே, மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், திரு நகா், ஆண்டாள் நகா், சிங்கபெருமாள் குளம், விக்னேஷ்வர நகா், உமா சிவன் நகா், வெங்கடாசலபதி நகா், பி.ஆா். நகா், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகா், டி.சி.டபிள்யு.எஸ். காலனி, களிமேடு (ஒரு பகுதி), மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி,

    சாந்தபிள்ளைகேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோயில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்க சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம், வ.உ.சி. நகா், அரசினா் குழந்தைகள் இல்லம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல, நாஞ்சிக்கோட்டை சாலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மின் கம்பம் மாற்றும் பணி நடைபெறுவதால், உழவா் சந்தை முதல் காவேரி திருமண மண்டபம் வரை நாளை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பசுமலை துணை மின்நிலையம் மீனாட்சி மில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (16-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர் அவர் லேடி பள்ளி, காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    திருப்பாலை துணைமின் நிலையம் நாராயணாபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (16-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை கண்ணனேந்தல், மகாலட்சுமி நகர், சந்தானம் நகர், பரசுராம்பட்டி, ஆத்திகுளம், பேங்க்காலனி, நாராயணபுரம், நாகனாகுளம், அங்கயற்கண்ணி காலனி.

    ஐலாண்டு நகர்,எம்.எம்.எஸ்.எஸ். காலனி, பாரத் நகர், கிருஷ்ணா நகர், கோபாலபுரம், திலக் நகர், அய்யர்பங்களா, ஸ்ரீநகர், சக்தி நகர், சென்ட்ரல் எக்ஸைஸ் காலனி, அய்யாவு தேவர் நகர், எழில் நகர், திருப்பாலை மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை எல்லீஸ் நகர், துணைமின் நிலையம் டி.பி.ரோடு பீடரிலும், அண்ணா பஸ் நிலைய துணைமின் நிலையம், முனிச்சாலை பீடரிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (16-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை ரெயில்வே காலனி, சர்வோதயா அனைத்து தெருக்கள், அன்சாரி நகர் அனைத்து தெருக்கள், வைத்தியநாத புரம், டி.பி. ரோடு, சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு.

    இஸ்மாயில்புரம் 1-வது தெரு முதல் 19 தெரு வரை, கரிம்சா பள்ளிவாசல் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, முமின் பேட்டை, அருணாச்சலபுரம் 1-வது தெரு முதல் 5 வரை, ஓலை பட்டினம் 1 மற்றும் 2-வது தெருக்கள், பூந்தோட்டம் தெரு, அசன்தீன் சாய்பு சந்து, ருக்மணி பாளையம் சந்து, லட்சுமிபுரம் 8-வது மற்றும் 9-வது தெருக்கள்.

    முனிச்சாலை ரோடு, கீழ வெளி வீதியின் ஒரு பகுதி, தென்கரை ரோட்டின் ஒரு பகுதி, ஓபுளா படித்துறை, காயிதே மில்லத்தெரு, நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருக்கள், ஜெகஜீவன்ராம் தெரு, ஆர்.ஆர்.மண்டபம், சேவாலயம், செனாய் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • 14 ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கு ஒரு ஒன்றியத்திற்கு 100 ஆடுகள் வீதம் 1400 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • ஆய்வு பணியின் போது ஆடுகளுக்கு குடற்புழு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு சார்பில் ஆதரவற்ற விதவை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. அதாவது ஒரு ஒன்றியத்திற்கு 100 ஆடுகள் வீதம் 1400 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் விலையில்லா ஆடுகள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என்பது குறித்து நாஞ்சிக்கோட்டை ஊராட்சி கொல்லாங்கரை, குருங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பழனிவேல் ஆய்வு செய்தார்.

    அப்போது கால்நடைகள் சரியான முறையில் பராமரி க்கப்பட்டு வருகிறீர்களா? ஏதேனும் நோய் தாக்கினால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்கிறீர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் ஆய்வு பணியின் போது ஆடுகளுக்கு குடற்புழு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது கால்நடை உதவி மருத்துவர் செரீப் மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

    ×