என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலையில்லா ஆடுகள்"

    • 14 ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கு ஒரு ஒன்றியத்திற்கு 100 ஆடுகள் வீதம் 1400 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • ஆய்வு பணியின் போது ஆடுகளுக்கு குடற்புழு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு சார்பில் ஆதரவற்ற விதவை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. அதாவது ஒரு ஒன்றியத்திற்கு 100 ஆடுகள் வீதம் 1400 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் விலையில்லா ஆடுகள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என்பது குறித்து நாஞ்சிக்கோட்டை ஊராட்சி கொல்லாங்கரை, குருங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பழனிவேல் ஆய்வு செய்தார்.

    அப்போது கால்நடைகள் சரியான முறையில் பராமரி க்கப்பட்டு வருகிறீர்களா? ஏதேனும் நோய் தாக்கினால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்கிறீர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் ஆய்வு பணியின் போது ஆடுகளுக்கு குடற்புழு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது கால்நடை உதவி மருத்துவர் செரீப் மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

    • தியாகதுருகம் அருகே 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
    • தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் துணை தலைவர் நெடுஞ்செழியன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் வரவேற்றார்.யூனியன் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி தலா 5 ஆடுகள் வீதம் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். அப்போது மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய அவைத் தலைவர் சாமிதுரை, துணைத்தலைவர் ராமலிங்கம், துணை செயலாளர் கணேசன், கால்நடை உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் கூத்தக்குடி கிராமத்தில் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.

    ×