search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுத்தம்"

    • கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ெரயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


    திருப்பூர்:

    கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ரெயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    கோவை- ராமேஸ்வரம் (16618) வாராந்திர ரெயில், கோவை ரெயில் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

    மறுமார்கத்தில் ராமேஸ்வரம்- கோவை (16617) ரெயில், புதன்தோறும் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:13மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30க்கு கோவை வந்தடையும். இந்த 2 ரெயில்களும் நாளை 18-ந் தேதி முதல் சிவகங்கை ரெயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக கூடுதலாக 2 நிமிடங்கள் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதி பிளாட்பார்மில் பராமரிப்பு, மேம்பாட்டு பணி நடப்பதால் ஸ்வர்ண ஜெயந்தி, மில்லினியம் சூப்பர்பாஸ்ட் ரெயில் 4 நாட்களுக்கு சித்தூர் திருப்பதி செல்லாது.

    ஆந்திர மாநிலம், திருப்பதி ரெயில் நிலைய பிளாட்பார்மில் (2 மற்றும் 3), மேம்பாட்டு பணியை தென் மத்திய ரெயில்வே ஒரு மாதம் மேற்கொள்கிறது.இதனால், 7 ரெயில்கள் முழுமையாகவும், 12 ரெயில் பாதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ஸ்வர்ண ஜெயந்தி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:12643) வருகிற 18, 25, ஆகஸ்டு 1, 8-ந் தேதி ஆகிய 4 நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும்.

    இதனால் சித்தூர், திருப்பதி நிலையங்களுக்கு ரெயில் செல்லாது. காட்பாடி - ரேணிகுண்டா வழித்தடத்தில் பயணிக்கும்.இதேபோல் எர்ணாகுளம் - நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் (எண்:12645) வருகிற 22, 29, ஆகஸ்டு 5ம் தேதி ஆகிய நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும். இதனால் சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு  ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    பாலக்காடு - திருச்சி (16844) ரெயில் தினமும் காலை 6:30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சிரெயில் நிலையத்திற்கு மதியம் 1:32க்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது தினமும் மதியம் 2மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, இரவு 8:55க்கு பாலக்காடு வந்தடையும்.

    திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ரெயில் நிலையம் இடையே தண்டவாள பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பாலக்காடு- திருச்சி (16844) ரெயில் திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி ரெயில்வே நிலையம் செல்லாது.

    மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
    • தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.
    • பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கணபதிநகர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எலிசா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் பிரதான குழாய் புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    எனவே வார்டு எண் 42 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

    எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ×