search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள்"

    • ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஆறாகுளம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தார். இதையடுத்து அவரை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவரது கூட்டாளிகள் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் இருப்பதாக அவர் தெரிவித்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார் கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை மடக்கி பிடித்து பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் திருப்பூர் வீரபாண்டி, பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் நவீன் குமார்(வயது 27),அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி அண்ணாதுரை என்பவரது மகன் வசந்தகுமார்(22) , திருப்பூர் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது இதையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மதுரையில் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    மதுரை

    எஸ்.எஸ். காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேரரசி கோச்சடை மெயின்ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சந்தேகப்படும்படி நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்து சோதனை செய்தார். அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்த முருகக்கடவுள் மகன் அரவிந்த் குமார் (20), குறிஞ்சி நகரை சேர்ந்த கருப்பு என்று தெரியவந்தது.

    இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    ×