search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரபரப்பு"

    • அப்பொழுது சேலத்தில் இருந்து கிளம்பும்போது பாளையம் புதூர் பகுதிக்கு டிக்கெட் பெற்றுள்ளனர்.
    • சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிச்சலும் ஏற்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் பகுதியில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலத்தில் நடைபெற்ற கபடி போட்டிக்கு சென்று விட்டு சேலம் பஸ் நிலையத்தில் இருந்து தருமபுரி வரும் தனியார் பேருந்தில் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர்.

    அப்பொழுது சேலத்தில் இருந்து கிளம்பும்போது பாளையம் புதூர் பகுதிக்கு டிக்கெட் பெற்றுள்ளனர். அப்பொழுது பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் என்பதால் அமைதியாக பேருந்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர்.

    அதை தொடர்ந்து பாளையம்புதூர் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டருக்கு முன்பாகவே உள்ள பாளையம் சுங்கசாவடி பகுதிக்கு வந்தவுடன் இளைஞர்கள் அனைவரையும் நடத்துனர் உங்கள் பகுதியில் பேருந்து நிற்காது.

    இது நான் ஸ்டாப் பேருந்து எனவே இங்கே இறங்கி விடவும் என மிரட்டி இறக்கி விட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர்கள் அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாளையம்புதூர் பகுதியில் ஒன்று திரண்டு வந்தனர்.

    அங்கு வந்த தனியார் பேருந்தை சிறை பிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிச்சலும் ஏற்பட்டது.

    தனியார் பேருந்தில் வந்த பயணிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சற்று மனம் தளர்ந்து அரை மணி நேர சிறை பிடிப்புக்கு பின்னர் பேருந்தை விடுவித்தனர்.

    இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் கடும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் விரக்தியடைந்து குமார் தற்கொலைக்கு முயன்றார்.
    • இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (23). கார்பெண்டர். இவர் சிறிய வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் குமார் அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்கார ணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த குமார் நேற்று இரவு சூளை அருகே உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கம்பியில் சிக்கி கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×