search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திக்குத்து"

    • விருதுநகர் அருகே கடன் பிரச்சினையில் ெதாழிலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள புல்வாய்கரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர்் முருகன்(வயது55). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(21) என்பவருக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முருகன் நரிக்குடி-திருப்புவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நாகராஜ் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். படு காயமடைந்த முருகன் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காயமடைந்த ஆதித்யா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    • விலா எலும்புகளுக்கு மேல் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியின் மது விகார் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சிங் (வயது 64). ஓய்வு பெற்ற அதிகாரியான இவர் சமீபத்தில் குர்கானில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். இது தொடர்பாக பணம் செலுத்துவதற்கான மொபைல் ஆப் டவுன்லோடு செய்யும்படி மனைவியிடம் கூறியிருக்கிறார்.

    அவர் கூறிய ஆப்-ஐ டவுன்லோடு செய்ய முற்பட்ட போது டவுன்லோடு ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் டென்ஷன் ஆன அசோக், மனைவியை திட்டியுள்ளார். இவர்களின் சண்டையில் மகன் ஆதித்யா சிங் குறுக்கே வந்து தந்தையை அமைதியாக இருக்கும்படி கூறியிருக்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அசோக், சமையலறை கத்தியை எடுத்து சற்றும் யோசிக்காமல் மகன் ஆதித்யாவை குத்தி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ஆதித்யா, உடனடியாக லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது விலா எலும்புகளுக்கு மேல் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அசோக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார்(25), இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜித் என்பவருடன் செல்போனில் பப்ஜி விளையாட்டை விளையாடினார்.

    அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் சசிக்குமார், அஜித் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உறவினரான செல்வம், சசிகுமாரின் ஆதரவாளர்கள் விஜயகுமார், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    ×