search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Puja"

    • கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் வாழவந்தி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ செல்லாண்டி அம்மன், நன்செய்இடையாறில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அ.குன்னத்தூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், வடகரை யாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்கள் மற்றும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு

    அலங்காரம், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி வழிபாடு
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கால பைராஷ்டமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பைரவர் அவதரித்த திருநாளான நேற்று பைராஷ்டமி பூஜையில் கலச ஹோமம் நடைபெற்று.

    புனித நீரால் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வட மாலை சாற்றி பஞ்சலோக ஸ்ரீ மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீ கால பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கால பைரவரை தரிசனம் செய்து சென்றனர்.

    • பரமேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் உள்ளிட்ட பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு வழிபாடு
    • கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திரளான மக்கள் தனது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை போட்டனர்.

    நவராத்திரி விழாவின் கடைசி நாளாக ஆயுதபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூஜையின்போது கொண்டைக்கடலை, அவல் பொரி உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவது வழக்கம்

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திரளான பொதுமக்கள் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆயுத பூஜை போட்டனர்.

    மேலும் காலை முதல் முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

    மேலும் திருப்பத்தூர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரியால் ஆயுத பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வள்ளலார் வணங்கி வழிபட்ட பழமையான விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது.
    • சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அமைந்துள்ளது கண்டரக்கோட்டை கிராமம். இங்கு சென்னை சாலையில்பழமையான விநாயகர் கோவில்உள்ளது. இக் கோவில் வள்ளலார் வணங்கி வழிபட்ட சிறப்பு பெற்றது. சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக கோவில் அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் அங்கு சிறப்பு பூஜை நடத்தி அங்கிருந்த விக்கிரகங்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வழிபாடு செய்தனர்.

    • கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    பிறகு கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிறகு விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.


    • இன்று மாலை நடைபெறுகிறது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்தக்கரையில் மேற்கு நோக்கி கால பைரவர் எழுந்தருளி உள்ளார்.

    இவருக்கு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகின்றன. அதேபோல் அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு மேல் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் ஆராதனை நடைபெற உள்ளன.

    • பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர்
    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள ராமர் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் பெற உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

    வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த துணைத் தலைவர் கதிரவன் தலைமையில் தலைவர் டீட்டா சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    முதல்-அமைச்சர் உடல்நலம் பெற்று பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

    பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் பிரசாதம் வழங்கினர்.

    இதில் துணைச் செயலாளர் வினோத், தெய்வா, ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஸ்ரீராம், அருண், மதன், விக்கி, சையத், ஏமந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • காஞ்சரம்பேட்டை கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • பல்வேறு வண்ண பூமாலைகள், பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையை அடுத்த பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று இல்லாமல் குறைந்து மக்கள் நலமுடன் வாழ கூட்டு பிரார்த்தனைகள் நடந்தது.

    இதையொட்டி 7 கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள், சம்மங்கி, ரோஜா, மல்லிகை, அரளி, முல்லை,செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு வண்ண பூமாலைகள், பட்டாடைகள், அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகளும் நடந்தது.

    இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்குள்ள பேசும் கன்னிமார் கோயில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×