வள்ளலார் வணங்கி வழிபட்ட பழமையான விநாயகர் கோவில் இடிப்பு

வள்ளலார் வணங்கி வழிபட்ட பழமையான விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது.சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.
கண்டரக்கோட்டையில் பழமையான விநாயகர் கோவிலை சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கும் பணி தொடங்கியது.
கண்டரக்கோட்டையில் பழமையான விநாயகர் கோவிலை சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கும் பணி தொடங்கியது.
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே அமைந்துள்ளது கண்டரக்கோட்டை கிராமம். இங்கு சென்னை சாலையில்பழமையான விநாயகர் கோவில்உள்ளது. இக் கோவில் வள்ளலார் வணங்கி வழிபட்ட சிறப்பு பெற்றது. சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக கோவில் அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் அங்கு சிறப்பு பூஜை நடத்தி அங்கிருந்த விக்கிரகங்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வழிபாடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com