பரமத்தி வேலூர் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அமாவாசையை முன்னிட்டு பரமத்தி அங்காளம்மன், கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், வாழவந்தி அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 
அமாவாசையை முன்னிட்டு பரமத்தி அங்காளம்மன், கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், வாழவந்தி அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் வாழவந்தி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ செல்லாண்டி அம்மன், நன்செய்இடையாறில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அ.குன்னத்தூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், வடகரை யாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்கள் மற்றும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு

அலங்காரம், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com