search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart TV"

    • டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது.
    • புதிய செயலி குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தகவல்.

    டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க், தனது நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்காக பிரத்யேக வீடியோ ஆப் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார். டுவிட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தார்.

    'எங்களுக்கு ஸ்மார்ட் டிவி-க்கான பிரத்யேக டுவிட்டர் வீடியோ ஆப் வேண்டும்,' என்று டுவிட்டர் பயனர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க்- 'இது வந்து கொண்டு இருக்கிறது,' என பதில் அளித்தார். அந்த வகையில் புதிய டுவிட்டர் வீடியோ ஆப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்..

     

    - மற்ற நிறுவனங்களை போன்றே டுவிட்டர் நிறுவனமும் வீடியோக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த வீடியோ ஆப் டுவிட்டர் நிறுவனம் வீடியோ தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை உணர்த்துகிறது.

    - புதிய திட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது. யூடியூப் ஷாட்ஸ், டிக்டாக் போன்ற சேவையை டுவிட்டர் நிறுவனமும் அறிமுகம் செய்யலாம்.

    - வீடியோ பிரிவில் கவனம் செலுத்துவதற்காக டுவிட்டர் நிறுவனம் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் தான் பெரிஸ்கோப் லைவ் ஸ்டிரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

    - வீடியோக்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை டுவிட்டர் வழங்கி வருகிறது.

    - புதிய செயலி டுவிட்டர் மட்டுமின்றி அதன் பயனர்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. மேலும் இது வருவாய் வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.

    • சோனி நிறுவனத்தின் புதிய 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் இருவித அளவுகளில் கிடைக்கின்றன.
    • புதிய சோனி 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் 4K ரெசல்யூஷன் கொண்ட டாப் எண்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய சோனி பிரேவியா X70L சீரிஸ், பிரேவியா X75L 4K டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிரேவியா X70L டிவி சீரிஸ் மாடல்களில் மெல்லிய பெசல், அழகிய ஸ்டாண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் X1 4K பிக்சர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது தலைசிறந்த வீடியோக்களை பிரதிபலிக்கிறது. இதில் உள்ள பிஎஸ்5 சப்போர்ட் தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 4K X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஎஸ், ஆப்பிள் ஹோம் கிட், ஏர்பிளே கொண்டுள்ளது. இதில் உள்ள 20 வாட் ஒபன் பேஃபில் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

     

    இத்துடன் வழங்கப்படும் டிவி ரிமோட் வாய்ஸ் சார்ந்த அம்சங்கள், ஆறு செயலிகளுக்கான ஹாட்கீ கொண்டிருக்கிறது. இத்துடன் X70L மாடலில் X ப்ரோடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி பிரேவியா X70L அம்சங்கள்:

    4K அல்ட்ரா ஹெச்டி 3840x2160 பிக்சல் ஸ்கிரீன்

    X1 4K பிராசஸர், 4K HDR, லைவ் கலர், 4K X ரியாலிட்டி ப்ரோ

    3x HDMI போர்ட்கள், 1x USB போர்ட்

    20 வாட் ஆடியோ அவுட்புட், ஒபன் பேஃபில் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ

    கூகுள் டிவி, கூகுள் பிளே, க்ரோம்காஸ்ட் சப்போர்ட்

    வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட்

    வாட்ச்லிஸ்ட், வாய்ஸ் சர்ச் மற்றும் பிஎஸ்5 சப்போர்ட்

    ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் மற்றும் அலெக்சா

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சோனி X70L 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 990

    சோனி X70L 4K 50 இன்ச் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

    அறிமுக சலுகையாக 43 இன்ச் X70L ஸ்மார்ட் டிவி மாடல் ரூ. 47 ஆயிரத்து 490 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.
    • 4K ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் லைவ் கலர் தொழில்நுட்பம் கொண்டுள்ளன.

    சோனி இந்தியா நிறுவனம் தனது புதிய பிரேவியா X75L ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டிவி 4K அல்ட்ரா HD LED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்குவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் X1 பிக்சர் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள X1 பிராசஸர் மேம்பட்ட விதிகளை பின்பற்றி நாய்ஸ்-ஐ குறைத்து, அதிக தெளிவான 4K ரெசல்யூஷன் படங்ளை பிரதிபலிக்கிறது. X75L சீரிஸ் மாடல்களில் பயனர்கள் அதிகபட்சம் 10 ஆயிரத்திற்கும் அதிக செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். மேலும் 7 லட்சத்திற்கும் அதிக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.

     

    சோனி பிரேவியா X75L அம்சங்கள்:

    மெல்லிய பெசல்கள், ஸ்லிம் பிலேடு ஸ்டாண்ட்

    43, 50, 55 மற்றும் 65 இன்ச் அளவுகள்

    4K, 50Hz, 3840x2160 பிக்சல், 4K X ரியாலிட்டி ப்ரோ

    லைவ் கலர் தொழில்நுட்பம், மோஷன்ஃப்ளோ XR, ஃபிரேம் டிம்மிங்

    HDR

    4K பிராசஸர் X1

    ஆண்ட்ராய்டு டிவி மற்றம் கூகுள் டிவி

    10வாட் + 10 வாட், ஓபன் பேஃபில் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

    16 ஜிபி மெமரி

    ஆட்டோ HDR டோன் மேப்பிங், ஆட்டோ ஜெனர் பிக்சர் மோட், கேம் மோட்

    க்ரோம்காஸ்ட், வாய்ஸ் சர்ச் சப்போர்ட்

    அலெக்சா, ஆப்பிள் ஏர்பிளே2, ஆப்பிள் ஹோம்கிட், கிட்ஸ் ப்ரோஃபைல்

    வாய்ஸ் ரிமோட்

    ஈத்தர்நெட் இன்புட் X1, RF X1, கம்போசிட் வீடியோ இன்புட் x1

    HDMI 2.1, USBx 2, 1x ஹெட்போன்

    வைபை, ப்ளூடூத் 5

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சோனி பிரேவியா 43X75L விலை ரூ. 69 ஆயிரத்து 900 - விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    சோனி பிரேவியா 50X75L விலை ரூ. 85 ஆயிரத்து 900 - விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    சோனி பிரேவியா 65X75L விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 - விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    சோனி பிரேவியா 55X75L விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    புதிய சோனி பிரேவியா X75L சீரிஸ் டிவி மாடல்கள் விற்பனை சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

    • சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது.
    • புதிய ஸ்மார்ட் டிவி மாடலில் 4K HDR ஸ்கிரீன், கூகுள் டிவி இண்டர்ஃபேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை 2023 ஸ்மார்டர் லிவிங் (2023 Smarter Living) நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டிவி சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ சீரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வென்னிலா X சீரிசை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்மார்ட் டிவி மாடல் 4K HDR ஸ்கிரீன், கூகுள் டிவி ஒஎஸ் கொண்டிருக்கிறது. பெசல் லெஸ் மெட்டாலிக் ஃபிரேம் கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவி X ப்ரோ சீரிசில் 4K எல்இடி பேக்லிட் எல்சிடி பேனல், HDR10+, டால்பி விஷன் IQ, சியோமி நிறுவனத்தின் சொந்த கலர் ப்ரோஃபைல்- விவிட் பிக்சர் என்ஜின் 2 வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் என மூன்றுவித அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் 40 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டிடிஎஸ் எக்ஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஆம்பியண்ட் லைட் சென்சார், ஃபார்-ஃபீல்டு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. கூகுள் டிவி ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி, சியோமியின் சொந்த பேட்ச்வால் கொண்டுள்ளது.

    இதில் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, 3x HDMI 2.1, 2x USB, ஆப்டிக்கல் போர்ட், AV இன்புட், ஹெட்போன் அவுட் மற்றும் ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ 43 இன்ச் விலை ரூ. 32 ஆயிரத்து 999

    சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ 50 இன்ச் விலை ரூ. 41 ஆயிரத்து 999

    சியோமி ஸ்மார்ட் டிவி X ப்ரோ 55 இன்ச் விலை ரூ. 47 ஆயிரத்து 999

    மூன்று மாடல்களின் விற்பனை ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை Mi வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ரிடெயில் விற்பனையாளர்களிடம் நடைபெற இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி/கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    • தாம்சன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் மெல்லிய, பெசல் லெஸ் டிசைன், மெட்டாலிக் ஸ்டாண்ட் கொண்டிருக்கிறது.
    • மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட் டிவியில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி உள்ளது.

    சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடலை ஆத்ப்ரோ மேக்ஸ் சீரிசில் அறிமுகம் செய்தது. QLED சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடலில் 65 இன்ச் ஸ்கிரீன், டால்பி விஷன், HDR10+, 40 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. இத்துடன் மெல்லிய தோற்றம், பெசல் லெஸ் டிசைன் மற்றும் மெட்டாலிக் ஸ்டாண்ட் உள்ளது. இந்த டிவி-யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர், மாலி 450 GPU, டூயல் பேண்ட் வைபை வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    தாம்சன் ஆத்ப்ரோ மேக்ஸ் சீரிஸ் டிவி அம்சங்கள்:

    65 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே, டால்பி விஷன், 550 நிட்ஸ் பிரைட்னஸ்

    1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

    மாலி 450 GPU

    2 ஜிபி ரேம்

    16 ஜிபி மெமரி

    கூகுள் டிவி

    வாய்ஸ் ரிமோட்

    வைபை, ப்ளூடூத் 5

    3xHMDI, 2xUSB, S/PDIF, AV இன்புட், 1xஈத்தர்நெட்

    40 வாட் (2x20 வாட்) ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டிடிஎஸ், டால்பி ஆடியோ, டாால்பி அட்மோஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    தாம்சன் 65 இன்ச் டிவி விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 13 ஆம் தேதி துவங்கும் ப்ளிப்கார்ட் சம்மர் சேவிங் டேஸ்-இல் துவங்க இருக்கிறது.

    • ஐஃபால்கன் பிராண்டின் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டுள்ளது.
    • புதிய ஐஃபால்கன் ஆண்ட்ராய்டு டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டிசிஎல் நிறுவனத்தின் ஐஃபால்கன் பிராண்டு இந்திய சந்தையில் புதிதாக 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மூன்று புறமும் பெசல் லெஸ் டிசைன், வைடு வியூவிங் அனுபவம் வழங்குகிறது.

    மேலும் இதில் HDR, டைனமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் அல்காரிதம், 24 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாட் கோர் 64-பிட் பிராசஸர், G31MP2 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.

     

    ஐஃபால்கன் S53 அம்சங்கள்:

    32 இன்ச் 1366x768 பிக்சல் FHD LED ஸ்கிரீன், HDR 10

    குவாட்கோர் 64-பிட் பிராசஸர்

    G31MP2 GPU

    1 ஜிபி ரேம்

    8 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு டிவி 11

    வாய்ஸ் ரிமோட்

    வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0

    2x HMDI 2.0 (1xARC), 1x USB, S/PDIF

    AV இன்புட், 1x ஈத்தர்நெட்

    24 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டால்பி ஆடியோ

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐஃபால்கன் S53 32 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை, அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    • இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
    • இந்தியா பிரீமியம் ஸ்மார்ட் டிவி பிரிவில் சோனி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை கடந்த ஆண்டில் மட்டும் 28 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மூன்றாவது காலாண்டு வாக்கில் பண்டிகை காலத்தை ஒட்டி பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டதே விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என ஆய்வு நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்து இருக்கிறது.

    இதுதவிர குறைந்த விலையில் கிடைக்கும் பெரிய அளவிலான டிவி மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பும் விற்பனை வளர்ச்சிக்கு காரணம் ஆகும். டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் பண்டிகை கால விற்பனைக்கு பின் ஸ்மார்ட் டிவி விற்பனை வருடாந்திர அடிப்படையில் இரண்டு சதவீதமாக இருந்தது. 2022 ஆண்டு ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்துள்ளது. ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

     

    சியோமியை தொடர்ந்து சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் போன்ற பிராண்டுகள் வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அடுத்தத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டில் ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் பிராண்டுகள் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதுதவிர சோனி நிறுவனம் பிரீமியம் பிரிவில் பலரும் தேர்வு செய்யும் பிராண்டாக உள்ளது.

    2022 ஆண்டில் மட்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 99 சதவீத யூனிட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். சில பிராண்டுகளின் உயர் ரக ஸ்மார்ட் டிவி மாடல்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 96 சதவீதம் எல்இடி டிவிக்கள் ஆகும், இவற்றில் பெரும்பாலும் மீடியாடெக் சிப்செட்களே வழங்கப்பட்டுள்ளன.

    டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் சியோமி, சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் உள்ளிட்டவை ஸ்மார்ட் டிவி சந்தையில் 42.6 சதவீத பங்குகளை பெற்றுள்ளன.

    • ஏசர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 4K ரெசல்யுஷன் கொண்டுள்ளன.

    ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W சீரிஸ் 4K அல்ட்ரா HD QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய W சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஏசர் W சீரிஸ் 4K அல்ட்ரா HD QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன அம்சங்கள் உள்ளது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளன.

     

    இதில் உள்ள QLED பேனல் கச்சிதமான மற்றும் பிரகாசமான நிறங்களை வெளிப்படுத்துகிறது. ஏசர் W சீரிஸ் மாடல்கள் அசத்தலான டிசைன், ஃபிரேம்லெஸ், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே மூலம் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபுல் மோஷன் மெல்லிய வால் மவுண்ட் வழங்கப்படுகிறது. இது மெல்லிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

    புதிய ஏசர் டிவிக்களின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக சூப்பர் ஆண்டி-கிளேர் தொழில்நுட்பம் உள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும் காட்சிகளை தெளிவாக பார்க்க செய்கிறது. இத்துடன் குவாண்டம் பிக்சர் தொழில்நுட்பம், 4K HDR, HDR 10+ HLG, டால்பி விஷன், 100 சதவீத கலர் வால்யூம் கொண்ட QLED வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டிவிக்களில் 30 வாட் ஆரல் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு டிவி 11, கூகுள் ஆப்ஸ், ஃபார் ஃபீல்டு மைக், மோஷன் சென்சார் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியுடன் மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 55 இன்ச் மாடல் ரூ. 69 ஆயிரத்து 999 என துவங்குகிறது. ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 65 இன்ச் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய டிவி மாடல்களின் விற்பனையும் ப்ளிப்கார்ட், அமேசான் உள்பட முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • Vu நிறுவனத்தின் 2023 ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • புதிய ஸ்மார்ட் டிவி-க்களில் கூகுள் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்திய சந்தையில் முன்னணி டிவி உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் Vu டெலிவிஷன்ஸ் நிறுவனம் Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவை Vu GloLED டிவிக்களை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய மாடல்கள் ஆகும். புதிய ஸ்மார்ட் டிவிக்களில் மேம்பட்ட அம்சங்கள், பிரைட் ஸ்கிரீன் மற்றும் தலைசிறந்த சவுண்ட் வெளிப்படுத்துகின்றன.

    Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன்

    2023 Vu பிரீமியம் டிவி மாடல் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கின்றன. இவை அனைத்து விதமான அறைகளிலும் எளிதில் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் A+ கிரேட் 400 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல்கள், 50 வாட் சவுண்ட்பார் மற்றும் டால்பி ஆடியோ வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த டிவியில் மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன், முன்புறம் பார்த்த நிலையில், கீழ்புறத்தில் சவுண்ட்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஸ், வாய்ஸ் ரிமோட் உடன் கொண்டிருக்கிறது. Vu ஆக்டிவாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல்-இல் பில்ட்-இன் மைக்ரோபோன் உள்ளது. இது கூகுள் அசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.

    இத்துடன் புதிய ரிமோட் பிக்சர், சவுண்ட் உள்ளிட்டவைகளுக்கு ஹாட்கீ கொண்டிருக்கிறது. இதில் 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 4-கோர் சிபியு, சக்திவாய்ந்த ஜிபியு, 16 ஜிபி மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் அம்சங்கள்:

    மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன்

    43 இன்ச் மற்றும் 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K LED டிஸ்ப்ளே

    டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன், டைனமிக் காண்டிராஸ்ட், கேம் மோட்

    64 பிட் குவாட் கோர் பிராசஸர்

    2 ஜிபி ரேம்

    16 ஜிபி மெமரி

    கூகுள் டிவி

    ஆக்டிவாய்ஸ், ஹாட்கீ ரிமோட்

    வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0, 3x HDMI, 2x USB, S/PDIF, AV இன்புட், 1x ஈத்தர்நெட்

    50 வாட் அவுட்புட், டால்பி ஆடியோ

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் 43 இன்ச் மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் மாடலின் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது. ஆன்லைன் மட்டுமின்றி இவற்றின் விற்பனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் நடைபெறுகிறது. 

    • ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் ஃபயர் ஒஎஸ் 7 கொண்டிருக்கிறது.
    • இதில் ஃபயர் டிவி ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிக ஆப்களை வழங்குகிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஃபயர் டிவி ஒஎஸ் கொண்ட தனது முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. அமேசான் ஃபயர் டிவி ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி அமேசான் ஃபயர் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இதனுடன் அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் கொண்ட ரிமோட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் குரல் மூலமாகவே டிவியை இயக்கலாம்.

    புதிய ஸ்மார்ட் டிவியில் 32 இன்ச் HD ரெடி டில்ப்ளே, விவிட் பிக்ச்சர் என்ஜின் தொழில்நுட்பம், 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, DTS-HD மற்றும் DTS: விர்ச்சுவல் X தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அமேசான் ஃபயர் ஒஎஸ் 7 ஃபயர் டிவி ஆப் மூலம் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிக ஆப்களில் இருந்து பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகிறது.

     

    இவை தவிர பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ், யூடியூப் போன்ற முன்னணி தளங்களும் இந்த டிவியில் இயங்குகின்றன. அமேசான் மினிடிவியை ஸ்டிரீம் செய்வதோடு, 70-க்கும் அதிக லைவ் சேனல்களை கண்டுகளிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 இன்ச் அம்சங்கள்:

    32 இன்ச் 1366x768 பிக்சல் HD ரெடி டிஸ்ப்ளே

    விவிட் பிக்ச்சர் என்ஜின், ஆட்டோ லோ லேடன்சி மோட்

    1.5GHz குவாட்கோர் கார்டெக்ஸ் A35 பிராசஸர்

    மாலி G31 MP2 GPU

    1 ஜிபி ரேம்

    8 ஜிபி மெமரி

    ஃபயர் ஒஎஸ்

    ரெட்மி வாய்ஸ் ரிமோட்

    வைபை, 2x யுஎஸ்பி, 3.5mm ஆடியோ ஜாக்

    2x10 வாட் ஸ்பீக்கர்கள்

    டால்பி ஆடியோ, DTS-HD, DTS விர்ச்சுவல் X

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 இன்ச் மாடலின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 ஆகும். அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 11 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் அமேசான் மற்றும் Mi வலைத்தளங்களில் இந்த ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி டிவி விற்பனை மார்ச் 21 ஆம் தேதி துவங்குகிறது. 

    • புதுவை ஹெரிடேஜ் லேடிஸ் சர்கிள் மற்றும் டொயோட்டா அண்ணாமலைஸ் குரூப் சார்பில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் விழா நடைபெற்றது.
    • பள்ளிக் கல்வித் துறை 2-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சவுரிராயலு அரசு பெண்கள் பள்ளியில் புதுவை ஹெரிடேஜ் லேடிஸ் சர்கிள் மற்றும் டொயோட்டா அண்ணாமலைஸ் குரூப் சார்பில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் புதுவை ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் தலைவர் சுபாஷினி திலீப் மற்றும் பிரியா மனோஜ் பங்கேற்று டி.வி.யை வழங்கினர்.

    பள்ளிக் கல்வித் துறை 2-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    பொறுப்பாசிரியை கோமதி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் செய்திருந்தனர்.

    • வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் 24 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளன.
    • புதிய ஸ்மார்ட் டிவிக்கள் குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    அமெரிக்காவை சேர்ந்த நுகர்வோர் மின்சாதன நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் இந்திய சந்தையில் புதிதாக குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிஸ் பெயரில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் குவாண்டம் சீரிஸ் 55 இன்ச் மாடலும், Pi சீரிசில் 24 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் (24 இன்ச் HD டிவி மற்றும் 40 இன்ச் FHD டிவி)

    புதிய Pi சீரிஸ் 24 இன்ச் HD 1366x768 பிக்சல், 40 இன்ச் FHD 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, லினக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் இரு மாடல்களிலும் 512MB ரேம், 4 ஜிபி ரோம், 2 HDMI கனெக்டர்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் 24 இன்ச் மாடலில் டைப் 2 ஸ்பீக்கர்கள், 20 வாட் திறன் கொண்டுள்ளன. 40 இன்ச் மாடலில் 30 வாட் ஸ்பீக்கர்கள், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் மற்றும் டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் A35x4 பிராசஸர், A+ பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் HD ரெடி டிவி மாடலில் ஏராளமான செயலிகள் மற்றும் கேம்ஸ் உள்ளது.

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் அம்சங்கள்:

    24 இன்ச் 1366x768 பிக்சல் HD, 40 இன்ச் 1920x1080 பிக்சல் FHD

    A+ பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ்

    2x HDMI, யுஎஸ்பி

    24 இன்ச் மாடலில் 20 வாட் ஸ்பீக்கர்கள்

    40 இன்ச் மாடலில் 30 வாட் ஸ்பீக்கர்கள்

    டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்

    டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர்

    A35*4 பிராசஸர்

    கூகுள் பிளே ஸ்டோர் ஆப்ஸ்

     

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி குவாண்டம் 55 இன்ச் 4K UHD டிவி

    55 இன்ச் UHD 840x2160 பிக்சல் DLED ஸ்கிரீன்

    8 ஜிபி ரோம், 2 ஜிபி ரேம்

    3x HDMI, 2x யுஎஸ்பி

    40 வாட் ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி MS12

    DTS ட்ரூ-சரவுண்ட்

    டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்

    டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர்

    A35*4 பிராசஸர்

    கூகுள் பிளே ஸ்டோர் ஆப்ஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் 24 இன்ச் HD ரூ. 6 ஆயிரத்து 999

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் 40 இன்ச் FHD ரூ. 13 ஆயிரத்து 499

    வெஸ்டிங்ஹவுஸ் டிவி குவாண்டம் 55 இன்ச் UHD ரூ. 29 ஆயிரத்து 999

    புதிய வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை நாளை துவங்குகிறது. இவற்றின் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெற இருக்கிறது.

    ×