search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசர்"

    • கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
    • இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது.

    தைவான் நாட்டை சேர்ந்த 'ஏசர்' மற்றும் 'அசுஸ்' உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்நாட்டு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியில் இறக்குமதிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தைவானின் ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு உள்ளன. இதுகுறித்து ஏசர் தலைவர் ஜேசன் சென் கூறும் போது, "இந்தியாவில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்."

     


    "எங்களது ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அதிகப்படியான கம்ப்யூட்டர், லேப்டாப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்திய சந்தை மிகவிரைவாக விரிவடைந்து வருகிறது. ஆனாலும் இந்தியா கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது."

    "இந்தியாவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிளி உற்பத்தி மட்டுமே நடக்கிறது. எனவே புதிதாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். மேலும் நேரடியாக தொழில் தொடங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது."

    "இதன் காரணமாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏசர் மற்றும் அசுஸ் டெக் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

    • ஏசர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 4K ரெசல்யுஷன் கொண்டுள்ளன.

    ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W சீரிஸ் 4K அல்ட்ரா HD QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய W சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஏசர் W சீரிஸ் 4K அல்ட்ரா HD QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன அம்சங்கள் உள்ளது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளன.

     

    இதில் உள்ள QLED பேனல் கச்சிதமான மற்றும் பிரகாசமான நிறங்களை வெளிப்படுத்துகிறது. ஏசர் W சீரிஸ் மாடல்கள் அசத்தலான டிசைன், ஃபிரேம்லெஸ், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே மூலம் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபுல் மோஷன் மெல்லிய வால் மவுண்ட் வழங்கப்படுகிறது. இது மெல்லிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

    புதிய ஏசர் டிவிக்களின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக சூப்பர் ஆண்டி-கிளேர் தொழில்நுட்பம் உள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும் காட்சிகளை தெளிவாக பார்க்க செய்கிறது. இத்துடன் குவாண்டம் பிக்சர் தொழில்நுட்பம், 4K HDR, HDR 10+ HLG, டால்பி விஷன், 100 சதவீத கலர் வால்யூம் கொண்ட QLED வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டிவிக்களில் 30 வாட் ஆரல் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு டிவி 11, கூகுள் ஆப்ஸ், ஃபார் ஃபீல்டு மைக், மோஷன் சென்சார் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியுடன் மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 55 இன்ச் மாடல் ரூ. 69 ஆயிரத்து 999 என துவங்குகிறது. ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 65 இன்ச் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய டிவி மாடல்களின் விற்பனையும் ப்ளிப்கார்ட், அமேசான் உள்பட முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய ஆண்ட்ராய்டு டிவிக்களில் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு டிவிக்களும் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

    புதிய டிவி மாடல்களில் H சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவிக்களில் பிரீமியம் மெட்டல் பினிஷ், ஷெல் பாடி மற்றும் ஃபிரேம்லெஸ் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இவை மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வருகின்றன.


    இந்த டிவி-க்கள் நாட்டின் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள், நாடு முழுக்க சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவை 32 இன்ச் HD, 43 இன்ச் UHD, 50 இன்ச் UHD, 55 இன்ச் UHD மற்றும் 65 இன்ச் UHD டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட் புளூ லைட் ரிடக்‌ஷன், HDR 10+, HLG சப்போர்ட், சூப்பர் பிரைட்னஸ், பிளாக் லெவல் ஆக்மெண்டேஷன் என ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஏசர் அறிமுகம் செய்து இருக்கும் புதிய டிவி மாடல்கள் அறிமுக சலுகையாக சற்றே குறைந்த விலையில் விற்பனைக்கு வருகின்றன. அதன் பின் இவற்றின் விலை மாற்றப்பட்டு விடும். இவற்றின் விற்பனை முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் அதிக சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கின்றன.

    32 இன்ச் HD டிவி ரூ. 14 ஆயிரத்து 999

    43 இன்ச் UHD டிவி ரூ. 29 ஆயிரத்து 999

    50 இன்ச் UHD டிவி ரூ. 34 ஆயிரத்து 999

    55 இன்ச் UHD டிவி ரூ. 39 ஆயிரத்து 999

    65 இன்ச் UHD டிவி ரூ. 64 ஆயிரத்து 999

    ×