search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sirisena"

    இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. #MEA #SrilankaIssue
    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கினார். அவருக்குப் பதிலாக ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    அதிபர் தனது பதவியை பறிக்க அதிகாரம் இல்லை. நான்தான் இலங்கையின் பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். மேலும் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், சிறிசேனா அதிரடியாக நாடாளுமன்றத்தை முடக்கினார்.



    இந்நிலையில் அண்டை நாடான இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.


    மேலும், ‘‘ஜனநாயகம் மற்றும் நெருங்கிய அண்டையான நாடு என்ற வகையில், ஜனநாயகனம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயராக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
    ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்திய ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார். #Rajapaksa #Vaiko #MDMK
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத்தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது.

    குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இனப்படு கொலையில் கர்ப்பிணித் தாய்மார்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சித்ரவதை செய்து அழிக்கப்பட்டனர்.



    இந்த இனப்படு கொலையை இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்த ராஜபக்சே நடத்தியபோது, அதனைச் செயல்படுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேனா ஆவார். இருவருமே தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளிகள் ஆவார்கள்.

    2015 தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனா ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார். ஈழத் தமிழ் இனத்தையே கருவறுத்துப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் கொண்டவர்தான் ராஜபக்சே என்பதை மானத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    இலங்கை அரசியலில் நடைபெறுகிற சதுரங்கப் போட்டியில், சிங்கள அரசியல்வாதிகள் அனைவருமே ஈழத்தமிழ் இனத்தின் தனித்தன்மையை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டவர்கள்தாம்.

    மாலத்தீவு தேர்தலில் நடைபெற்ற அதிகார மாற்றத்தால் ஆத்திரமடைந்த சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஏற்கனவே அம்மன்தோட்டா துறைமுகத்தைப் பெற்றதோடு, மீண்டும் ராஜபக்சே கைகளில் அதிகாரம் வரவேண்டும் என்று திட்டமிட்டுக்காய் நகர்த்துகிறது.

    தமிழ் இனக்கொலையாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்ததும், மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

    இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் படி, ராஜபக்சே நியமனம் செல்லாது என்றும், தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறி இருக்கிறார். எது எப்படி இருப்பிலும் சிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் உண்மையாகும். #Rajapaksa #Vaiko #MDMK

    இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி அரசு தொடக்கத்திலிருந்தே மனித உரிமைக் கவுன்சிலிலும், ஈழத்தமிழர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுள்ள நிலையில் அதிபர் சிறிசேனா இரண்டு முக்கியமான அரசாணையை வெளியிட்டுள்ளார். #SriLankanPolitics #Rajapaksa
    இலங்கை:

    இலங்கை அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை அரசில் இருந்து சிறிசேனா கட்சி விலகியது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் நான்தான் இலங்கை நாட்டின் பிரதமர். என்னை நீக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை. தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்கரமசிங்கே அதிரடியான கூறினார்.



    இந்நிலையில் இன்று அதிபர் சிறிசேனா இரண்டு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளார். முதல் அரசாணையில் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார் என்றும், 2-வது அரசாணையில் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குழப்பமான நிலை அதிகரித்துள்ளது. #SriLankanPolitics #Rajapaksa

    இலங்கைக்கு நான்தான் பிரதமர், அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார். #ranilwickremesinghe #rajapaksa
    இலங்கை:

    இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ராஜபக்சே தோல்வியடைந்தார். இலங்கை விடுதலை கட்சி (SLFP),  ஒருங்கிணைந்த தேசிய கட்சி (UNP) இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார்.

    கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்செ கட்சி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிசோன கட்சி அரசில் இருந்து இன்று திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. உடனடியாக அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதனால் ரணில் விக்ரமசிங்கே தனது கட்சி ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இலங்கைக்கு நான்தான் பிரதமர். நான் பிரதமராக நீடிப்பேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்சேவே பிரதமராக நியமித்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது. இது ஜனநாயக விரோத சதி என்றார்.

    இதனால் இலங்கை அரசியலில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.  #ranilwickremesinghe #rajapaksa #sirisena
    ×