என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு நான்தான் பிரதமர்- என்னை நீக்க சிறிசேனாவிற்கு அதிகாரம் இல்லை- ரணில் அதிரடி
    X

    இலங்கைக்கு நான்தான் பிரதமர்- என்னை நீக்க சிறிசேனாவிற்கு அதிகாரம் இல்லை- ரணில் அதிரடி

    இலங்கைக்கு நான்தான் பிரதமர், அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார். #ranilwickremesinghe #rajapaksa
    இலங்கை:

    இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ராஜபக்சே தோல்வியடைந்தார். இலங்கை விடுதலை கட்சி (SLFP),  ஒருங்கிணைந்த தேசிய கட்சி (UNP) இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார்.

    கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்செ கட்சி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிசோன கட்சி அரசில் இருந்து இன்று திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. உடனடியாக அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதனால் ரணில் விக்ரமசிங்கே தனது கட்சி ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இலங்கைக்கு நான்தான் பிரதமர். நான் பிரதமராக நீடிப்பேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்சேவே பிரதமராக நியமித்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது. இது ஜனநாயக விரோத சதி என்றார்.

    இதனால் இலங்கை அரசியலில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.  #ranilwickremesinghe #rajapaksa #sirisena
    Next Story
    ×