search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand theft"

    ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டியில் மணல் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் மணல் திருடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவ்வப்போது அவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் திட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    இதனால் வைகையாற்று பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் நீர் ஆதாரம் குறைவதோடும், மண் வளம் சுரண்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (வயது24) மற்றும் மீராரு (28) மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.

    பழனி அருகே ஆற்றுப்படுகையில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியில் இருந்து வரதமாநதி செல்லும் பாதையில் சட்டப்பாறை ஆற்றுப்படுகையில் மணல் திருடப்படுவதாக ஆயக்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பழைய ஆயக்குடி 6-வது வார்டைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் திருடி கடத்த முயன்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அருண் குமாரையும், டிராக்டரை ஓட்டி வந்த 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (33) என்பவரையும் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அருகே மணல் கடத்தியது தொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் மாங்காய்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் லாரி டிரைவரான பெரம்பலூரை சேர்ந்த சிவபாலன்(வயது 34), கிளனர் கண்ணன்(44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து லாரி உரிமையாளரான சுரேஷ்(32) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமக்குடி அருகே அனுமதியின்றி மணலை திருடிச் சென்றது தொடர்பாக லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி அருகே பார்த்திபனூர்-நரிக்குடி விலக்கு ரோட்டில் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி உரிமையாளர் மோசுகுடி கிராமத்தை சேர்ந்த பாண்டி(வயது 36), சிவகங்கை மாவட்டம் கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    விழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    நேற்று இரவு விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது. இதையறிந்ததும் போலீஸ்காரர் ராம்குமார் என்பவர் அந்த லாரியை மறிக்க முயன்றார்.  அப்போது லாரி டிரைவர் போலீஸ்காரர் ராம்குமார் மீது லாரியை மோதுவது போல் வேகமாக வந்தார். திடுக்கிட்டு போன ராம்குமார் அங்கிருந்து விலகி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    பின்னர் போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் இருந்து விழுப்புரம் அருகே தில்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெளிணிகணேஷ் (வயது 37) காவணி பாக்கத்தை ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செளிணிது போலீஸ் காரர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற ராமச்சந்திரன், ஜெளிணிகணேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும் மணல் கடத்தல்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஒட்டன்சத்திரம் அருகே மணல் திருட்டு குறித்து புகார் அளித்த விவசாயி கடத்தப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டி துரையூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 48). விவசாயி. இவர் அந்த பகுதியில் நடந்த மணல் திருட்டுக்கு எதிராக அடிக்கடி மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார். மேலும் போலீஸ் நிலையத்திலும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்து வந்தார். இதனால் அவர் மீது மணல் கடத்தும் கும்பல் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துச்சாமி திடீரென மாயமானார். இது குறித்து அவரது உறவினர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் இடையகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதில் மணல் திருட்டு தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்துமக்களை திரட்டி போராட்டம் நடத்தியதால் அவரை யாரேனும் கடத்தி வைத்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துசாமியை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. #Sandtheft

    தேனி:

    கூடலூரில் தெற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் கூடலூர்-குமுளி மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது குருவனூத்து முல்லைப் பெரியாறு வண்ணாந்துறை ஆற்றில் இருந்து பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (வயது 48) என்பவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த டிராக்டரின் உரிமையாளர் கூடலூர் கே.கே.காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் (55) என்பதும் தெரிய வந்தது. போலீசார் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து பாண்டியன் மற்றும் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி பகுதியில் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி யாசிகா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஓடைப் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடி வந்த முத்துப்பாண்டி (42) என்பவரை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். #Sandtheft

    ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கொள்ளிடக்கரை பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோக்களில் மணல் கடத்தி வந்த அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த மகாராஜன் மகன் விஜய் (வயது 23), சங்கர் மகன் விக்னேஷ் (16) ஆகிய 2 பேரையும் கைது செய்து, சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வேளாங்கண்ணி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி அருகே உள்ள முப்பத்திகோட்டகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 2 டிராக்டர்கள் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தன. அவற்றை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முப்பத்திகோட்டகத்தில் உள்ள வெள்ளையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த கீழ்வேளூர் தாலுகா மோகனூர் கீழத்தெருவை சேர்ந்த ஜோதி மகன் தெட்சிணாமூர்த்தி (வயது32), திருப்பூண்டி வீரன் கோவில் தெருவை சேர்ந்த முத்தலீப் மகன் சாகுல்அமீது (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
    நூதன முறையில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 2 லாரிகள்-மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கல்லக்குடி:

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மந்திரிகுமாரி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் புதூர்பாளையம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிள் முன்னே வர அதைத்தொடர்ந்து 2 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. அந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 2 லாரிகளிலும் நூதனமுறையில் மணலை நிரப்பி அதற்கு மேல் செங்கற்களை அடுக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அப்போது ஒரு லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு லாரி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர், தஞ்சாவூர் சங்கர் திடலை சேர்ந்த கணபதி (வயது 40) என்பதும், அதில் வந்த தொழிலாளர்கள் திருவையாறு தாலுகா கண்டியூரை சேர்ந்த மணிவண்ணன் (46), நேதாஜி (22) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தது கண்டியூரை சேர்ந்த செல்லதுரை (40) என்பதும் தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. 
    காரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    காரையூர்:

    காரையூர் அருகே உள்ள அரசமலை பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அரசமலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
    மணல் திருட்டில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC #SandTheft
    மதுரை:

    தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் திருட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், பாண்டியராமன் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கு ஒன்றில், மணல் திருட்டு குறித்து புதிய உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிறப்பித்துள்ளது.

    அதன்படி, மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க கூடாது எனவும், அபராதம் கட்டிவிட்டு எடுத்துச் செல்லவும் அனுமதிக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாட்டு வண்டியாக இருந்தாலும் கூட, மாடுகளை மட்டுமே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வாகனங்களை ஒப்படைக்க கூடாது என, உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், மணல் திருட்டு மூலம் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகும் என வேதனை தெரிவித்துள்ளனர். #MaduraiHC #SandTheft
    ×