search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem District"

    சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் மழை தூறியபடியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வோர் அவதி அடைந்தனர். #Rain
    சேலம்:

    வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.

    கடந்த 18-ந் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதி வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது.இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள, வட தமிழகத்திலும் மழை பெய்தது.

    தற்போது அது வலுவிழந்து உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தம்மம்பட்டி, ஏற்காடு, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சாரல் மழையாக நீடித்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இன்று காலையும் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் மழை தூறிய படியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வோர் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காட்டில் 6.6, கரியகோவில் 5, வீரகனூர் 4.8, கெங்கவல்லி 3.4, ஆத்தூர் 3.2, எடப்பாடி 1, மேட்டூர் 0.5, சேலம் மாநகரில் 0.4 என மாவட்டம் முழுவதும் மொத்தமம் 34.9 மி.மீ. மழை பெய்துள்ளது.  #Rain
    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மேட்டூர், வீரகனூர், கரியகோவில், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மேட்டூர், வீரகனூர், கரியகோவில், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த மழையால் மேட்டூர் மசூதி தெருவில் 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செட்-டாப் பாக்ஸ்களும் சேதம் அடைந்தது.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காடு மலைப்பாதையில் பனி மற்றும் மேகம் சூழ்ந்த படி இருந்ததால் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 12.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வீரகனூர், கரிய கோவில், ஓமலூரில் 11, ஏற்காடு 8.6, கெங்கவல்லி 8.3, தம்மம்பட்டி, ஆத்தூரில் 6.4,சேலம் 6.2, பெத்தநாயக்கன் பாளையம் 4, ஆனைமடுவு 3, வாழப்பாடி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 90.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் (புதன்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்படுகிறது. எனவே, சேலத்தில் உள்ள அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுக்கடைகள், மது பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

    மேலும், அன்றைய நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறினார்.
    திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததன் எதிரோலியாக 2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
    சேலம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது.

    சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை மெரீனா பீச்சில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கு திரண்டனர்.

    சேலம் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மாநகர துணை செயலாளர் பழக்கடை வி.கணேசன் தலைமையில் திரண்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போல எடப்பாடி, மகுடஞ்சாவடி, மேட்டூர் புதுச்சாம்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    திருச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்றிரவு வந்த அரசு பஸ்சை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு சென்ற அரசு பஸ் நரசிங்கபுரம் பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் திடீரென கல் வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    இதே போல ஆத்தூர் அருகே உள்ள எடப்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.ஆத்தூர் பகுதியில் மேலும் 2 பஸ்களின் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்து ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செழியன் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டு விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு பஸ்களை எடுத்து சென்றனர். இதனால் நேற்றிரவு வெளியூர் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

    2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதே போல புறநகர் பகுதிகளான ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி என மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் ஓடாததால் அவசர தேவைக்கு கூட வெளியூர் செல்ல முடியாமல் பொது மக்கள் தவித்தனர். இதனால் ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் இருந்தது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ×