என் மலர்

  நீங்கள் தேடியது "Salem Collector"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக் மியூசிக்கை வெளியிட்ட மர்மநபர்கள் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார்கள் என சைபர் கிரைம் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #TikTak #SalemCollector
  சேலம்:

  சேலம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ரோகிணி. இவரது போட்டோக்களை வைத்து மர்ம நபர்கள் சிலர் சினிமா பாடல்கள் மூலம் டிக்-டாக் செயலியில் பதிவு செய்துள்ளனர்.

  இதில் கலெக்டர் ரோகிணியின் படங்கள் மற்றும் அவரது மகன் படங்களை சேர்த்த மர்ம நபர்கள் அதனை வாட்ஸ்-அப், பேஸ் புக், டிக்-டாக் மியூசிக், டுவிட்டர்களிலும் பதிவிட்டுள்ளனர்.

  இந்த படங்கள் வாட்ஸ்-அப், பேஸ் புக்கிலும் வேகமாக பரவியது. இதனை பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.  மேலும் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக் மியூசிக்கை தடை செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

  தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யும் பணியிலும் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். எப்படியாவது ஓரிரு நாளில் மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

  ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சியினர் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கலெக்டர் படத்தை டிக்-டாக் செயலியில் பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TikTak #SalemCollector

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் ரூ.138.39 கோடி மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #SalemCollector
  சேலம்:

  வேளாண்மை துறை மானியம் குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்ததாவது:-

  சேலம் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில் 161 நீர் வடிப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 72578 எக்டர் நிலப்பரப்பில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளில் நிலம் சமன்படுத்துதல், கல்வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை, கசிவு நீர்குட்டை அமைத்தல், தடுப்பணை கட்டுதல், பண்ணை உற்பத்தி பணிகளில் பழமரக்கன்றுகள் நடவு செய்தல், பண்ணைக்கருவிகள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளில் தையல் எந்திரங்கள் வழங்குதல், சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் ஆகிய 10,112 பணிகளுக்காக ரூ.56.10 கோடி செலவிடப்பட்டது.

  வோளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியில் இயங்கும் 5 எச்பி, 7.5 எச்பி மற்றும் 10 எச்பி திறனுடைய திறந்தவெளி கிணறு மோட்டார் பம்புகள் மற்றும் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்புகள் மாநில அரசின் நிதியிலிருந்து 40 சதவீதமும், மத்திய அரசின் நிதியிலிருந்து 20 சதவீதமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகத்தின் மூலம் 30 சதவீதம் என 90 சதவீதம் மானியமாகவும் விவசாயிகளின் பங்களிப்பு 10 சதவீதமுமாக இந்த மோட்டார் பம்புகள் வழங்கப்படுகிறது.

  வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக அனுமதிப்படும் மானிய தொகையாக 35 பிஎச்பி டிராக்டர் ரூ.63,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (3 எச்.பி. மேல்) ரூ.20,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (5 எச்பி வரை) ரூ.25,000 மானியமும், கலப்பை (5 எச்.பி) ரூ.19,000 மானியமும், கலப்பை (9 கொளு) ரூ.44,000 மானியமும், டிஸ்க் கலப்பைக்கு ரூ.44,000 மானியமும் உள்பட பல மானியமும் வழங்கப்படுகிறது.

  மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், செரி ரோடு, சேலம்1. என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். #SalemCollector
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் உபரி நீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி தே.மு.தி.க.வினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

  சேலம்:

  தே.மு.தி.க. உயர்மட்ட குழு உறுப்பினர் ஏ.ஆர். இளங்கோவன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

  மேட்டூர் அணை நிரம்பும் காலங்களில் அதன் உபரி நீரை கடலில் வீணாக கலக்க விடாமல் சேலம், நாமக்கல், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேக்கி வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்திட வேண்டும்.

  நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றில் இருந்து கால்வாய்கள் அல்லது மோட்டார் பம்ப் உந்து குழாய்கள் அமைத்து சரபங்கா நதி மற்றும் திருமணி முத்தாற்றில் இணைக்கலாம். மேலும் வசிஷ்ட நதியிலும் இணைக்கலாம். இதனால் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். உணவு உற்பத்தி பெரிய அளவில் பெருகும். வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்க முடியும். ஆகவே, சேலம் மாவட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பு திட்டத்தை அரசு நிறைவேற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  மனு கொடுக்கும்போது மாநகர், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சுபாரவி, அவைத் தலைவர் பூபதி, பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், அஷ்ரப் உள்பட பலர் உடனிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
  சேலம்:

  சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் (புதன்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்படுகிறது. எனவே, சேலத்தில் உள்ள அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுக்கடைகள், மது பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

  மேலும், அன்றைய நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
  சேலம்:

  சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

  8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். தலைவாசல் பகுதியில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிகள் மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வார வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம்  அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  இதற்கு கலெக்டர் ரோகிணி பதில் அளித்து பேசுகையில் ரேசன் அரிசி தரம் குறைவாக இருப்பது குறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
  ×